கால்நடை 477
போவிஸ் ஆ ஆகிய இருவகை நுண்ணுயிரியால் பாதிக்கப் படுகின்றனர். குறிப்பாக, பால் குடிக்கும் இளம் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதன் காரணம் பாலைச் சரியாகக் காய்ச்சாமல் குழந்தை களுக்குக் கொடுப்பதால் அதில் உள்ள நுண்ணுயிரி யால் பாதிக்கப்படுவதேயாகும் பெரியவர்களிடத்தில் இந்நோய் காணும்போது குறிப்பாக நுரையீரல் பாதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர் அடிக்கடி இருமுவதோடு சளியைக் கட்டி கட்டியாக வெளி மெலிந்து போவார். யேற்றுவார். நாளடைவில் உடல் நலம் குன்றி பின்பு இருமும்போது இரத்த வாந்தியும் ஏற்படுகிறது. இதைக் கொண்டு நோய் மிகவும் முதிர்ந்துள்ளது என அறியலாம். எக்ஸ் கதிர்ப்படம் எடுத்துப் பார்த்தால் நுரையீரலில் ஆங்காங்கே துளைகள் இருப்பது தெரியும். உடனே மருத்துவம் செய்து கொள்ளவில்லை எனில் இறக்க நேரிடும். இந்த நுண்ணுயிரி சாதாரணமாக நுரை யீரலையே தாக்கும். ஆனால் மூளை, எலும்பு. கல் லீரல், மண்ணீரல், சிறுகுடல். கருப்பை, மார்பகம் ஆகியவற்றையும் தாக்கும். இவற்றைத் தாக்கும் காலத்தில் அந்தந்தப் பகுதிகளைத் தாக்கிய அறி குறிகள் தென்படும். சான்றாக, சிறுகுடலைத் தாக்கி னால் உணவு உண்ணாமை, காய்ச்சல், நாளடைவில் இளைத்தல், இரத்தக் கழிவு ஏற்படுதல் ஆகியவை இருக்கும். மனிதருக்கு இந்நோய் பாதிக்கப்பட்ட உணவு வகைகளை உண்ணுவதன் மூலமும் நலமற்ற சூழ்நிலையில் வாழ்வதன் மூலமும் ஏற்படுகிறது. கால்நடைகளில், குறிப்பாகப் பசு இனங்களில் இ நோய் காணப்படுகிறது. பன்றி,ஆடு,மாடு,கோழி இவற்றிலும் இந்நோய் காணப்படுகிறது. நோயின் தாக்கம். நோய் நுண்ணுயிரிகள் உடலில் நுழைந்தபின்பு ஏற்படும் பாதிப்பானது மிகச் சிறு அளவே இருக்கும். சில நேரங்களில் தெரியாமலும் போகும். நோய் நுண்ணுயிரி நுரையீரல் மற்றும் பிற பகுதிகளில் சென்றடைந்த பின்பு இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் அதைச் சுற்றி வளைத்துக் கொண்டு காசநோய் நுண்ணுயிரியை வளரவிடாமல் எதிர்த்துப் போராடும். அப்போது திசுக்களில் சிறிய கட்டிகள் (tubercle) தென்படும். இந்நிலையை அடைய மூன்று வாரங்கள் உள்ள ஆகும். பின்பு கட்டிகளின் நடுப்பகுதியில் திசுக்கள் அழுகி வெள்ளை, சாம்பல் அல்லது மஞ்சள் கலந்த வெண்மை நிறத்தில் மாறும். அதே நேரத்தில் கட்டிகள் மேலும் வளராமல் இருக்க அதைச் சுற்றி நார்த்தசைகள் உண்டாகும். நடுவில் உள்ள திசுக்கள் அழுகிப் போகும்போது அவற்றில் சுண்ணாம்புச் சத்துச் சேர்ந்து சிறு, சிறு வெள்ளை நிறக் கடினமான கட்டிகளாக பாறும். காய்ச்சல் விட்டு விட்டு வருவதோடு அல்லா கால்நடை 477 மல் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அண்மையிலுள்ள நிணநீர்ச் சுரப்பி (lymph gland) வீங்கி இருக்கும். சில நேரங்களில் இவ்வகையான பாதிப்பு மனிதன் அல்லது கால்நடைகளில் நீண்டநாள்கள் வரை மிகுதியும் பரவாமல் காணப்படும். இதற்குப் பிரைமரி காம்ப்ளக்ஸ் என்று பெயர். பிறகு வேறு காரணங் களால் - சான்றாக. குழந்தை பிறத்தல், கன்று போடு தல். நோய்த் தாக்குதல் ஆகியவற்றால் உடல் பாதிக்கப்படும்போது நோய் நுண்ணுயிரி இரத்தம், நிணநீர்ச் சுரப்பி மூலம் பிற உறுப்புகளை அடைந்து, நோயின் தன்மையை அனைத்துப் பகுதிகளிலும் உண்டாக்குகிறது. இதைப் பொதுவான . காச நோய் (Generalised T.B) என்பர். இந்நிலை யில் உடல் நிலை பெரிதும் பாதிக்கப்பட்டு உடல் இளைக்கும். பின்பு நீண்ட நாள் துன்பமுற்று இறந்து போவர். நோய்க் கண்டுபிடிப்பு. இந்நோயைச் சாதாரண மாகப் பாதிக்கப்பட்டவர்கள் வெளிப்படுத்தும் அறி குறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.எ.கா : விட்டு விட்டுக் காய்ச்சல் வருதல், உணவு உண்ணுவதில் பாதிப்பு, நாளடைவில் உடல் இளைத்தல். எக்ஸ் கதிர்ப்படம் மூலமும் இந்நோய் இருப்பதைக் காண லாம். 72 காச நோய், நுண்ணுயிரியின் மூலம் கிடைக்கப் பெற்ற டூபர்குலின் என்னும் ஒரு நீர் மத்தைத் தோலினிடையே ஒரு சிறிதளவு செலுத்தி மணி நேரம் கழித்துத் தோலின் தடிப்பு அளவு எடுக்கவேண்டும். இம்மருந்து செலுத்துவதற்கு முன்பாகவும் தோலின் தடிப்பைக் கணக்கிட வேண்டும். நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் ஊசி போட்ட இடத்தில் சூடாகவும், வலிப்புடனும், நீர் கோத்து நன்றாக வீங்கியும் இருக்கும். அந்நிலையில் தோலின் தடிப்புத் தன்மையை அளந்து பார்த்தால் ஊசி போடுவதற்கு முன்பை விட 2 அல்லது 3 மடங்கு மிகுதியாக இருக்கும். இதனால் நோய் இருப்பது தெரியவரும். இவ்வாறு ஆய்வுசெய்த கால்நடைகளை இரண்டு மாதத்திற்குப் பின்பு மீண்டும் ஒரு முறை ஆய்வு செய்தால் முன்பு போலவே அறிகுறிகள் தென்படின் நோய் இருப்பது உறுதியாகும். நுண்ணுயிர்க் கருவி ஆய்வு (microscopical exami- nation). வெளியேற்றப்பட்ட சளியைக் கண்ணாடித் துண்டில் (microscopical slide) பதியவைத்துச் சீல்" நீல்சன் ஸ்டெயின் முறைப்படி செய்து நுண்ணோக்கி (microscope) மூலம் பார்த்தால் நீலத் திசுக்களுக்கு நடுவில் நீளமான சிவப்பு நிறமுடைய நுண்ணுயிர்கள் ஒருங்கிணைந்து காணப்படும். மெல்லிய வளர்ப்பு ஆய்வு (culture test). நோயால் பாதிக்கப் பட்ட பகுதியிலிருந்து சளி மற்றும் பிற பொருள் டார்ஸட் ஊடகத்தில் (Dorset medium) களை, 1