478 கால்நடை
478 கால்நடை செலுத்தி 38° வைத்து வளர்த்தால் மஞ்சள் நிறக் கூட்டுயிரிகள் தெரியும். உயிர் ஆய்வு.(biological test) நோயால் பாதிக்கப் பட்ட பகுதியிலிருந்து பெற்ற சளி மற்றும் பிற பகுதிகளிலிருந்து பெறப்படும் பொருள்களைக் கினிப் பன்றிகளில் செலுத்தினால் சில மாதங்கள் சென்ற பின் நோய் அறிகுறிகள் தெரியும். நோய்களிலிருந்து தெளிவுபடுத்துதல். ஜோன்ஸ் நோய், மைக்கோ பாக்டீரியம் ஜொமெனி (Mycobacte rium Jomeni) என்னும் நுண்ணுயிரிகளில் உண் டாக்கப்படுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்ட கால் நடைகள் வயிற்றுப்போக்கு மிகுதியாகி நாளடைவில் மெலிந்து, உடல் நலம் குன்றிப்போகும்; சிறுகுடலைச் சுற்றி உள்ள நிணநீர்க்கணு வீங்கியும் நீர் கோத்தும் இருக்கும்; பிற இடங்களில் எவ்வகைப் பாதிப்பும் இருக்காது. இந்த நிணநீர்க்கணுக்களை அறுத்துப் பார்த்தால் நடுப்பகுதி அழுகிப் போய் மஞ்சள், நிறத் தோடு இருக்காது. ஆக்டினோபாஸிலோஸீஸ் (Actinobacillosis). இந்த நோய் மாடுகளின் நாக்கில் சாதாரணமாகக் காணப் படும். பிற பகுதிகளில் அந்த அளவுக்குப் பாதிப்பு இல்லை. நிணநீர்க்கணுக்களை அறுத்துப்பார்த்தால் காச நோயில் காணப்படுவது போல, அதாவது நடுப் பகுதி அழுகி மஞ்சள் நிறமாக இருக்காது. நாடுளர் நெக்ரோஸிஸ் (nodular necrosis). இந் நோய் எந்தவிதத்தில் உண்டாகிறது என்று தெரிய வில்லை. சீழ்க்கட்டிகள் மாட்டின் வாயின் அடிப்புறத் தில் காணப்படும். பாதிக்கப்பட்ட அண்மையிலுள்ள நிணநீர்க்கணுவில் பாதிப்பு எதுவும் இருக்காது; மேலும் இந்தக் கட்டிகள் சதையில் காணப்படும். கோரினியம் பாக்டீரியம் நோய். இந்நோயால் உண்டாக்கப்படும் கட்டிகள் கோரினி பாக்டீரியம் ஈக்வி (Coirynebacterium equi) என்னும் நுண்ணு யிரால் ஏற்படுகின்றன. இதனால் உண்டாக்கப் பட்ட சீழ்க்கட்டிகள் சிறிதாயும் மஞ்சள் நிறமாகவும் அழுகியும் நார் அடைவுத் திசுக்கள் சூழ்ந்தும்காணப் படும். சில நேரங்களில் நிணநீர்க்கணுவைப் (lymph- node) பார்க்கும்போது காசநோயால் பாதிக்கப்பட உள்ளதா என்று அறியச் சீமைக் கண்ணாடித்துண்டில் (microscopical slide) எடுத்துப் பின்பு சீல் நீல்சன் சாயம் ஏற்றினால் இல்லாமை தெரியும். காசநோய் நுண்ணுயிர்கள் பன்றிகளின் புரூஸல்லா நோய், பன்றிகளின் தண்டு வடத்தில் சீழ்க் கட்டிகள் காணப்படும்: இதனால் பாதிக்கப்பட்ட பன்றிகள் எழ முடியாமல் நாய் நகர்வதைப் போல நகரும். காச நோயிலிருந்து இதைப்பிரித்துப்பார்க்கவேண்டும் எனில் எலும்புகளில் காச நோய்ப் பாதிப்பு ஏற்பட்டால் உடலில் உள்ள பகுதிகளிலும் அதன் பாதிப்புத் தெரியும்; ஆனால் இந்நோயில் பிற பகுதிகளில் பாதிப்பு இல்லை. காணலாம். நுரையீரலில் சீழ்க் கட்டிகள். சில நேரங்களில் துரையீரலில் சீழ்க் கட்டிகள் இருப்பதைக் காணலாம். இவற்றை அறுத்துப் பார்க்கும்போது அவற்றிலிருந்து வரும் சீழ் கெடுநாற்றத்துடன் உள்ளமையையும் கட்டிகள் நார் அடைவால் சூழப்பட்டிருப்பதையும் அருகிலிருக்கும் நிணநீர்க்கணுக்களில் காச நோய்க்கு உண்டான அறிகுறிகள் தோன்றா. பாதிக்கப்பட்ட மருத்துவம். நோயால் கால் ல் நடைகளைப் பொருளாதார முறையில் பார்க்கும் போது மருத்துவம் வீணானதாகும். ஆனாலும் விலை மதிப்பு உள்ள கால்நடைகளை ஸ்டிரெப்டோமைசின் சல்ஃபேட் (streptomycin sulphate) மருந்துகள் கொண்டு நலப்படுத்தலாம். தடுப்பு முறைகள். நன்முறையில் இருக்கும் கொட்டிலில் வைக்க வேண்டும். நோயுற்ற கால்நடை களைத் தனியாகப் பிரித்து மருத்துவம் அளிக்க வேண்டும். கொட்டிலை நுண்ணுயிர்க்கொல்லி தெளித் தும் தூய்மைப்படுத்த வேண்டும். நோயுற்ற கால் நடைகளை அவ்வப்போது ஆய்வுமூலம் கண்டுபிடித் துப் பண்ணையிலிருந்து நீக்கவேண்டும். புதிதாகச் சேர்க்கப்படும் கால்நடைகளை ஆய்வுக்கு உட்படுத்தி, பாதிப்பு ஏதும் இல்லை என்று தெரிந்தபின் பண்ணை பில் சேர்க்கவேண்டும். நோயுற்ற மனிதர்களைக் கால்நடைகளோடு பழகவிடக்கூடாது. அதுபோல் நோயுற்ற கால்நடைகளை மனிதர்களோடும்பழக விடக் கூடாது. நோயுற்ற கால் நடைகளைக் கொன்று எரித்துவிட வேண்டும். பாலை நன்றாகக் காய்ச்சிப் பயன்படுத்த வேண்டும். நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் சதை களில் நோயின் அறிகுறிகளோ நோய் உண்டாக்கக் கூடிய நுண்ணுயிர்களோ காணப்படுவதில்லை. ஆகையால் நோய்வாய்ப்பட்ட கால்நடைகளின் சதை உண்ணுவதற்கு முன்பாக அவற்றிலிருந்து எலும்பு மற்றும் பிற உறுப்புகளைக் கழித்து விட்டு வெறும் தசையை நன்றாக வேகவைத்துப் பின்னரே உண்ண வேண்டும். கே. மைதிலி களை ர எலும்பு முறிவு. எலும்பு அல்லது குருத்தெலும் பால் ஆகிய கெட்டியான உறுப்புகளில் ஏற்படும் பிளவுகள் எலும்பு முறிவு எனப்படும். . கால்நடைகளில் எலும்பு முறிவு ஏற்படக் காரணங் கள். சில எலும்புகள், வடிவம், இருப்பிடம், தன்மை, பணி இவற்றால் எளிதில் முறியும். சான்று: தோள் பட்டை எலும்பு. வழவழப்பான தரையுடைய கொட்டில்கள் மற்றும் சாவைகள். எலும்புகளைத் தாக்கும் சில நோய்கள். கணை (rickets), எலும்பு மெலிவு (osteo malacia), எலும்புப் புரை (osteoporosis). எலும்பழற்சி (osteitis), எலும்பு அழுகுதல் (necrosis), சொத்தை (caries), வயது முதிர்ச்சி.