480 கால்நடை
480 கால்நடை இருக்கும். இதை நோய்நிலையில் எலும்புச்சேர்க்கை (clinical union) என்று கூறுவர். இரண்டாம் நிலை இளவினை எலும்பு. எலும்பு. 4 ஆம் வாரத்திலிருந்து 8 ஆம் வாரத்திற்குள் இந்த நிலை ருவாகிறது. அறிகுறிகள். உருத்திரிபு எலும்பு முறிவால். எலும்புகள் உரிய இடத்திலிருந்து தள்ளிச் சென்று விடுகின்றன. இதனால் அடிபட்ட பகுதி உருமாறிக் காணப்படுகிறது. முறிவு ஏற்பட்ட இடத்தில் வீக்கம் ஏற்படுவதாலும் இந்நிலை ஏற்படக்கூடும். வலி. எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் வலி இருக்கும். வலி சிறிது நேரம் இருந்து பின் மறைந்து விடும். இந்த நேரத்தில் உடைந்த எலும்புகளைச் சேர்த்துக் கட்டுப் போடலாம். சிறிது நேரமே வலி யில்லாதிருக்கும். பின்னர் மீண்டும் வலியெடுக்கும். உடைந்த எலும்புகளைச் சேர்த்துக் கட்டுப்போட்ட பின் 24 மணி நேரம் கழித்து வலி மறைந்துவிடும். நோயால் ஏற்படும் எலும்பு முறிவுகளில் வலி தெரி யாது. உரசல் ஒலி, எலும்பு முறிவு ஏற்பட்ட இடத் தைத் தொட்டுப் பார்த்தால் உரசல் ஒலியை உணர லாம். பிற அறிகுறிகள். சில நேரங்களில் எலும்பு முறி வால் காய்ச்சல் இருக்கும்; சிறுநீரில் ஆல்புமின் மற்றும் கொழுப்பு இருப்பதையும் காணலாம். நோய் அறிமுறை. அறிகுறிகளைக் கொண்டு, எக்ஸ்கதிர்ப்படம் எடுத்து அதன் மூலம் அறியலாம். மருத்துவம் எலும்பு முறிவைச் சீராக்கல். உடைந்த எலும்புத் துண்டுகளை அதன் இயல்பான நிலைக்குக் கொண்டு வர வேண்டும். எலும்பு முறிவை நிலைப்படுத்துதல். பாதுகாப்பு (charge) வார்ப்பு (cast) அல்லது மூங்கில் சட்டங்கள் (splints) கொண்டு முறிவு ஏற்பட்ட இடத்தை அசை யாமல் இருக்கும்படிச் செய்யலாம். சப்பை எலும்பு களில் முறிவு ஏற்பட்டால் அலை அசையாமல் இருக் கப் பாதுகாப்புக் கட்டுப் பயன்படுத்தலாம். பொது வாக, பிச்சுக்கட்டியை உருக்கி முறிவு ஏற்பட்ட இடத்தில் சிறிது தடவி, பிறகு அதன் மேல் சிறு துண்டுகளாக வெட்டிய பஞ்சு அல்லது சணலைப் பரவ விட வேண்டும். இவ்வாறாக மாறி மாறி உருக் கிய பிச்சுக் கட்டியையும், சணலையும் கொண்டு முறிவு ஏற்பட்ட இடத்தை நிலைப்படுத்தலாம். பிச்சுக்கட்டி கிடைக்காவிட்டால் உளுந்து மாவு. முட்டை வெள்ளைக் கரு ஆகியவற்றைக் கலந்து முறிவு ஏற்பட்ட இடத்தை நிலைப்படுத்தலாம். முடிய முறிவு ஏற்பட்டால் மூங்கில் சட்டங்களைக் கொண்டு நிலைப்படுத்தி, கட்டி, பின்பு கோந்துக் கட்டுப்போட்டு முறிவு ஏற்பட்ட இடத்தை நிலைப் படுத்தலாம். மெல்லிய துணியைக் கோந்தில் அழுத்தி முறிவு ஏற்பட்ட இடத்தில் அழுத்தமாகச் சுற்றிக் கட்டுப்போட வேண்டும். பாரிஸ்காரை கொண்டும் கட்டுப்போடலாம். சட்டங்களைக் கொண்டு கட்டுப் போடும்போது முதலில் முறிவு ஏற்பட்ட இடத்தில் பஞ்சு சுற்ற வேண்டும். பிறகு 2 அல்லது 3 சட்டங் களை வைத்து அழுத்தமாகக் கட்டுப்போட வேண்டும். முறிவு ஏற்பட்ட இடத்தில் உள்ள இரண்டு மூட்டு களையும் சுட்டுப்போடும்போது சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் முறிந்த எலும்பை நன்கு நிலைப்படுத்த முடியும். சிக்கலான அல்லது பலவகைப்பட்ட முறிவுக்கு மருத்துவம் உடைந்த எலும்புகளுக்குத் தையல் போடுதல். எலும்பு களில் துளையிடும் கருவி கொண்டு சிறு துளைகளை இட்டு எஃகு கம்பி கொண்டு இறுக்கிக் கட்டலாம். உடைந்த எலும்புகளை மென்தகடுகள் மூலம் ஒன்று சேர்த்தல். விட்டிலீயம் எலும்புத்தகடுகளைக் கொண்டு உடைந்த எலும்புத்துண்டுகளை மரையாணி கொண்டு ஒன்று சேர்க்கலாம். ஊசிகொண்டு இணைத்தல். எஃகு ஊசிகள். கொண்டு எலும்புகளை இணைக்கலாம். பொதுவாக, தாடை, கால் எலும்பு, முன்கால் அடி எலும்பு ஆகியவற்றில் முறிவு ஏற்பட்டால் ஊசி மூலம் இந்த முறிவு சரிசெய்யப்படுகிறது. எலும்பு முறிவால் ஏற்படும் பின் விளைவுகள். சில சமயங்களில் முறிவு ஏற்பட்ட எலும்பின் அருகிலுள்ள நரம்புக்குப் பாதிப்பு ஏற்பட்டால் அப்பகுதி செயலி ழந்து போகக்கூடும். இரத்தக் குழாய்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டால் அப்பகுதிக்கு இரத்தம் ஓட்டம் இல்லாமல் போய்விடும். இதனால் பாதிக்கப்பட்ட பகுதி வளர்ச்சியின்றிச் சிறியதாகிவிடும். சரியாக எலும்பு முறிவை நிலைப்படுத்தாவிட்டால் எலும்புகள் ஒன்று சேரா. கால் தடுப்பு முறைகள். இளம் கால்நடைகளுக்கு நல்ல தீவனம் அளித்து எலும்பு நோய்களைத் தடுக்கலாம். தீவனத்தில் சுண்ணாம்புச் சத்தும், பாஸ்ஃபரஸ் சத்தும் உரிய அளவில் இருக்க வேண்டும். கொட்டில்களில் வழவழப்பான தரை இருக்கக்கூடாது; அது போலச் சாலைகளும் வழவழப்பாக இருக்கக் கூடாது. நடைகளைக் கீழே தள்ளும்போது மெதுவாகத் தள்ள வேண்டும். மணல் பரப்பில் தள்ளுவது சிறந்தது. கால் நடைகளைச் சிறு சந்து வழியாக ஓட்டிச் செல்லக் கூடாது. - எஸ்.டி. செல்வன் சுரல்நடைக்குறியிடுதல். கால்நடைப் பராமரிப்பில் குறியிடுதல் இன்றியமையாப் பணியாகும். அரசு