பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/501

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால்நடை 481

நிறுவனங்களில் பராமரிக்கப்படும் கால்நடைகள் மற்றும் அரசின் பல்வேறு நிதி உதவித் திட்டங்களின் கீழ் கால்நடை வளர்ப்போருக்கு வழங்கப்படும் மாடு கள் ஆடுகள் போன்ற பல்வேறு கால்நடைகள் ஆகிய வற்றுக்குக் குறியிடுதல் இன்றியமையாததாகும். அரசு கால் நிறுவனங்களில் பராமரிக்கப்படும் நடைகளுக்கு அவற்றின் எண்ணிக்கையைச் சரிபார்க் கும் பொருட்டும், குறிப்பிட்ட இனங்களின் காளை கள், கிடேரிகள், கன்றுகள் ஆகியவற்றை அடை யாளம் கண்டுகொள்வதற்கும், அவற்றின் வம்சா வழிப் பேரேடுகள் பராமரிப்பிற்கும் குறியிடுதல் பயன்படுகிறது. அடை பொது மக்களில் கால்நடை வளர்ப்போருக்கு வழங்கப்பட்டுள்ள கால்நடைகளுக்குக் குறியீடுதல், அவற்றைத் தாமே அடையாளம் கண்டுகொள்வதற் கும் பிறருக்கு நம்பிக்கையூட்டும் வகையில் யாளம் காட்டுவதற்கும், காப்பீட்டுறுதித் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள விவரத்தை அறிந்து கொள்வதற் கும். இன்னின்ன திட்டத்தின் கீழ் வழங்கப்பட் டுள்ளது என்பதை அறிவதற்கும். கால்நடை மேம் பாட்டு முனைப்புத்திட்டம் மற்றும் கேந்திரக் கிராமத் திட்டம் ஆகிய அரசின் பல்வேறு திட்டங்களின் செயற்கைமுறைக் கருவூட்டலின் பயனாக உற்பத்தி செய்யப்பட்ட கன்றுகளை னம் கண்டு கொள் வதற்கும் இன்றியமையாதது. மேலும் உயிரினக் காளைகளின் வழி கலப்பினப் பெருக்கம் செய்ததன் பயனாக உருவான பால் வள மிக்க, செயல்திறன்மிக்க கால் ல்நடைகளின் படிமலர்ச்சி யை ஆய்வு செய்யவும். மதிப்பீடு செய்யவும், திட்டத்தைத் தொடர வகை செய்யவும் குறியீடுதல் தேவையாகிறது. மேலும் வெக்கைநோய் போன்ற கடும் நோய்த் தடுப்பூசிகள் போடப்பெற்றுள்ள ஆடு, மாடுகளை அடையாளம் காணவும் பயன்படுகிறது. களவு போன மாடு ஆடுகளைக் கண்டுபிடிக்கவும் குறியீடு உதவும். எண் 9 குறியிடும் முறைகள் கால்நடை 481 குறியிடுதலுக்குப் பயன்படும் கருவி இரும்பு வரிசை (branding iron set) 0 முதல் 9 வரையிலும் A முதல் Z வரையிலுமான ஆங்கில எழுத்து வடி வங்களைக் கொண்டதாகும். அவற்றில் தேவையான வற்றை நெருப்பில் காய்ச்சிப் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு குறியிடும்போது கால்நடைகளைக் கயிற் கட்டி அவற்றின் கால்களைக் கட்டுதலும் இன்றியமையாததாகும். றால் மேற்குறிப்பிட்ட காய்ச்சிய இரும்புக் கருவி களால் குறியிடும்போது, தேவையான எண் அல்லது எழுத்து வடிவ எஃகுக் கருவியை ஆழ்சிவப்புத் தீச் சுடரில் காய்ச்சி அக்குறியை விலங்கின் தொடை களின் ஒன்றின் மீது மென்மையான அழுத்தத்தோடு ஏறத்தாழ மூன்று நொடி நேரம் வரையே பதிக்க வேண்டும். பதித்தபின் தோன்றும் புண்ணில், துத்த நாக ஆக்சைடு கலந்த கடுகு எண்ணெயைத் தடவி னால் புண்கள் ஆறும். எருமைகளுக்கு இம்முறையில் கொம்பில் குறியிடலாம். branding). வேதிக் கலவைக்குறி (chemical குறியிடுவதற்குரிய வேதிக் கலவை கடைகளில் கிடைக்கும். வேதிக் கலவைக் குறியிடுவதற்குத் தேவைப்படும் எஃகு குறி வடிவங்கொண்ட கருவியை வேதிக் கலவை மையில் தோய்த்து, வழியும் மையைத்துடைத்து விட்டு, கால்நடைகளின் உடலில் பதிக்க வேண்டும். அவ்வாறு பதிக்கும் குறிகளின் அளவு 2.5 செ.மீட்டர் அளவில், ஒரு குறிப்பிட்ட தொலைவிலிருந்தே பார்க்கும் அளவுக்குத் தெரிய வேண்டும். குளிர்ச்சியான குறியீடுகள் (cold branding). மேற்காணும் எஃகு கருவி வெப்பக் குறியிடுதல் வேதிக் கலவைக் குறியிடுதல் ஆகியவை கால்நடை களுக்குத் துன்பம் தருவதாலும், நோய்க் கிளர்ச்சி ஊட்டுவதாலும் அவற்றைத் தவிர்க் கும் பொருட்டு, கால்நடைகளுக்கு இதமான முறையில் வேதிக் கலவைக்குப் பதிலாக நீர்ம நைட்ரஜனைப் பயன்படுத்தி, மாடுகளின் உடலில் ஊறு விளைவிக்காமல் குறியீடுதல் நவீனப் படுத்தப்பட்டுள்ளது. அல்லது எழுத்துப்பதித்தல் (branding). பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கருவிகளைக் கொண்டு எண்கள், எழுத்துகள், சில குறிப்புகள் (designs) ஆகியவற்றைக் கால்நடைகளின் உடலில் பதித்தல், மாடுகள் எருமைகள் குதிரைகள் மற்றும் ஒட்டகங் களுக்கு, காய்ச்சிய அடையாளங்கள் கொண்ட எஃகு கருவிகளைக் கொண்டு குறியிடுதல் பொருத்த மாகும். குத்துமுறைக் குறியிடுதல் (tattooing). தோலில் கொண்ட குத்திப் (puncture) பதியும் வரிவடிவம் எஃகு தகடு அமைப்புகள் உண்டு. இவற்றின் வரி வடிவத்தின் மேலே (outline) கன்றுகளுக்கு ஓராண்டு வயதுக்குள் அடையாளம் பதித்தல் நலம். இவ்வாறு காய்ச்சிய இரும்பினால் எண்களோ, ஏனைய அடையாளங் களோ பதித்தலுக்கு வெயில் நாள்களையும்,பூச்சி கள் பரவாத நாள்களையும் தேர்ந்தெடுத்தல் நல்லது. அ.க.8- 31 இருக்கும். உட்பக்கம் இவற்றை மாட்டுக் பசை வண்ணப் காது மடல்களின் ரத்த நாளங்கள் அல்லது நரம்புகள் இல்லாத பகுதியில் இடுக்கியில் (forceps) பொருத்தி அவற்றை அழுத்திப்பதிக்கும்போது அவை கால்நடை களின் காதுப் பகுதியின் தோலில் ஊடுருவ, காது மடல்களின் சவ்வுப் பகுதியில் கரையாத பசை நன்கு ஒட்டிக் கொள்கிறது. இந்த அடையாளங்கள் கால்நடைகளில் தெளிவாகவும் நிலையாகவும் அமைந்