பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/502

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

482 கால்வட்ட நிலை

482 கால்வட்ட நிலை திருக்கும். புதிதாகப் பிறந்த கன்றுகளுக்கும் பன்றி களுக்கும் இம்முறை பொருத்தமாக இருக்கும். இந்த முறையில் குறியிடும் முன்பு, கால் நடைகளின் காது மடல்களின் உட்பகுதியைச் சோப்பு நீரால் கழுவித் தூய்மை செய்ய வேண்டும். சிறிய கால்நடைகள். உறுதியான நெகிழி அல்லது மெல்லிய அலுமினியம் போன்ற உலோகத் தகடு அழகிய சிறிய வடிவத்தில் வெட்டிக் எண்களைப் பதிவு செய்து பன்றிகள் இளங்கன்றுகள் களை கொண்டு அவற்றில் அவற்றை ஆடுகள் ஆகியவற்றின் காது மடல்களில் இடுக்கிகள் மற் மூலம் பொருத்தி விடலாம். இவற்றில் இருவகை உண்டு. ஒன்று தானே துளையிடும் றொன்று துளையிடாத வகை, வகை. துளையிடும் வகை எண் அல்லது அடையாளத் தகடுகளை நேரடியாகக் மடல்களில் பொருத்தி விடவாம். மற்றதை துளை இடும் கருவியைப்பயன்படுத்தி, துளை செய்த பிள் பொருத்த வேண்டும். காது 2 சோ.பாலகணபதி பயன்கள். கால்நடைகள் பல வழிகளில் உதவுகின் றன. அவற்றிலிருந்து கிடைக்கும் இறைச்சி, பால். எலும்பு, கொம்பு, மயிர், தோல், சாணம் முதலிய பொருள்கள் வாழ்க்கையின் அன்றாடத் தேவைக் கும், பொருளாதார மேம்பாட்டிற்கும் சிறப்பாக உதவுகின்றன. கால்நடைகளின் இறைச்சி பெரும்பாலோரின் உணவாக உள்ளது. இதில் புரதம் மிகுந்துள்ளது. மேலும் பாஸ்ஃபரசுடன் சிவ வைட்டமின்களும் உள்ளன. சிறப்பாகக் கல்லீரல், இதயம், சிறுநீரகம் ஆகிய உள்ளுறுப்புகளில் இரும்புச் சத்தும் வைட்ட மின்களும் மிகுதியாக உள்ளமையால் கால்நடை இறைச்சி சிறந்த உணவாகக் கருதப்படுகிறது. இவற் றுள் கல்லீரல் மிகச் சிறந்த உணவாகும். உடலுக்குத் தேவையான பல அமினோ அமிலங்கள் இறைச்சியில் உள்ளன. இறைச்சிப் புரதம் பலவிதங்களில் தாவரப் புரதத்தைவிடச் சிறந்ததாகக் கருதப்படுகிறது.தசை, கல்லீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகளின் வளர்ச்சிக் கும், உடல் நலத்திற்கும். இனப்பெருக்கத்திற்கும் தேவைப்படும் அனைத்து அமினோ அமிலங்களும் இறைச்சியிலுள்ளன. இறைச்சியில் கொழுப்பு மிகுதி யாகவும் ஸ்டார்ச் (கிளைகோஜென்) குறைவாகவும் உள்ளன. கொழுப்பிலிருந்து கிடைக்கும் ஆற்றல் உயர் அளவினதாகும். கொழுப்புக் குறைந்து ஸ்டார்ச் மிகையாக உள்ள பகுதி கல்லீரலாகும். விலங்கின் கொழுப்பு, சிறந்த உணவாகப் பயன் படுவதோடல்லாமல், மாட்டுக் கொழுப்பு, பன்றிக் கொழுப்பு ஆகியவை பல தொழில்களில் மிகவும் பயன்படுகின்றன. ஒலியோமார்கரின் (oleomargarine) என்னும் போலி வெண்ணெய் மாட்டுக் கொழுப்பி லிருந்து தயாரிக்கப்படுகிறது. மாட்டு இறைச்சியி லிருந்து இறைச்சிச் இறைச்சிச் சாறும் (meat juice) செய் கின்றனர். பால். இது சத்துள்ள உணவுப் பொருள்களில் முதன்மையானது. காண்சு: பால். மயிர். கால்நடைகளில், சிறப்பாகச் செம்மறியாடு களிலிருந்து கிடைக்கும் மயிர் மிகவும் பயனுள்ளதா கும். ஆடுகளின் தரத்தையும் வளர்ப்பு முறைகளை யும் பொறுத்து மயிரின் தரமும் நிறமும் அமையும். ஐரோப்பிய ஆடுகளின் மயிர் இந்திய ஆடுகளின் மயிரை விடத் தரத்திலும் நிறத்திலும் உயர்ந்தது. மெல்லிய ஆட்டு மயிரால் உடைகளும், விரிப்புகளும் தயாரிக்கப்படுகின்றன. முரட்டு ஆட்டு மயிரால் கம்பளிகளும். பெரிய தரை விரிப்புகளும் செய்கின் றனர். கம்பளியைக் குளிர்மிகுந்த நாடுகளில் பெரிதும் பயன்படுத்துவர். மென்மயிர். பழங்காலத்தில் பாரசீகத்திலிருந்து பிற நாடுகளுக்குக் கொண்டு வரப்பட்ட செம்மறி யாட்டின் மயிர் ஆழ்ந்த கறுப்பாகவும் முரடாகவும் இருக்கும். குட்டி ஆட்டின் மயிர் மென்மையாகவும் கறுப்பாகவும் சுருண்டும் இருக்கும். பார்வைக்குப் பள பளப்பாகவும் இருக்கும். இதனால் குட்டி பிறந்த வுடன் அதைக் கொன்று தோலை மயிருடன் உரித்துப் பதப்படுத்தி அவற்றைப் பெண்களணியும் அங்கிகள். ஆடைகள் தயாரிக்கப் பயன்படுத்துவர். இதற்குச் செலவு மிகுதியாவதால் விலையும் மிகுதி. செம்மறியாட்டின் மயிரில் கொழுப்பு 40%-50% இருக்கும். இதை வேதி முறையில் பிரித்துத் தூய்மைப் படுத்தி லானோலின் என்னும் பொருள் தயாரிக்கப் படுகிறது. இது விலை மிகுந்தது. இதிலிருந்து கிரீம் (cream) போன்ற ஒப்பனைப் பொருள்களும், சில மருந்து வகைகளும் செய்கின்றனர். சாணம். கால்நடைகளின் சாணம் உரங்களில் மிகவும் சிறந்தது. பயிர்களுக்கு வேண்டிய நைட்ரஜன், பாஸ்ஃபரஸ், கால்சியம் ஆகிய வேதிப்பொருள்கள் உள்ளன. தற்போது இது எரிவளிமம் உற்பத்திக்கும் பயன்படுத்தப்படுகிறது. இவையன்றிக் கொம்பு, குளம்பு, எலும்பு முதலி யவை சீப்பு. கைவினைப் பொருள்கள் போன்றவை செய்யவும். சுரப்பிகளின் நோய்தீர்க்கும் மருந்து செய்யவும், தோல் செருப்பு, தவில், மேளம் முதலி யவை செய்யவும் உதவுகின்றன. கால் வட்ட நிலை கால் வட்டமாகத் - பா. நாச்சி ஆதித்தன் திசைமாறும் கணியங்களைச் சைன் அலைகளால் குறிக்கலாம். சைன் அலைகளைச்