490 கால்வாய்
490 கால்வாய் .6° Ab B 8. 0.0 0. 16.0 D 1.0·00°00 .50°0.00 B b 4 படம் 1. (இ) மேற்பூச்சு உள்ள கால்வாய் (ஈ) கீழ்மட்ட நீர் மேற்பூச்சுள்ள கீழ்மட்ட நீர் இல்லாதது (1) ஈரமான பகுதி (2) தொடக்க நீர்மட்டம் (3) முதல்கட்ட இறுதியில் நீர்க்கசிவு பரவும் எல்லை (4) சொட்டு விழும் பாய்வு கணக்கிடலாம். கால்வாயின் ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்குக் கால்வாய் வெளியேற்ற அளவில் Q சதவீதத்தில் கொடுக்கப்படுகிறது. இலேசாக நீர் ஊடுருவும் மண்களில் செல்லும் கால்வாய்களில் 41 = 3.4/Q°· ; ஓரளவு நீர் ஊடுருவும் மண்ணில் 1.9/Q°*, கடினமான நீர் ஊடுருவாத மண்ணில் q, = 0.7/Q கால்வாயிலிருந்து ஏற்படும் நீர்க்கசிவை, கால் வாயின் பரப்பில் நீர் புகாத அடுக்கைச் சுற்றளவில் அமைப்பதன் மூலம் தடுக்கலாம். இதை ரண்டு வழிகளில் அடையலாம். நீர் ஊடுருவாத கால்வாயின் படுகை மற்றும் பக்கங்களை வெளிப் பொருள் களைக் கொண்டு மேற்பூச்சுச் செய்வதன் மூலமாகத் தடுக்கலாம். கால்வாயில் எடுத்துச் செல்லும் நீரிலுள்ள மிதக்கும் நுண் துகள் பொருள்கள் இயற்கையாகவே கால்வாயின் படுகை மண்ணில் உள்ள சிறிய ஓட்டை களை அடைத்துவிடுகின்றன. செயற்கையாக களிமண் மற்றும் நுண்துகள் பொருள்களை நீரில் கலந்து, கலங்கிய நீரைக் கால்வாயில் விடுவதன் மூலமாகக் கால்வாய்ப் படுகையின் படிவத்தை அடைக்க இயலும். செயற்கை அழுத்தத்தின் மூல மாகக் களிமண் மற்றும் உதிரியான மண்ணின் நீர் ஊடுருவும் தன்மையைப் பெரும்பான்மையாகக் குறைக்க இயலும். செயற்கை முறையில் படுகைப் பொருள்களை உப்பாக்கலின் மூலமாகவும் குறைக்கலாம். இளக்கப் பட்ட மண்ணில் உப்புகளை (GT. SIT. கால்சியம் குளோரைடு, சோடியம் குளோரைடு) ஒரு மீட்டருக்கு 3-5 கிலோ வரை சேர்த்து அனைத்தை சதுர யும் உருட்டலின் மூலம் நீர்ஊடுருவும் திறனை 9-10 மடங்கு வரை குறைக்க இயலும். கால்வாய்களில் மேற்பூச்சு. அனைத்து மேற்பூச்சு களும் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்படுகின்றன. பாதுகாப்பு மேற்பூச்சு என்பது படுகை அரிப்பையும் மிதக்கும் பொருள்கள் கரைகளில் மோதுவதால் ஏற் படும் அழிவையும் தவிர்க்க அமைந்தது. இதில் தளம் மற்றும் வலிவூட்டப்பட்ட கற்காரைப் பலகை ஆகி யவை அடங்கும். நீர் ஊடுருவலைத் தடுக்கும் மேற் பூச்சு என்பது நீர் ஊடுருவுவதைக் குறைக்கும் நோக் கில் அமைந்தது. இதில் களிமண் மற்றும் மண்வகைத் திரைகள், பல்லுறுப்பிப் பொருள்களாலான படலங் கள், நிலக்கீல், தார்ப் பூச்சுகள், கற்காரை மற்றும் வலிவூட்டப்பட்ட கற்காரைப் பூச்சுகள் மற்றும் செங் கற்களால் அமைக்கப்படும் பூச்சுகள் ஆகியவை அடங்கும். மேற்பூச்சுச் செய்வதால் ஏற்படும் பயன்கள். நீரிழப்பு ஏற்படுவதிலிருந்து பெருமளவில் தடுக்கிறது; குறைந்த அளவிலான பேணும் செலவு; கால்வாய்களைப் பயன் படுத்துபவர்களால் ஏற்படும் நீர்த் திருட்டைத்தடுக்க முடிகிறது; நீர்ப்பெருக்கினால் கால்வாய்களின் அருகி லுள்ள நிலங்களில் நீர் சூழ்ந்து அந்த நிலங்களின் நீர் மட்டம் உயருவதன் மூலம் பயனற்ற நிலங்களாக மாறுவதிலிருந்து தடுக்கிறது; நீர்ப்பாசிகள் வளரு வதைத் தடுக்கிறது; கால்வாய்களில் கரை அரிப்பு மற்றும் கரை உடைப்பு ஏற்படுவதைக் குறைக் கிறது; மேற்பூச்சு உள்ள உப்பு நிலங்களில் செல்லும் கால்வாய்களின் உப்பு உறிஞ்சும் தன்மையைத் தடுக் கிறது. நீர்ப்பாசனக் கால்வாய்கள். ஒரு நீர்ப்பாசனக் கால்வாயின் பாய்வு விரைவானது. கால்வாயின் கரை