492 கால்வாய்
492 கால்வாய் யிலிருந்து 5.4e/ நொடி வரை இருக்கும். சில நிலைமைகளில் குறைவான விரைவுகளால் கால்வா யின் அளவைக் குறைக்க, கற்காரை மேற்பூச்சைப் பயன்படுத்தினாலும் 5.4மீ/நொடிக்கு மேல் உள்ள விரைவுகளில் செவ்வக வடிவு கொண்ட கற் காரை மேற்பூச்சுக் கொண்ட கால்வாய்களே பயன் படுத்தப்படுகின்றன. வடிகால் கால்வாய்கள், சுற்றுப் புற நிலங்களிலிருந்து வரும் வடிகால் வசதிக்காக ஆழமாகத் தோண்டப்படுகின்றன. அவை பொது வாகக் குறைந்த அளவிலான சரிவையும் குறைந்த ஆழமுள்ள நீரோட்டத்தையும் கொண்டிருக்கும். கலம் செலுத்தும் கால்வாய்கள் மற்றும் கால் வாயாக்கப்பட்ட ஆறுகள். கலம் செலுத்தும் கால்வாய் கள் படகுகள், தோணிகள் அல்லது கப்பல்கள் செல்லக்கூடிய உள்நாட்டு நீர் வழிகளாகும். ஒரு கால்வாயாக்கப்பட்ட ஆறு என்பது ஒன்று அல்லது பல தடுப்புச் சுவர்கள் அல்லது வழிந்தோடும் அணைகள் (overflow dams) ஆகியவற்றின் கட்டு மானங்களின் மூலம் கலஞ்செல்லத் தேவையான அளவு ஆழமுள்ளதாகச் செய்யப்படுவதாகும். கலங் கள் உயரமான அல்லது தாழ்வான நீர் மட்டத்திற்குச் செல்லுமாறு கலஞ்செலுத்தும் கால்வாய்களை ஏற்றவற்ற மற்றும் கால்வாயாக்கப்பட்ட ஆறுகளில் மட்ட இணைப்புக் கால்வாய் (lock) என்ற அமைப் பைக் கட்டுவதன் மூலமாகச் செயல்படுத்தலாம். கலம் செலுத்தும் கால்வாய்கள் கால்வாயாக்கப்பட்ட ஆறுகளின் பகுதிகளின் நெடுகிலும் அல்லது அம்மாதிரி யான இரண்டு ஆறுகளை இணைக்குமாறு அமைக்கப் பட்ட இடங்களிலும் கட்டப்படுகின்றன. இரண்டு ஏற்றவற்றத்திற்குரிய (tidal) நீர்நிலைகளை ணைக் கும் கடல்மட்ட, கலீம் ஓடும் கால்வாய்கள் ஏற்ற வற்ற ஓட்டத்தை (tidai flow) அனுமதிக்கும் இடத் தில் மட்ட இணைப்புக் கால்வாய் அமைப்புகளைத் தவிர்க்கப் போதுமான ஆழமுள்ளதாக வெட்டப்படு கின்றன. அளவுகள் கலங் சுலம் செலுத்தும் கால்வாயின் முதன்மையாகக் கால்வாயைப் பயன்படுத்தும் களின் அளவைப் பொறுத்தும் கண்டுபிடிக்கப்படு கடந்து உள்ள கின்றன. அனைத்துச் செயல்படும் நிலைமைகளிலும் அடிமட்ட இடைவெளி போதுமான அளவு வாறு ஆழம் இருக்கவேண்டும். கலங்கள் ஒன்றை யான்று பாதுகாப்பாகக் செல்லுமாறு அகலம் இருக்கவேண்டும். இக்கால்வாயின் குறுக்கு வெட்டு, பொதுவாக சரிவகமாக, பக்கச்சரிவு 1.5:1 இலிருந்து 3:1 அல்லது கரைகளின் கட்டுமானப் பொருளின் நிலையான தன்மையைப் பொறுத்து மேலும் மட்டமாக இருக்கும். பாறைகளில் வெட்டப் பட்ட கால்வாயின் பக்கங்கள் நேர்குத்தாகவோ, ஏறத்தாழ நேர்குத்தாகவோ இருக்கும். சில கலம் செலுத்தும் கால்வாய்களின் மண்கரைகளை அலைச் செய்கையால் (wave action) ஏற்படும் அரிப்பி லிருந்து தடுக்கப் பாறைகளின் துண்டுகள் அல்லது அதைப் போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் நீர் மட்டத் தின் அருகில் அமைக்கப்படுகின்றன. மேல் மட்ட இணைப்புக் கால்வாய் வழிகள். பக்கப் பாய்வுமுனை மற்றும் கீழ்ப்பக்கப் பாய்வு முனைகளில் திறப்புகளுடன் கூடிய ஒரு தடுப்பறை (chamber) அமைக்கப்பட்டிருக்கும். இத்தடுப்பிற்குள் இருக்கும் நீரைப் பயன்படுத்தி ஒரு கலத்தை உயர்த்தியோ தாழ்த்தியோ ஒரு மட்டத்திலிருந்து வேறொன்றுக்கு மாற்றலாம். இணைப்புக் கால்வாய் வழிகளின் சுவர்களிலும் அடியிலும் அமைக்கப்பட்ட கட்டுப்பாட்டிதழ்களின் (valve) மூலமாக இத்தடுப்பிற் குள் நீரை நிரப்பவும் காலி செய்யவும் முடிகிறது. ஒரு கலம், மட்ட ணைப்புக் கால்வாய் வழியில் நுழைந்தவுடன் அதன் பின்னால் உள்ள திறப்பு மூடப்பட்டு நீரை வெளியேற்றும் கட்டுப்பாட்டிதழ் களை இயக்குவதன் மூலம் நீரின் மட்டம் குறைக்கப் படுகிறது. (கீழ்ப்பக்கப் பாய்வுப் பகுதியில் கலம் செல்லவேண்டி இருந்தால்) அல்லது நீரின் மட்டம் நீர் நிரப்பும் கட்டுப்பாட்டிதழ்களை இயக்குவதன் மூலம் உயர்த்தப்படுகிறது (கலம் மேல்பக்கப் பாய்வுப் பகுதியில் செல்ல வேண்டியிருந்தால்). தடுப்பறையில் உள்ள நீரின் மட்டம் கலத்தின் முன்னால் உள்ள நீர்மட்ட அளவிற்கு வந்தவுடன் முன்னாலுள்ள திறப்புகள் திறக்கப்பட்டு, கலம் மட்ட இணைப்புக் கால்வாய் வழியை விட்டு வெளியேறுகிறது. மட்ட இணைப்புக் கால்வாய் வழியின் மிகைப் படியான உந்தானது, மேல்பக்கப் பாய்வில் உள்ள நீரின் மட்டத்திற்கும் தாழ்வான நீரின் மட்டத்திற் கும் இடையேயுள்ள குத்து உயரமாகும். தாழ்வான உந்துயரம், வடிவமைக்கும் சிக்கலை எளிதாக்குகிறது. ஆனால், பொதுவாகப் பெரிய அளவிலான நீர்வழியை உருவாக்குவதில் சில உயரமான உந்தைக் கொண்ட மட்ட இணைப்புக் கால்வாய் வழிகள் அமைப்பது சிக்கனமானதாக இருக்கும். மட்ட ணைப்புக் கால் கால்வாய்களில் வாய் வழி உந்துகள் ஏற்றவற்றக் ஒரு சில மீட்டரிலிருந்து 30 மீட்டருக்கும் மேலாக வேறுபடும். மட்ட இணைப்புக் கால்வாய் வழியின் அகலங்கள் மீட்டர் வரையிலும், பயன் படுத்தும் நீளம் 120-366 வரையிலும் வேறுபடும். சிறிய கலங்களுக்கான போக்குவரத்தை மட்டும் கொண்டுள்ளவையில் சிறிய அளவிலான மட்ட இணைப்புக்கால்வாய் கின்றன. 17-34 மீட்டர் வழிகள் பயன்படு மு.புகழேந்தி நூாலாதி.S.K.Garg, Irrigation Engineering And Hydraulic Structures, Seventh Edition, Khanna Publishers, New Delhi, 1987.