பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/514

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{rh|494 கால்வாய்க்‌ கதிர்கள்‌||

494 கால்வாய்க் கதிர்கள் தனிமங்களை நிரப்பு ஓரளவு நேர்மின் கதிர்களை உண்டாக்கினார். அக்கருவியில் எதிர்மின் முனையாக ஒரு குழிந்த அலுமினியத் தகடு வைக்கப்பட்டது. அதன் மையத்தில் ஒரு துளை இருந்தது. ஒரு பக்கக் குழாயில் வைக்கப்பட்ட அலுமினியக் கம்பி நேர்மின் முனையாகச் செயல்பட்டது. எதிர்மின் முனையி லிருந்து வெளிப்படும் செறிவு மிக்க எதிர்மின்முனைக் கதிர்கள் மின்னிறக்கக் குழாய்களின் சுவரைத் தாக்கி உருக்கிச் சிதைத்து விடாமல் தடுப்பதற்காக எதிர் மின்முனைக்கு எதிர் முனையில் ஒரு சிலிக்கா குமிழ் பொருத்தப்பட்டிருந்தது. ஆய்வுக்குரிய வளிமத்தை மின்னிறக்கக் குழாய்க் குள் செலுத்துவதற்காக எதிர் மின்முனையின் அருகில் ஒரு குறுகலான துளையிடப்பட்டிருந்தது. மின்னிறக்கத்தை உண்டாக்க ஒரு வலிமைமிக்க தூண்டு சுருள் பயன்படுத்தப்பட்டது. இக்கருவி 2000-50000 வோல்ட் வரையான மின்னழுத்தத்தில், 0.5-1.0 மில்லி ஆம்பியர் வரையான மின்னோட்டத் தில் சிக்கலின்றிச் செயல்பட்டது (படம் 2 ) பின்னர் ஆஸ்ட்டன் ஓர் அரை கோள வடிவமுள்ள அலுமினியக் கட்டியை எதிர்மின் முனையாகப் பயன்படுத்தினார். உயர்ந்த உருகுநிலை அல்லது கொதிநிலையுள்ள திண்மங்கள் ஒரு சிறிய கண்ணாடி வாளியில் வைத்து மின்னிறக்கக் குழாயுள் இறக்கப் பட்டன. அங்கு அவை எதிர்மின்முனைக் கதிர்களின் பெருஞ்சூட்டினால் ஆவியாக்கப்பட்டன. பின்னர் கோள வடிவ மின்னிறக்கக் குழாய்களுக்குப் பதிலாக உருளை வடிவக் குழல்கள் பயன்படுத்தப்பட்டன. அவற்றில் எதிர்மின்முனைக்கு எதிர்ப்புறமிருந்த முனைகள் கூம்பு வடிவாக்கப்பட்டிருந்தன. அவற்றில் உயர் அழுத்தங்களைப் பயன்படுத்த முடியும். திண்ம நிலையில் மட்டுமே இருக்கும் பொருள் சுளை ஆராய அவற்றை நேர்மின்முனையிலேயே வைக்கும் முறை கையாளப்பட்டது. அப்போது கால் வாய்க் கதிர்கள் நேர்மின்முனையிலிருந்தே வெளிப் படும். இதன் காரணமாக நேர்மின் கதிர்கள் நேர் படம் 2 படம் 3