பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/515

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால அளவி 495

கால அளவி 495. மின்முனைக்கதிர்கள் எனவும் குறிப்பிடப்படும். இவ் வாறு இரண்டு வகை நேர்மின்முனைகள் பயன் படுத்தப்படுகின்றன. சூடான நேர்மின்முனை என் பதில் ஆய்வுக்குரிய உலோகத்தின் உப்பு ஒரு பிளாட்டினத் தகட்டில் பூசப்பட்டு அந்தத் தகடு மின்னோட்டத்தால் சூடாக்கப்படும். இவ்வகையான நேர்மின்முனை, எதிர்மின்முனைக்கு அருகிலேயே ஏறத்தாழ ஒரு செண்ட்டிமீட்டர் தொலைவிலேயே பொருத்தப்பட்டிருக்கும். இத்தகட்டை இளம் சிவப்பு நிறத்துக்குச் சூடாக்கிக் குமிழுக்குள் வளிம அழுத் தத்தைப் பெருமளவில் குறைத்தால் நேர்மின்முனைத் தகட்டின் பரப்பிலிருந்து நேர் அயனிகள் வெளிப்படு கின்றன. இத்தகைய நேர்மின்முனையில் பூசப்படுகிற உப்பு விரைவாக மறைந்து விடுவதால் அடிக்கடி நேர்மின்முனையை மாற்ற வேண்டியிருப்பது முறையின் ஒரு முக்கியமான குறையாகும். ஒரு கூட்டு நேர்மின்முனை (composite anode) முறை யில் ஆய்வுக்குரிய தனிமத்தின்உப்பு கிராஃபைட்டுடன் சுலந்து பசையாக்கப்படுகிறது. அந்தப் பசை சிறிய எஃகு தண்டின் முனையிலுள்ள ஒரு துளையில் அடைக்கப்பட்டு அந்த எஃகு துண்டு நேர்மின்முனை யாகப் பொருத்தப்படும். எதிர்மின்முனக்கதிர்கள் அதன் மேல் படும்போது அது சூடாகும். பகுப்பாய்வு. ஜே. ஜே. தாம்சன் நேர்மின்முனைக் கதிர்களின் மேல் ஒன்றுக்கொன்று இணையான காந்தப் புலங்களையும், மின் புலங்களையும் சேர்ந் தாற் போலச் செலுத்தி அக்கதிர்களை ஒளிப்படத் தகடுகளின் மேல் விழச்செய்தார் (படம்-3). வெவ் வேறு திசைவேகங்களும், ஒரே ஒரே e/M மதிப்பும் கொண்ட துகள்கள் ஒளிப்படத்தகட்டில் ஒரு பர வளைய உருத்தோற்றத்தை உண்டாக்கும். இத் துகள்களின் மின்னூட்டம் சமமாகவும், நிறைகள் வேறுபட்டுமிருந்தால் பல பர வளையங்கள் (parabola) பதிவாகும். இவற்றை ஆராய்ந்து துகள்களின் நிறை களையும்,மின்னூட்டங்களையும் கண்டுபிடிக்கலாம். தாம்சன் நம் ஆய்வுகளில் ஹைட்ரஜன், ஆக்சிஜன். கார்பன் மோனாக்சைடு, கார்பன் டை ஆக்சைடு, நியான் ஆகியவற்றின் அயனிகளின் நிறைகளைக் கண்டுபிடித்தார். மெத்தேன் போன்ற வளிமங்கள் மின்னிறக்கக் குழாயுள் CH, CH, CH, போன்ற மூலக்கூறுகளாகப் பிரிகின்றன என்பதையும், நிலை யான ஐசோடோப்புகள் இருப்பதையும் உறுதிப் படுத்தினார். . கே. என். ராமச்சந்திரன் நூலோதி. George Gamou, John M. Cleveland, Physies, Prentice - Hall of India Pvt., Ltd, New Delhi, 1978. கால அளவி இந்த அளவி கடலில் செல்லும் கப்பல்களில் நுட்ப மாக நேரம் காட்டுவதற்காகவும், நெடுங்கோட்டு நிலையைக் (longitude) கணிப்பதற்காகவும் பயன் படுத்தப்படுகிற, பெரிய, உறுதியாக அமைக்கப்பட்ட கடிகாரம் ஆகும். நல்ல முறையில் உருவாக்கப்பட்ட கடிகார வகைகளையும் சிலர் இப்பெயரில் குறிப்பிடுவ துண்டு. சாதாரண கடிகாரங்களிலிருந்து காவ அளவி கள் நான்கு கூறுகளில் வேறுபட்டுள்ளன. கால அளவி யில் ஒரு நிறைமிக்க சமன்செய் சக்கரம் (balance wheel) உள்ளது. அதன் அச்சு எப்போதும் செங்குத் தாயிருக்கும் வகையில் கால அளவி (chronometer ) இரண்டு ஒரு மையமான வளையங்களுக்கிடையில் பொருத்தப்பட்டிருக்கும். கப்பல் ஆடும்போதும், சாயும்போதும் கால அளவி வைக்கப்பட்டிருக்கும் பேழையும் பெருமளவு ஆடிச் சாயும். ஆனாலும் கரல் அளவி நிலை குலையாமலிருக்கும் மைய வகையில் வளையங்கள் ஒரு சுழல் முனையில் (pivot) பொருத்தப்பட்டிருக்கும். கால அளவியில் உள்ள சமன்செய் சுருள் (balance spring) பிற கடி காரங்களில் உள்ளதைப் போலத் தட்டைச் சுருளாக ல்லாமல் உருளை வடிவச் சுருளாக இருக்கும். கால அளவியின் விடு பற்சக்கரம் (escapement wheel) தனி வகையானது. கால அளலியில் ஒரு கூம்புத் திருகு (fusee) உள்ளது. அதன் உதவியால் முதன்மைச் சுருளில் (main spring) விசை ஒரு நெம்பு கோல் புயத்தின் மூலமாகச் செயல்பட வைக்கப்படு கிறது. இந்தநெம்புகோல் புயத்தின் நீளம் தொடர்ந்து மாறிக் கொண்டேயிருக்கும். முதன்மைச் சுருள் முழு மையாக இறுக்கப்பட்டிருக்கும்போது நெம்புகோல் புயம் சிறும நீளமுள்ளதாயும் அது முழுமையாகத் தளர்ந்திருக்கும்போது பெரும நீளமுள்ளதாயிருக்கும். இதன் விளைவாகச் செலுத்தப்படும் விசை எப் போதும் ஏறத்தாழ சீராக இருக்கும்படிச் செய்யப் படுகிறது. பழைய முறையிலான எடையால் அல்லது ஊச லால் இயக்கப்பட்ட கடிகாரங்கள் கடலில் செல்லும் கப்பல்களில் சரிவர இயங்கா. இதற்கு வெப்பநிலை மாற்றங்களும், கப்பலின் ஆட்டமே காரணம். கி.பி. 1714 இல் ஜான் ஹாரிசன் (Jobn Harrison) என்னும் ஆங்கிலேய தச்சுத் தொழிலாளி கடற்பயணங்களுக் கான கால அளவிகளை வடிவமைத்து ஆங்கிலேய அரசின் பரிசைப் பெற்றார். அவருடைய முன் மாதிரிகளின் அடிப்படையில் காலஅளவிகள் மற்ற வர்களால் பெரிதும் நேர்த்தி செய்யப்பட்டன. கடலில் செல்லும்கப்பல்களில்கிரீன்விச் படித்தரக் கால அளவைக் காட்டுகின்ற கருவிகளின் உதவியால் நெடுங்கோட்டு நிலையைக் கணிப்பது வழக்கமாக இருந்தது.1920 ஆம் ஆண்டுக்குப் பிறகு வானெ மூலமாக நேரச் ஒலிபரப்பப்பட்டன. அதன் உதவியால் எந்த நேரத்திலும் கிரீன்விச் படித்தர நேரத்தை அறிந்து கொள்ளும் வசதி சைகைகள் னாலி