காலங்காட்டி 497
வெப்பமுள்ள நிலையில் உருவாகிறதென்று தெளிவா கிறது. இக்கனிமம் வட கரோலினாவிலுள்ள காலக்ஸ் என்னும் பகுதியில் பால்டு நாஃப் என்னும் இடத்தில் கிடைக்கிறது. நீண்ட நரம்புகளைப் போன்ற உருவத்தில் கிடைக்கிறது. இதனுடன் அலீ ஹனைட், கால்சைட், ஸ்பெசார்டைட், ரோடோ னைட், டெஃபெரைட் முதலான கனிமங்களும் கிடைக்கின்றனகாலக்ஸ் என்னும் தாவரம் நிறைந்த பகுதியில் முதன்முதலாகக் கண்டுடெடுக்கப்பட்ட க்கனிமத்திற்குக் காலக்சைட் என்று மையால் பெயர். இல. வைத்திலிங்கம் Mineralagy. & Distributors, நூலோதி. L.G. Berry & Mason, Second Edition, CBS Pubishers Delhi, 1985, காலங்காட்டி உலக நடைமுறைக்கு இன்றியமையாத கால அளவு முறைக்குக் காலங்காட்டி (calendar) எனப் பெயர், இம்முறையில் அலகாகப் பயன்படுவது ஆண்டு என்ப தாகும். ஆண்டு என்பது பல முறையில் வரையறுக் கப்படுகிறது. து, விண் ஒரு முறை விண்மீன் ஆண்டு (sidereal year). மீன்களைச் சார்ந்து, புவி, சூரியனை சுற்றி வரும் காலமாகும்; இதுவே, சூரியனின் தோற்றப் பாதையில் விண்மீன்களைச் சார்ந்து சூரியன் ஒரு முறை சுற்றிவரும் தோற்றக் காலமாக வும் வரையறுக்கப்படுகிறது. 365.2564 சராசரி சூரிய நாள் (mean solar days) கொண்டது ஒரு விண் மீன் ஆண்டு எனக் கணக்கிடப்பட்டுள்ளது. பருவ ஆண்டு (tropical year). சூரியனின் தோற் றப் பாதையில், எனப்படும் மேடமுதற்புள்ளி (first point of aries) உள்ளது. சூரியன் இந்தப் புள்ளியை ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 21ஆம் நாள் தெற்கி லிருந்து வடக்காகக் கடக்கிறது. இந்த நாளில் சூரிய னின் ஆயத்தொலைகள் (coordinates) அனைத்தும் பூஜ்யமாக உள்ளன. இந்நாளிலேயே, இளவேனிற் பருவம் தொடங்குகிறது. மேடமுதற்புள்ளி சூரியப் பாதையில் சூரியன் செல்லும் திசைக்கு எதிராக ஆண்டு ஒன்றுக்கு 50° 25" என்னும் ஒரு சிறிய தொலைவு நகர்கிறது. இதன் விளைவாகச் ரியன் மறுமுறை இப்புள்ளி யைச் சந்திக்கும் நேரம் ஒரு மீன் வழி ஆண்டைவிடச் சற்றுக் குறைவாக உள்ளது. இதில் 365.2422 சராசரி சூரிய நாள் என விடப்பட்டுள்ளது. ஆகையால் 365.2422 கொண்ட இவ்வாண்டுக்குப் பருவஆண்டு எனப்பெயர். அள நாள் காலங்காட்டி 497 அண்மைநிலை ஆண்டு (anomalistic year). சூரியனைப் புவி சுற்றி வரும் பாதை ஒரு நீள் வட்ட மாகும். ஆகையால் இப்பாதையில் ஒரு புள்ளி சூரியனுக்கு மிக அருகில் இருக்கும். இதற்கு அண்மை நிலைப்புள்ளி (perigee) எனப்பெயர். இப்புள்ளி சூரியன் செல்லும் திசையிலேயே ஆண்டு ஒன்றுக்கு 11'25" தொலைவு நகர்கிறது ஆகையால் இப் புள்ளியைச் சார்ந்து சூரியன் ஒரு முறை சுற்றி வரு வதற்கான நேரம் ஓர் விண்மீன் ஆண்டைவிடச் சற்று விகுதியாகிறது. இந்தக் காலத்துக்கு அண்மை நிலையாண்டு எனப் பெயர். இது 365.2596 சராசரிச் சூரிய நாள் கொண்டதாகும். . பெசலியன் ஆண்டு. பருவ ஆண்டின் தொடக் கத்தை மார்ச் 21ஆம் நாள் எனக் கொள்ளாமல் சூரியனின் சூரியப் பாதைத் தொலைவு (longi- tude) 280º ஆக இருக்கும்போது தொடங்கு கிறது எனக் கொண்டால் இதற்குப்பெசலியன் ஆண்டு எனப் பெயர். இதுவும் பருவ ஆண்டைப் போல 365.2422 நாள் கொண்டதாகும். இவ்வாண்டின் தொடக்கமும், நிர்வாக ஆண்டின் (civil year) தொடக்கமும் ஏறக்குறைய ஒன்றாகவே உள்ளன. இவ்வாண்டு, பல வானியல் கணிப்புகளுக்கு மிகவும் பய னுடையதாக உள்ளது. இவ்வாண்டைத் தோற்று வித்தவர் பெஸல் என்னும் ஜெர்மானியர் ஆவார். இம்முறையில் ஆண்டின் எண்ணுடன் '.0' என்னும் எண்ணையும் சேர்த்து எழுதுகின்றனர். எடுத்துக் காட்டாக 1986.0 என்றால் பெசலியன் ஆண்டு 1986 எனப் பொருள். கால நிர்வாக ஆண்டு. இது நடைமுறையில் அனைத்து நாடுகளிலும் பயன்படும் அலகாகும். இந்த ஆண்டையே காலங்காட்டியில் பயன்படுத்துகின்றனர். இந்த ஆண்டிலுள்ள நாள்களின் எண்ணிக்கை பின்ன மாக இருந்தால் காலங்காட்டிக்கு ஏற்றதாகாது. ஆகையால் மேலே கூறிய முதல் நான்கு வகை ஆண்டுகளும் காலங்காட்டிக்குப் பயன்படா. எனவே காலங்காட்டியில் ஆண்டுக்கு 365 நாள் எனக் கொள்ளப்பட்டுள்ளது. ஆண்டை 12 மாதங்களாகப் பிரித்து ஒவ்வொரு மாதத்திலும் ஏறக்குறைய 30 நாள்களை வைத்துக் காலங்காட்டி அமைக்கப்பட் டுள்ளது. இம்முறை 2000 ஆண்டுகளுக்கு முன்னரே பயன்பட்ட டது என்பதற்குச் சான்றுகள் உள்ளன. முதலில் காலங்காட்டி ஆண்டு (calendar year ) மார்ச்மாதத்தில் தொடங்கியதாகத் தெரிகிறது.மார்ச் மாதத்தை முதல் மா வாதமாகக் கருதினால் செப்ட ம்பர் ஏழாம் மாதமாகவும், அக்டோபர் எட்டாம் மாதமாக வும், நவம்பர் ஒன்பதாம்மாதமாகவும், டிசம்பர் பத்தாம் மாதமாகவும் அமைவதைக் காணலாம். வட மொழி யில் சப்த என்றால் ஏழு என்றும், அஷ்ட என்றால் அ. க. 8 32