பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/518

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

498 காலச்‌ சமன்பாடு

498 காலச் சமன்பாடு எட்டு என்றும், நவ என்றால் ஒன்பது என்றும், தச என்றால் பத்து என்றும் பொருளாகும். இவ்வாறு காலங்காட்டி ஆண்டு மார்ச்சில் தொடங்கியதற்கு அகச்சான்று (internal evidence) உள்ளது. டில் ஜூலியன் காலங்காட்டி. கி.மு. 45ஆம் ஆண் என்னும் ஜூலியஸ் சீசர் ரோமானியப் பேரரசர் காலங்காட்டி ஆண்டில் சிலமாற்றங் களைச் செய்தார். கொண்ட இம்மாற்றங்கள் காலங்காட்டிக்கு ஜூலியன் காலங்காட்டி எனப் பெயர். இதன்படி, ஜனவரி மாதத்தில் ஆண்டு தொடங்கியது. தனால் மார்ச் மாதம் மூன்றாம் மாதமாகியது. ஆண்டில் 365 நாள்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இந்த ஆண்டு பருவ ஆண்டை விட. 2422 நாள் குறைவாகும். நான்கு ஆண்டுகளில் விளைவாக இக்குறைவு, 9688 ஆயிற்று. இதன் இளவேனிற் பருவம் மார்ச்சு 21 ஆம் நாளுக்குப் பிறகு தோன்றியது. இதைத் தவிர்க்க ஜூலியஸ் சீசர் நான்கு ஆண்டுகளில் ஒரு நாளை அதிகரித்தார். ஆண்டின் எண்ணிக்கை நான்கின் மடங்கானால் அந்த ஆண்டுக்கு லீப் ஆண்டு எனப் பெயரிட்டு, அவ்வாண்டின் பிப்ரவரி மாதத்தில் ஒரு நாளைக் கூட்டி, 29 நாளாகக் கொண்டார். மேலும் இம்முறை யில் ஏழாம் மாதத்துக்கு இவர் நினைவாக ஜுலை எனப் பெயர் வந்தது. இவருக்குப் பிறகு வந்த அகஸ்டஸ் என்னும் மன்னரின் நினைவாக அடுத்த மாதம் ஆகஸ்ட் என ஆயிற்று. ஜூலியஸ் சீசருக்கு அகஸ்டஸ் குறைந்தவர் அல்லர் என்பதை உணர்த்தவே ஆகஸ்ட் மாதமும் 31 நாள்கள் காண்டது என நிலைநாட்டப்பட்டது. கிரிகோரியன் காலங்காட்டி. கி.பி. 1532 ஆம் ஆண்டில் 13 ஆம் கிரிகரி என்னும் போப்பாண்டவர் ஜூலியன் காலங்காட்டியில் ஏற்பட்ட சில பிழை களைத் திருத்துவதற்காகச் சில மாற்றங்களைச் செய்தார். இந்த மாற்றங்களைக் கொண்ட காலங் காட்டிக்குக் கிரிகோரியன் காலங்காட்டி எனப் பெயர். ஜூலியன் காலங்காட்டியில் 4 ஆண்டுகளில் 9688 நாளுக்குப் பதிலாக 1 நாள் அதிகமாயிற்று. இதனால் 4 ஆண்டுகளில் .0312 நாள் அதிக மாகியது. இது 400 ஆண்டுகளில் 3.12 நாள் ஆகும். தனால் 400 நிர்வாக ஆண்டுகள் 400 பருவ ஆண்டுகளைவிட 3.12 நாள்கள் அதிகமாயின. இதனால் இளவேனிற் பருவத் தொடக்கம் மார்ச் 21 ஆம் நாளுக்கு மேலும் மேலும் முன்னதாக ஏற் பட்டது. கிரிகரி காலத்தில் ஏறத்தாழ 10 நாள் முன்னரே தோன்றின. இவற்றைத் திருத்தி அமைக்க போப் கிரிகோரி இரண்டு மாற்றங்களைச் செய்தார். கி.பி. 1582 ஆம் ஆண்டில் மார்ச் மாதத்தில் 10 நாள்களை நீக்கினார். அதாவது மார்ச்சு 11ஆம் தேதி கொண்ட நாளை உடனடியாக மார்ச் 21ஆம் நாள் என மாற்ற ஆணை பிறப்பித்தார். மேலும் 400 ஆண்டுகளில் கூடுதலாக இருந்த 3 நாள்களைக் குறைக்க அவற்றிற்கு இடைப்பட்ட மூன்று நூற்றாண்டு ஆண்டுகளைச் (century years) சாதாரண ஆண்டுகளாக மாற்றினார். இதன் மூலம் நூற்றாண் டும் நூற்றாண்டின் எண்ணும் 4 ஆல் வகுபட்டா லன்றி லீப் ஆண்டுகள் ஆகா எனவும் செய்தார். எடுத்துக்காட்டாக 1300, 1400, 1500, 1600 என்னும் நூற்றாண்டு ஆண்டுகளில் 1600 என்னும் ஆண்டு மட்டுமே லீப் ஆண்டு ஆகும். ஏனைய 1300, 1400, 1500 ஆம் ஆண்டு எண்கள் 4ஆல் வகுபட்ட போதும், 13, 14, 15 என்னும் எண்கள் 4ஆல் வகு படவில்லையாதலால் அவை சாதாரண ஆண்டு களாயின. இந்தத் திருத்தம் செய்த போதும் 4000 ஆண்டுகளில் 1-2 நாள் எஞ்சும். அப்போது ஒரு நாள் குறைக்கப்பட வேண்டும். தற்போது உலகம் முழுதும் கிரிகேரியன் காலங்காட்டியே பயன்படுகிறது. ஜூவியன் தேதி. கி.பி. 1582 இல் ஜோசப் ஸ்காலிங்கர் என்பார் கால அளவுக்கு மற்றுமொரு முறையைத் தோற்றுவித்தார். இந்தச் சகாப்தத்துத் தொடக்க காலம் கி.மு 4713 ஆம் ஆண்டு, ஜனவரி முதல்நாள் நடுப்பகலாகும். நிகழும் எந்த நாளுக்கும் ஜூலியன் தேதி என்பது, சகாப்தத் தொடக்கத்தி லிருந்து அந்த நாள் வரை உள்ள நாள்களின் எண்ணிக்கையாகும். இந்த நாள்கள் மாலுமிகளுக் கான அட்டவணையில் உள்ளன. ஜூலியன் தேதியை 7 ஆல் வகுக்கக் கிடைக்கும் மீதி 0 ஆனால் அந் நாள் திங்கள், மீதி ஒன்று என ஆனால் அந்நாள் செவ்வாய்; இது போன்று மற்ற நாள்களும் அமையும். லியன் தேதி கொண்ட ஒரு நாளில் ஒரு சூரிய அல்லது சந்திரன் ஒளி மறைப்பு ஏற்பட்டால், மீண்டும் இதே மாதிரியான ஒளி மறைப்பு (eclipse ) 6583 தேதியில் உண்டாகும். இத்தகைய சில வானியல் நிகழ்ச்சிகளுக்கு இந்த ஜூலியன் தேதி மிகவும் பயனுடையதாக உள்ளது. காலச் சமன்பாடு எல். இராஜகோபாலன் பல காலக் கணிப்பு முறைகள் இருப்பினும், மீன்வழி நேரம் (siderial time), தோற்றச் சூரியன் வழி நேரம் apparent solar time), சராசரி சூரியன் வழி நேரம் (mean solar time) ஆகிய மூன்றும் முக்கியமான முறைகளாகும். முதலில், தோற்றச் சூரியன் (apparent sun) அன்றாடம் காணும் சூரியனாகும். அதன் பாதையான தோற்றப் பாதை (ecliptic) வான நடுவரையுடன் (celestial equator) 23 30' (= w) கோணச் சாய்வில் உள்ளது. பல நேரங்களைக் கணிப்பதற்காக இரண்டு