பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/520

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

500 காலத்தொடர்‌

P 300 காலத்தொடர் மேலும் E,E, களின் மதிப்புகளிலிருந்து E- = நி 7.67 sin (I-k) + 9.87Sin2l எனக் கணக் கிடப்பட்டுள்ளது. இங்கு K என்பது சூரியனின் அண்மைநிலையின் (apogee)நெட்டாங்கைக் குறிக்கும். K இன் மதிப்பு 283* ஆதலால் E, 1 என்னும் மாறி யின் சார்பலனாகிறது. E(O°),E(90°), E(360') இவற் றின் மதிப்புகள் குறையாகவும்,E(45°), E(180)களின் மதிப்புகள் நிறையாகவும் இருப்பதிலிருந்து, ஓராண் டில் காலக்குறை - நிறை சமன்பாடு நான்குமுறை பூஜ்யமாகிறது. வரைபடத்தில், காலச் சமன்பாட்டு வரை, X அச்சை ஏப்ரல் 16, ஜூன் 14, செப்டம்பர் 2, டிசம்பர் 25 தேதிகளில் 4 முறை வெட்டுகிறது. 10 நிமிடங்கள் 0 In -10 16 14 J 25 S D LA -15 ஜன ஏப் லை அக் ஜன சராசரி தோற்றச் சூரியன் உதயத்திலிருந்து, சூரியன் நண்பகல் வரை காலை நேர அளவு (length of morning) என்றும், சராசரி நண்பகலிலிருந்து தோற்றச் சூரியன் மறைவு வரை மாலைநேர அளவு length of evening) என்றும் வரையறுக்கப்படும். 2 E = காலைநேர அளவு மாலை நேர அளவு என்னும் சமன்பாட்டிலிருந்தும் E இன் மதிப்பைக் கணக்கிட முடியும். காலத்தொடர் பங்கஜம் கணேசன் ஒரு தொழிலின் வருங்காலப்போக்கை முன் கூட்டியே அறிந்து கொள்வதன் மூலமே அத்தொழிலைப் பெருக்க முடியும், அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் உற்பத்தி செய்யக்கூடிய ஒரு பொருளின் தேவை பெருகும் என்றோ குறையும் என்றோ முன் கூட்டியே தெரிந்து கொள்வதனால் அத்தொழிலை முறையாகத் திட்டமிடவியலும். இதற்கு அப்பொரு ளைப் பற்றிய கடந்த நிகழ் கால விவரங்களை ஆராய்வது தேவையாகிறது. பல்வேறு நேரங்களைச் சேர்ந்த விவரங்களை, அவை நிகழ்ந்த நேரங்களுக் கேற்ப வரிசைப்படுத்துவதற்குக் காலத்தொடர் (time series) என்று பெயர். மாறு காலப்போக்கில் ஏற்படுகின்ற மாறுதல்கள், காலத்தொடர் விவரங்களில் ஏற்படுத்தும் தல்கள் பற்றிய ஒழுங்கு முறைகளைக் கண்டு அள விடுவதே காலத்தொடர் பகுப்பாய்வின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் பல பயன்கள் கிடைக் கின்றன. வருங்காலத் திட்டங்களை வகுத்துக் கொள்வதற்கும், கடந்த கால விவரங்களின் பகுப் பாய்வு மதிப்புக்கும். தற்போதைய பகுப்பாய்வு மதிப்புக்கும் உள்ள வேறுபாட்டை அறிந்து வளர்ச்சி யைப் பெருக்கிக் கொள்வதற்கும், காலங்களின் தேவையைப் பொறுத்து உற்பத்தியைப் பெருக்கிக் கொள்வதற்கும், வீண் செலவுகளை அறவே நீக்கு தற்கும், காலத்தொடர் பகுப்பாய்வு பயன்படுகிறது. . காலத்தொடர் பல தரப்பட்ட அசைவுகளால் தாக்கமடைகிறது. இவற்றுள் சில ஒரே சீராக ஒழுங்கான இடைவேளைகளில் மீண்டும், மீண்டும் ஏற்படுவனவாயும், சில எப்போதாவது ஏற்படுவன வாயும் உள்ளன. காலத்தொடரில் ஏற்படும் அசைவு களுக்கேற்ப, அவை நான்கு வகைகளாகப் பிரிக்கப் படுகின்றன. அவை நீண்டகாலப் போக்கு (secular trend), பருவ கால மாறுபாடுகள் (seasonal variations). சுழல் மாறுபாடுகள் (cyclical variations), ஒழுங்கற்ற ஏற்ற இறக்கங்கள் (random fluctuations) எனப்படும். கடந்த கால நிலை பற்றிய விளக்கத்திற்கும், வருங்கால நிலை பற்றிய முன்கூற்றிற்கும் அடிப் படையாக அமைவதால் புள்ளியியல் ஆய்வில் இவை பெரும்பங்கேற்கின்றன. அனைத்து வகைக் காலத் தொடர்களிலும் இந்நான்கு வகை அசைவுகள் உள்ளன. இந்நான்கு வகைகளையும் த தனிமைப் படுத்திப் பிரித்து அளவிட்டு. அசைவுகளுக்கான காரணங்களையும் அவற்றின் விளைவுகளையும் ஆராய்வது புள்ளியியல் ஆய்வாளரின் இன்றியமை யாப் பணியாகிறது. நீண்ட காலப் போக்கு. அவ்வப்போது பெரிய மாறுதல்கள் இருந்தாலும், நீண்ட காலத்தில் கணக் கிடும்போது ஏற்றமோ இறக்கமோ இருப்பதை நீண்ட காலப் போக்கு எனலாம். ஒரு வணிகத்தின் விற்பனை சில மாதங்களில் குறைந்தும், வேறு சில மாதங்களில் மிகுந்தும் இருந்தால் ஆண்டுச் சராசரியைக் காணின். அது சீராக உயர்ந்தோ தாழ்ந்தோ இருக் கும். இதைக் கணக்கிடுவதற்குப் பல முறைகள் உள்ளன. அவை நகரும் சராசரி முறை (method of moving averages), பாதிச் சராசரி முறை (method of semi averages), மீச்சிறு இருபடி முறை (method .