502 கால நிலையிணக்கம்
502 கால நிலையிணக்கம் பருவ மதிப்பு காலக் குறியீட்டெண்களைப் பயன்படுத்தி, பருவகால அசைவுகளின் விளைவுகளை மூல களிலிருந்து நீக்கலாம். பல சூழல் மாறுபாடுகள். ஒரு தொழில் என்பது முன்னேற்றம்,பின்னிறக்கம், வீழ்ச்சி, மீட்சி எனும் பல நிலைகளையடைந்து மீண்டும் முதல் நிலையை அடைவதற்குச் சுழல்மாறுபாடு என்று பெயர். பொருளாதாரக் காலத் தொடர்களை ஆராய்ந்ததன் பயனாக 37 மாதக் குறுகிய கால வட்டத்தைக் கொண்ட சுழற்சி கிச்சின் வட்டம் 10, ஆண்டுக் கால வட்டத்தைக் கொண்ட ஐக்ளர் வட்டம், 50 ஆண்டு நீண்ட கால வட்டத்தைக் கொண்ட கொண்டிட ராடீஃப் வட்டம் எனும் மூன்று வகைத் தொழில் வட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சுழல் பாடுகளை மீத முறை, குறிப்புச் சுழல் பகுப்பாய்வு முறை, நேரடி முறை, இசைப் பகுப்பாய்வு முறை ஆகியவற்றைக் கொண்டு அறியலாம். மாறு ஒழுங்கற்ற ஏற்ற இறக்கங்கள். எதிர்பாராத அளவு ஏற்றமோ இறக்கமோ ஏற்படுவதை ஒழுங்கற்ற ஏற்ற இறக்கங்கள் எனலாம். இவ்வசைவுகளைச் சரியாக வரையறுத்துக் கூற முடியாவிட்டாலும், பிற மூவகை அசைவுகளிலும் சேராத அசைவுகளையெல்லாம் ஒழுங்கற்ற ஏற்ற இறக்கங்களில் சேர்க்கலாம். இவ்வசைவுகள் நீடிக்கமாட்டா என்பது மட்டுமல்ல, மீண்டும் ஏற்படுமென்று எதிர்பார்க்கவும் இயலா. எதிர்பாராத நிகழ்ச்சிகளாகிய அரசியல் புரட்சிகள், வேலை நிறுத்தங்கள், போராட்டங்கள். வெள்ளப் பெருக்கு, வறட்சி, தொற்று நோய், புயல், நில நடுக்கம் ஆகியவற்றின் காரணமா கப் பொருளா தாரத்தில் ஏற்படும் அசைவுகள் இவ்வகையைச் சாரும். சில புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள்கூட இவ்வகையைச் சாரும். பிரிவு காலத் தொடரின் மற்றொரு முக்கிய தொழில் முன்கணிப்பாகும் (business forecasting). தொழில்களின் தற்கால, கடந்த கால நிலைமை களைப் பற்றிப் பகுப்பாய்ந்து, அவற்றைச் சரியாக அறுதியிட்டு, அத்தொழிலின் வருங்கால நிலைமைகள் பற்றிய தெளிவைத் தொழில் முன்கணிப்பு ஏற்படுத்துகிறது. கணிப்பு முறைகளை - கடந்த கால முன் நிலைமைகளை வரலாற்றுப் பகுப்பாய்வு (historical analysis). தற்காலச் சூழ்நிலைகளின் வெட்டுப் பகுப் பாய்வு (cross section analysis) என இருவகைப்படுத்த லாம். ஒரு தொழில் நலிவுற்றோ, மந்தமாகவோ இருந்தால் அது மீண்டும் இயல் நிலையை நோக்கிச் செல்ல முயலும் என்பது முதற் கொள்கையாகும். வெவ்வேறு வகையான தொழில் துறைகளுக்கிடையே திட்டவட்டமான சுழல் தொடர்ச்சிகளிருக்குமென்ப து ரண்டாம் கொள்கையாகும். தொழில் முன் கணிப் பால் தொழில் நிறுவனத்தினர், சாலைப் போக்கு வரத்து அலுவலர் போன்றோர் மிகுந்த பயன் அடை கின்றனர். இது அரசுக்குப் பெரிய அளவில் உதவி யாக உள்ளது. - எம். அரவாண்டி கால நிலையிணக்கம் தாவரங்கள் ஒரு சூழ்நிலையில் நன்கு வளர அந்த இடத்தின் பருவ நிலையோடு ஒத்து வாழத் தம்மைத் தாமே தயார் செய்து கொள்ள வேண்டும். தாவரங் களின் வினையியல் வேதியியல் மாற்றங்கள் சூழ் நிலையின் தன்மைக்கு ஏற்ப மாறுபட்டு வளர்ச்சியை நிர்ணயம் செய்கின்றன. குட் என்பார் 1953 ஆம் ஆண்டு தாவரங்கள் எந்த அடிப்படையில் புளியில் பரவியுள்ளன என்பதைக் கண்டுபிடித்துள்ளார். ஒரு தாவரம் ஓர் இடத்தில் செழித்து வளர்வது அவ் விடத்தின் காலநிலை மாறுபாடுகள், மண்ணின் தன்மை, அமைப்பு, பரவும் நிலை ஆகியவற்றைப் பொறுத்து அமைகிறது. வில்சிக் என்னும் அமெரிக்க அறிவியலார் வேளாண்மைப் பயிர்கள் ஓர் இடத்தில் நிலைத்து வளர்வதற்குக் கடல் மட்டத்திலிருந்து. சாகுபடி நிலத்தின் உயரம், தட்பவெப்ப நிலை, சரா சரி மழை அளவு, நிலத்தின் தன்மை, மண்வளம். அங்குள்ள உயிர்க்காரணிகள் இன்றியமையாதவை என்று கூறினார். ஒவ்வொரு தாவரமும் ஒரு குறிப்பிட்ட காலச் சூழ்நியிைல் வளர்ந்து, இனப்பெருக்கம் செய்யும் வல்லமையுடையது. வெப்பம். வறட்சி போன்ற வற்றின் தாக்கத்தால் சில தாவரங்கள் தம் இனத்தைப் பெருக்கக்கூடிய ஆற்றலை இழந்துவிடுகின்றன. சில இம்மாறுபாடுகளால் அச்சூழ்நிலையில் தம் இனத்தை நிலைநிறுத்திவிடுகின்றன. இவ்வாறு நிலைத்து நின்ற தாவரங்களின் வெளித்தோற்றம் சிறிது மாற்றம் அடைந்திருக்கும். வெளி நாட்டிலிருந்தோ மாறுபட்ட ஒரு புதிய சூழ்நிலையிருந்தோ ஒரு பயிரை வேறோர் இடத்தில் பயிர் அறிமுகம் செய்யும்போது பயிரின் சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டே புதிய சூழ்நிலை தேர்வு செய்யப்படும். எனவே பயிர்கள் ஓரிடத்தில் காலை நிலையிணக்கம் பெறுவது காலச் சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டே அமை யும். பருவச் சூழ்நிலை. பருவச் சூழ்நிலை அல்லது பருவ நிலை என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஏற்படக்கூடிய வானிவைக் கூறுகளை விளக்குவதாகும். பருவ நிலையில் பல காரணிகள் மாற்றங்களைத் தோற்றுவிக்கின்றன. அவை சூரிய ஒளி. வெப்பம். மழை, காற்று