கால நிலையியல் 503
எனப்படும். வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டு பருவநிலையை ஆராய்ந்தால் பயிரின் விளைச்சல் பருவநிலை மாறுபாடுகளால் எந்த அளவு பாதிக்கப்படுகிறது என்பது தெளிவாகும். சூரிய ஒளி கிடைக்கும் கோடைக்காலத்தில் நீர்ப் பற்றாக்குறை ல்லாவிடில் பயிர்களின் விளைச்சல் பல மடங்கு அதிகரிக்கும். மேலும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு பயிர் களைத் தேர்ந்தெடுக்கக் கால நிலை உதவுகிறது. இதைக் கருத்தில் கொண்டுதான் ஓர் ஆண்டில் ஏற் படக்கூடிய சூழ்நிலை மாறுபாடுகளை அடிப்படை யாகக் கொண்டு காலத்தைப் பல பருவங்களாகப் பிரித்தனர். ஒவ்வொரு பருவத்திலும் சூரிய ஒளி, வெப்பம். காற்று, மழை இவை பெருமளவில் மாறுபடுகின்றன. கோடைக்காலத்தில் மழை குறைந்தும் சூரிய ஒளி மிகுந்தும் காணப்படும். குளிர் காலத்தில் மழை மிகுந்தும் சூரிய ஒளி குறைந்தும் காணப்படும். பருவ பயிர்களைத் நிலை அடிப்படையிலேயே தேர்வு செய்யவேண்டும். கோடைப் பருவங்களில் சோளம், கம்பு போன்றவையும் குளிர்பருவங்களில் கோதுமை, பார்லி, கொண்டைக்கடலை போன்றவையும் தேர்வு செய்யப்படுவது நல்லது. பருவநிலை பல காரணிகளைக் கொண்டு தமிழகத்தை ஏழு பருவ நிலைப் பகுதிகளாகப் பிரிக்கலாம். மழை வடகிழக்குப் பகுதி. இதில் செங்கல்பட்டு, தென் ஆர்க்காடு மாவட்டங்கள் அடங்கும். ஆண்டு யளவு 1050 மி.மீ., தாழ்வான பகுதிகளில் நெல்லும், மேடான பகுதிகளில் தானியங்களும் பயிர் செய்யப் படுகின்றன. வடமேற்குப் பகுதி. இதில் தர்மபுரி, சேலம் மாவட்டங்கள் அடங்கும். சராசரி மழையளவு 825 மி.மீ., பொதுவாகச் சோளம், கம்பு போன்ற தானியங்கள் பயிர் செய்யப்படுகின்றன. மேற்குப் பகுதி. இதில் கோயம்புத்தூர் மாவட்டம் அடங்கும். சராசரி மழை அளவு 838 மி.மீ., பருத்தி, கடலை முக்கியமாகப் பயிர் செய்யப்படுகின்றன. காவிரி டெல்டா. இதில் திருச்சி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் அடங்கும். இங்கு மழை அளவு ஆசி 950-1000 மி.மீ. வரை இருக்கும், நெல், கரும்பு முக்கியமான பயிராகும். வாழை, தென்பகுதி. தமிழகத்தில் தென் மாவட்டங் களான மதுரை, காமராசர், பொன்முத்துராமலிங்கம், சிதம்பரனார், திருநெல்வேலி கட்டபொம்மன், அண்ணா, புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் அடங்கும். சராசரி மழை அளவு 776 மி.மீ. இங்கு நெல், பருத்தி, கடலை முக்கிய பயிர் களாகச் சாகுபடி செய்யப்படுகின்) ன்றன. கால நிலையியல் 503 உச்ச மழை பெறும் இடங்கள். இதில் கன்னியா குமரி மாவட்டம் அடங்கும். மழை அளவு 1409மி.மீ. இங்கு ரப்பர், பாக்கு, வாழை போன்றவை சாகுபடி செய்யப்படுகின்றன. மலைப்பகுதி. இதில் நீலகிரி மாவட்டம், கொல்லி மலை, பச்சைமலை, ஆனை மலை அடங்கும். சராசரி மழை அளவு 1000 - 5000 மி. மீ. வரை இருக்கும். காப்பி, தேயிலை, மிளகு போன்ற நறுமணப் பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. பயிர் வளர்ச்சி, சுற்றுப்புறத் தட்பவெப்ப நிலையும் அவற்றிற்கு ஏற்ற பயிர் வளர்ச்சியும் பயிரிடும் முறையைத் தேர்ந்தெடுக்கின்றன. மனிதனின் தேவைக்குத் தக்கவாறு பயிரை மாற்றினாலும் இயற்கைப் பயிர் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி ஒரு சில பயிர்களே ஒரு சூழ்நிலையில் செழித்து வளரும். உயிரினக் காரணிகளான பூச்சி, நோய், புழுக்கள் போன்றவற்றின் தாக்குதல் மிகுதியாகிப் பயிரின் விளைச்சல் குறையக்கூடும். பயிர் நிலையிணக்கம் வேளாண்மையில் ஒரு குறிப்பிடத்தக்க கூறாகக் கருதப்படுகிறது. ஒரு பயிரின் பரம்பரைப் பண்புகளும் வினையியல் பண்புகளும் சுற்றுப்புறச் சூழ்நிலையின் மாற்றத்தால் மாற்றப்படுகின்றன. இவ்வாறு மாற்றப் படும்போது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை அப்பயிர் வளர்ச்சிக்கு ஏற்றதாக இருக்கும். சில சமயங்களில் புதிய பயிரை அறிமுகம் செய்யும்போது அப்பயிர் தேவையான மாற்றங்களைப் பெற்றுப் படிப்படியாக அப்புதிய சூழ்நிலைக்குத் தன்னைத் தயார் செய்து கொண்ட பின்னரே அச்சூழ் நிலையோடு ஒத்து வாழ்கிறது. இதையே பயிர் நிலையிணக்கம் என்பர். இதை ஒரு பயிரின் வளர்ச்சி, விளைச்சல் ஆகியவற்றைக் கொண்டு அளவிடலாம். ஒரு பயிர் மிகக் குறுகிய காலத்திலேயே புதிய சூழ்நிலையில் நன்கு வளர்ந்து உயர் விளைச்சலைத் தந்தால் அப்பயிர் எளிதில் கால நிலையிணக்கம் பெற்று விட்டது என்று பொருள். எனவே மனித ஆற்றலின் கண்டுபிடிப்புகள் எல்லையற்றனவாயினும் இயற்கையும் பருவ காலச் சூழ்நிலையும் அவற்றை ஓரளவு கட்டுப்படுத்துகின்றன. கொ. பாலகிருட்டிணன் 10 9 . நூலோதி.C.P. Wilsie, Crop adaptation and dis tribution, Eurasia publishing house (p) Ltd, Delhi, 1962. கால நிலையியல் வளி மண்டல வானிலை நிகழ்வுகளைப் பற்றி ஆராயும் பிரிவிற்குக் காலநிலையியல் (meteorology)