பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/524

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

504 கால நிலையியல்‌

504 கால நிலையியல் எனப் பெயர். அது வளிமண்டல இயற்பியலுடன் நெருக்கமான தொடர்பு கொண்டது. புவியின் வளி மண்டலத்தில் நிகழும் வெப்பப் பரிமாற்றம், அழுத்த மாற்றங்கள், காற்றோட்டம், ஈரப்பதன் ஆகியவற் றால் வளி வானிலை (weather) உண்டாக்கப்படு கிறது. இந்த வளி நிகழ்வுகளைத் தனித்தனியாக ஆராய்வது வளிமண்டல இயற்பியல் ஆகும். அந்த நிகழ்வுகளால் தோன்றுகிற வெப்பநிலை மாற்றம் காற்றோட்டம், மேக மூட்டம், மழை பொழிவு, சுழல் காற்று, புயல் போன்றவற்றை ஆராய்வது வானிலையியல் எனப்படும். ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிலவும் வளிமண்டல் நிலைகள் அந்த இடத்தின் தட்பவெப்பநிலை (climate) ஆகும். அதைப் பற்றிப் பயிலுவது தட்ப வெப்ப நிலையியல் (climatology) எனப்படும். வளி வானிலை யால் தாவரங்களிலும், விலங்குகளிலும், மனிதர்களி டத்தும் உண்டாகும் விளைவுகளைப் பற்றிப் பயிலு வது உயிரி காலநிலையியல் (biometeorology) எனப் படும். காற்றில் கலந்துள்ள மாசுகளால் கால நிலை யில் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றிப் பயிலுவது காற்று மாசு காலநிலையியல். தரையை ஒட்டிய பகுதிகளில் சிறு அளவில் ஏற்படும் வளி வானிலை மாற்றங்களைப் பற்றிப் பயிலுவது நுண் கால நிலை யியல் (micrometeorology). தற்காலத்தில் செயற்கைக் கோள்கள் விண்ணில் உயரப் பறந்து வளி வானிலைக் காரணிகளை அளவிட்டு, அது பற்றிய தகவல்களைப் புவியில் உள்ள தரை நிலையங்களுக்குப் படங்களா சுவோ, எண் குறிகளாகவோ மாற்றி அனுப்புகின்றன. இம்முறையில் வெள்ளி, செவ்வாய் போன்ற கோள் களின் வளிவானிலையைக்கூட அறிவியல் கள் ஆராய்ந்து வருகின்றனர். வல்லுநர் வானொலியிலும் தொலைக்காட்சியிலும் நாளும் வானிலை முன்னறிவிப்புச் செய்கிற அலுவலர் பொது மக்களுக்கு நன்கு அறிமுகமான கால நிலையாளர் ஆவார். தீ, வளி, நீர், புவி ஆகியவற்றின் இடை வினை காரணமாகவும் சூடு, குளிர்ச்சி, ஈரம், உலர்வு என்னும் நான்கு எதிர்மறைகளின் இடைவினை காரணமாகவுமே வளி வானிலை நிகழ்வுகள் தோன்று வதாகப் பண்டைய கிரேக்க மக்கள் நம்பினர். இன்று உலகம் முழுதிலுமுள்ள பல தலங்களில் வளிவானிலை தகவல் திரட்டு நிலையங்கள் அமைந்துள்ளன. அவை ஐக்கிய நாடுகள் அவையின் கிளையான உலகக் கால நிலை அமைப்பின் ஆதரவில் செயல்படுகிற உலக வளிவானிலைக் கண்காணிப்பு (world weather watch) என்னும் அமைப்பின் உறுப்புகளாகும். ஐக்கிய நாடுகள் அவையின் உறுப்பினர்களாக உள்ள அனைத்து நாட்டினரும் உயர் வேசுச் செய்தித் தொடர்பு முறைகளின் மூலம் அன்றாட வளி வானிலைத் தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்ற னர். உலகம் முழுவதும் உள்ள 5000-க்கும் மேற் பட்ட நிலையங்களிலும் கடலில் செல்லும் கப்பல்களி லும் காலநிலைத் தொழில் துறையினர் 0000,0600, 1200. 1800 ஆகிய கிரீன்விச் சராசரி நேரங்களில் தம்மிடத்தின் வளி வானிலை பற்றிய தகவல்களைச் சேகரிக்கின்றனர். வெப்பநிலை, ஈரப்பதன், வளி அழுத்தம், கிடைத்திசைக் காற்று வேகம், பார்வைத் தாலைவு, முகில் வகைகள், முகில் அடிப்பரப்பு உயரங்கள், மழை அளவு, அப்போதைய நிலவரத்தின் படியான மழை, பனி மூட்டம், தூசுப்புயல், காற் றில் கலந்துள்ள மாசுகள். வெயில் மற்றும் புவிக் கதிர்கள், காற்றின் செங்குத்துத் திசைவேகம், காற் றில் தோன்றும் குழப்பங்கள், தரை வெப்பநிலை பனிப்பொழிவின் அளவு போன்ற தகவல்கள் கருவி களின் மூலமாகவும் மூலமாகவும் திரட்டப்படுகின்றன. கண் பார்வை ஏறத்தாழ 650 நிலையங்களிலிருந்து 0000, 1200 கிரீன்விச் சராசரி நேரங்களில் ஹீலியம் நிரம்பிய வளிவானிலைக் கூடுகள் ஏவப்படுகின்றன. அவை குறிப்பிட்ட வேகத்தில் மேலே எழுந்து ஏறக்குறைய 35 கிலோமீட்டர் உயரம் வரை செல்லும். அவற்றில் வெப்பநிலை, அழுத்தம், ஈரப்பதன் ஆகியவற்றை அளவிடும் கருவிகள் இருக்கும். அவை திரட்டும் தகவல்கள் வானொலி பரப்பிமூலம் தரை நிலையங் களுக்கு அனுப்பப்படும். ஹீலிய வளிமக் கூடுகளை ராடார் மூலமும் பின்பற்றலாம். வளிமக்கூடு காற் றோடு அடித்துச் செல்லப்படும் வேகத்திலிருந்து வெவ்வேறு உயரங்களில் காற்றின் திசைவேகம் மதிப் பிடப்படுகிறது.இத்தகையவளிமக்கூடுகள் ஒரு குறிப் பிட்ட உயரத்திற்குச் சென்றதும் வெடித்து விடும். பல வேளைகளில் அவற்றிலுள்ள பதிவு கருவிகளை மீட்க இயலாமல் போய்விடும். எனவே இத்தகைய வளிமக்கூடுகளை ஏவுவது பெரும் செலவு பிடிக்கும். செல்வ வளமான நாடுகள் மட்டுமே இத்தகைய முயற்சிகளை மேற்கொள்ள முடியும். வளி மண்ட லத்தில் குறிப்பிட்ட உயரங்களில் நிலையாக மிதக்கக் கூடிய டெட்ரூன்கள் எனப்படும் வளிமக் களைப் பல நாடுகள் பயன்படுத்துகின்றன. அவை செயற்கைக்கோள்கள் மூலம் கண்காணிக்கப்படும். ஏவூர்திகளில் பதிவு கருவிகளைப் பொருத்தி 60 கிலோமீட்டர் வரை உயரமுள்ள வளிமண்டலப் பகுதி களை ஆராய்கின்றனர். ஏவூர்தி பெரும உயரத்திற்குச் சென்றதும் பதிவு கருவிகளுடன் இணைக்கப்பட் டுள்ள வான்குடைகள் விரிந்து புவிக்கு இறங்கி விடும். அவை கீழே இறங்கும்போது ராடார் மூலம் அவற் றின் போக்கைக் கணித்து மேல் வளி மண்டலத்தில் காற்றோட்ட வேகங்களைக் கணக்கிடுகின்றனர். கூ பெரும்பாலான வணிக விமானங்களில் உயரம், வளி அழுத்தம். வெப்பநிலை, பறக்கும் உயரத்தில் காற்று வீசும் திசை, அதன் வேகம் ஆகியவற்றை அளவிடும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அவை வெளியிடும் தகவல்கள் புவியிலுள்ள தரை நிலையங் களுக்கு இடைவிடாது அஞ்சல் செய்யப்படும். அத்