பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/526

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

506 காலநிலை வரைபடம்‌

506 காலநிலை வரைபடம் 1000 கிலோ மீட்டருக்கு மேல் பரிமாணமுள்ள புயல்கள், குறைந்த அழுத்த மண்டலங்கள் போன்ற வற்றின் போக்குகளைச் சரியாக ஊகிக்க முடிகிறது. ஆனால் அத்தகைய அமைப்புகளில் பொதிந்துள்ள சிறிய மணிக்கு அளவு நிகழ்வுகள் கால நிலையில் மணி மாற்றத்தை ஏற்படுத்த முடியும். இவற்றை முன்னறிவிப்புச் செய்யவியலாது. தரையமைப்பு, தாறு மாறாக உள்ள இடங்களில் இது மேலும் சிக்கலாகி விடுகிறது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் மழை அல்லது புயல் ஏற்படும் என்பதைச் சில மணிநேரத்தில்தான் சொல்ல முடிகிறது. ஆனால் பொதுவாக ஓரிடத்தைப் பெரும் புயல் ஒன்று தாக்கலாம் என்பதை 24 மணி நேரத்திற்கு முன் சொல்வி விடலாம். அடிக்கடி தோன்றாத பனிப்புயல் போன்ற நிகழ்வுகளை 24 மணி நேரத்திற்குக் குறைவான நேரங்களிலேயே முன்னறிவிப்புச் செய்ய முடிகிறது. 5 நாள்களுக்கு முன் வரை சராசரி வெப்பநிலை மழை அளவு போன்றவற்றை ஓரளவு சரியாகவே ஊஊகிக்க முடி கிறது. கே. என். ராமச்சந்திரன் காலநிலை வரைபடம் ள புவியைப் பல மண்டலங்களாகப் பிரித்துள்ளனர். அவை உள் மண்டலம், நில மண்டலம், நீர் மண்ட லம், வளி மண்டலம் என நால்வகைப்படும். இவை தவிர நெருப்பு மண்டலம், உயிர் மண்டலம் என்று பிரிப்பதும் உண்டு. இவற்றுள் வளிமண்டலம் புவிக்கு மேலே வான்வெளியில் உள்ளது. இம்மண்டலத்தி லுள்ள காற்றின் தன்மை, ஈரப்பதம் போன்ற தகவல் களை இந்திய வானியல் மற்றும் வளி மண்டல ஆராய்ச்சி நிலையங்கள் நாள்தோறும் வெளியிடு கின்றன. இவையே காலநிலை வரைபடம் (weather map) எனப்படும். இந்தியாவில் கல்கத்தா, பம்பாய், டெல்லி, சென்னை ஆகிய பெரு நகரங்களிலும், வேறு பல் இடங்களிலும், இந்திய வானியல் ஆராய்ச்சி நிலையத்தாரால் பற்பல ஆய்வுக்கூடங்கள் அமைக்கப் பட்டுள்ளன. இவை நாள்தோறும் வளிமண்டலத் தில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறிந்து தேவைக்கு ஏற்றாற்போல வரைபடங்களை வழங்குகின்றன. இவ்வரைபடங்கள் விமான நிலையம், வேளாண்மை, மீன் பிடித்தல், கப்பல் போக்குவரத்து, புயல், சூறா வளி முன்னெச்சரிக்கை, மழை பெய்யும் தகவல் போன்ற பல துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன. வரைபடங்களைத் தயாரிப்பதற்கான செய்திகளைப் பெறுவதற்குப் பயன்படும் கருவிகள், வெப்பமானி, மழை நீர் அளவு கருவிகள் காற்று அழுத்த அளவி, காற்றின் வேகம் மற்றும் திசை காட்டும் கருவி ஆகி யன. தற்கால வளிமண்டல் யலில் செயற்கைக் கோள்கள் {satellites) பெரும் பங்கு வகிக்கின்றன. அன்றாட வான் நிலையைக் கண்காணித்து வேண்டிய வளிமண்டலச் செய்திகளைத் தற்போது தருவது இன்சாட் 1-பி செயற்கைக்கோளாகும். காலநிலை 1 பி வரைபடத்தில் காணும் செய்திகள் வருமாறு: படத் தின் இடம், நாள், நேரம், வெப்பநிலை, காற்று அழுத்தம், மேகக் கூட்டம், மழைத்திறன், புயல் அல்லது சூறாவளி போன்ற இயற்கைச் சூழ்நிலை ஆகியன. காலநிலை வரைபடங்களில் பல வகை உண்டு. ஒரு பெரிய வளிமண்டல ஆராய்ச்சி நிலையத்தி லிருந்து 35 வகையான வரைபடங்கள் வெளிவரு கின்றன. இவ்வரைபடங்களில் தேவைக்கு ஏற்றாற் போல வேண்டிய வரைபடங்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். காலநிலை வரைபடங்களுள் மிகவும் பழக்கமானவை நாள் வரைபடங்களும் மணி வரைபடங்களுமாகும். அன்றாடம் நாளிதழ்களில் வெளிவரும் காற்று அழுத்தக்கோடுகளையும், குறை அழுத்தப்பகுதி, மிகு அழுத்தப் பகுதி, காற்று நகரும் திசை ஆகியவற்றையும் காணலாம். மணி வரைபடங்கள் வான ஊர்தி நிலையத்தாருக்கு மிகவும் இன்றியமையாதன. ஒவ்வொரு மணி இடைவெளியி லும் இவை வெளியிடப்படுகின்றன. இவற்றில் காற்று வீசும் திசை, வேகம் ஆகியவை அடங்கும். புயல், பெருமழை மற்றும் சூறாவளிக் காலங்களில் சிறப்பு வரைபடங்களும் வெளியிடப்படுவதுண்டு. அன்றாடம் வெளியிடப்படும் வரைபடங்களி லிருந்து பற்பல செய்திகளை அறிந்து கொள்ளலாம். வானத்தில் மேக மூட்டம், மழை மேகம், மழை பெய்யும் வாய்ப்பு. காற்றின் அழுத்தம் ஆகிய செய்தி கள் உள்ளன. செயற்கைக்கோள் தரும் செய்திகளி லிருந்து மழைமேகம், மழை, பனி பெய்யுமிடம் ஆகிய வற்றை அறிந்து கொள்ள முடியும். நிலப்பகுதி வரைபடங்கள் கடற்பகுதி வரை படங்களிலிருந்து சிறிது வேறுபட்டு அமைந்திருக்கும். கடல் வரைபடங்களில் கடல் மட்டம், கடல் மட்டக் காற்றழுத்தம், காற்றின் திசை ஆகியன குறிக்கப் பட்டிருக்கும். கடல் மட்டத்தில் வெப்பக் காற்றுப் பகுதியையும் குளிர்ந்த காற்றுப் பகுதியையும் பிரிக்கும் இடைநிலைப்பகுதி 'முன்னோடி எனப்படும். கடல் வரைபடங்களில் முன்னோடிகள் மற்றும் காற்றுக் குவியல்களின் (air masses தகவல்கள் மிகவும் முக்கியமானவை. புயல் காற்றுகள் முன்னோடிப் பகுதிகளிலேயே உருவாகின்றன. எனவே த்தகவல்களை நன்கு ஆராய்ந்து அவசர வரைபடங்களைத் தயாரித்து அளிப்பர். கால கடல் மட்ட வரைபடங்களோடு மேல்நிலைவரை படங்களும் உண்டு. இவ்வரைபடங்கள் கடல் மட்டத் திற்கு மேலே ஒரு குறிப்பிட்ட உயரத்தில் உள்ள வளிமண்டலச் செய்திகளைத் தருகின்றன. ஆனால்