காலம் (இயற்பியல்) 509
கணிக்கப்பயன்படுகிறது. சூரியனைச் சுற்றும் புவியின் திசைவேக மாறுதல்களாலும் பாதை மாறுதல் களாலும் ஏற்படும் நேர மாற்றங்களைக் கணக்கில் கொண்டு சராசரி சூரிய நேரம் கணக்கிடப்படுகிறது. சூரியன் தன் பாதையில் செல்லும் வேகத்திற்குச் சம வேகத்தில் வான்மையக் கோட்டில் செல்லும் ஒரு கற்பனைப் புள்ளியின் மணிக்கோணம் சராசரி சூரியக் காலமாகக் கொள்ளப்படுகிறது. சூரியக் காலமும், கோண அளவைக் காலமும் புவியின் சுழற்சியையே அடிப்படையாகக் கொண்டுள்ளன. அளவு UTO பொதுக் காலம். வானியல் நோக்குகள் மூலம் கணிக்கப்படும் புவியின் சுழற்சியின் அடிப்படையிலான சராசரி, சூரிய நேரம் UT | (universal time 1) எனப் படுகிறது. உலகின் பல பகுதிகளிலும் உள்ள வானியல் நோக்குக் கூடங்களில் உள்ள அளவுகள் இச்சராசரி அளவு காணப் பயன்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட இடத்தில் எடுக்கப்படும் கால எனப் படுகிறது. இதிலிருந்து UTI அளவு பெறத் துருவ இயக்கத்திற்கான சரியீடு செய்யப்படல் வேண்டும். துருவ இயக்கத்தால் ஏற்படும் விளைவு பல நூறு நொடி அளவு இருக்கும். பாரிசில் உள்ள அனைத் துலகக் காலக் கணிப்பீட்டு நிலையம் (The Bureau International de I' Heure-BJH பல வானோக்கு நிலையங்களிலும் இருந்து அளவீடுகள் பெற்று UT 1 நேரத்தைக் கணக்கிடுகிறது. பல புவியின் வேகம் மாறும் தன்மையுள்ளதாலும், காலக் கணக்கீடுகளுக்கு நுட்பமான காலக் கணிப்பு தேவை என்பதாலும் 1969 இல் மற்றோர் அடிப்படை மூலம் நொடி என்பது வரையறுக்கப் பட்டது. இவ்வடிப்படை மூலம் சீசியம் அணுவின் இரு குறிப்பிட்ட ஆற்றல் நிலைகளுக்கிடையே ஏற்படும் ஆற்றல் பரிமாற்றத்தால் பெறப்படும் கதிர்வீச்சின் 9,192,631,770 அலைவு நேரங் களுக்குச் சமமான கால இடைவெளி என்று வரை யறுக்கப்பட்டது. இந்த நொடி அனைத்துலகச் செந்தர நாடி என்று கூறப்படுகிறது. இது வானியல் கணக்கீடுகள் பொறுத்து மாறுவதில்லை. உலகெங்கிலும் உள்ள காலம் கணக்கிடும் ஆய்வுக் கூடங்களில் இருந்து பெறப்படும் காலக் கணக்கீடு களை BIH சேகரிக்கிறது. இந்நேரம் அனைத்துலக அணுவியல் நேரம்(InternationalAtomic Time -TAI) எனப்படுகிறது. ஒருங்கமைத்த பொதுக் காலம் என்பது அணு வியல் நேரத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனாலும் காலக் கட்டத்தை மாற்றியமைத்து UTC இன் மதிப்பிற்கும் UTI இன் மதிப்பிற்கும் 0.9 நொடியைவிடப் பெரும் வேறுபாடு ஏற்படாதவாறு பார்த்துக் கொள்கிறது. பெரும்பாலான நாடுகளின் தலநேரத்தின் (civil time) அடிப்படையாக UTC அமைகிறது. இது கிரீன்விச் சராசரி நேரம் எனவும் காலம் (இயற்பியல்) 509 கூறப்படுகிறது. UTC நேரத்தை UTI நேரத்திற்குச் சமமாக மாற்றச் சில முழு நொடிகளைக் கூட்டவோ குறைக்கவோ வேண்டும். BIH எடுத்த முடி வின்படி ஒவ்வோர் ஆண்டும் இந்தத் தாவல் நொடிகள் (leap seconds) ஜூன் மாதம் 30 ஆம் தேதி அல்லது டிசம்பர் 31 ஆம் தேதி 23 மணி 59 நிமிடம் 59 நொடியில் சேர்க்கப்படுகின்றன. UTC, TAI இல் இருந்து முழு அணுவியல் நொடிகள் வேறுபடும். இயங்கு காலம் (dynamical time). இயங்கு காலம் என்பது சூரியன், சந்திரன்,கோள்கள் ஆகியவற்றின் சுழல் யக்கத்தின் அடிப்படையில் அமைந்தது. பாரி மைய இயங்கு காலம் (Bary Centric Dynamical Time - TDB) என்பது பாரி மையத்தைக் குறிப்பு நோக்கும் புள்ளியாகக் கொண்டு கணிக்கப்படும் இயங்கு காலத்தைக் குறிக்கும். புவிமட்ட இயங்கு காலம் (Terrestial Dynamical Time - TDT) என்பது பெருமளவு பயன்படுத்தப்படும் ஒரு கால முறையாகும். TDT TAI + 32.184 நொடிகள் எனும் சமன்பாட்டின் மூலம் TAI மதிப்பில் இருந்து TDT இன் மதிப்பைக் கணிக்கலாம். . அளவை . தல நேரமும் செந்தர நேரமும் (civil and standard time). புவிச் சுழற்சியை அடிப்படையாகக் காண்ட நேர அளவுகள் மணிக்கோணங்களாக வரையறை செய்யப்படுவதால், ஒரு கணத்தில் அவை புவியில் இடத்திற்கு இடம் மாறுபடுகின்றன. குறிப்புப் புள்ளி யாகக் கருதப்படும் கற்பனைப்புள்ளி கிரீன்விச்சில் நெடுங்கோட்டுக் (u meridian) நேர் மேலே இருந்தால் கிரீன்விச்சில் சராசரி சூரிய நேரம் நண்பகல் 12 மணியாக இருக்கும். அந்த நேரத்தில் கிரீன்விச்சின் கிழக்கே அமைந்த நாடுகளில் நடுப் பகலைவிடக் குறைந்த நேரமாகவும் கிரீன்விச்சின் மேற்கே அமைந்த நாடுகளில் நண்பகலைக் கடந்த நேரமாகவும் இருக்கும். இந்த நேர வேறுபாடு 15 நெடுங்கோட்டு அளவு வேறுபாட்டிற்கு 1 மணி என்று இருக்கும். அதே நேரத்தில் 180 நேர் கோட்டுப் பகுதியில் நடு இரவு 12 மணியாக இருக்கும். இதனால் மேற்கு நோக்கி உலகைச் சுற்றும் ஒருவரின் காலக் கணக்கீடு பிறர் கணக் கீட்டோடு ஒத்திருக்க வேண்டுமானால்தம் நாட்கணக் தில் ஒன்றைக் கூட்டிக் கொள்ள வேண்டும். கீழக்கு நோக்கி உலகைச் சுற்றுபவர் தம் நாட்கணக்கில் ஒன்றைக் கழித்துக் கொள்ள வேண்டும். அனைத்துலக நாட்கோடு என்பது நாள் மாறும் இடமாகக் கருதப் படும், ஒரு கற்பனைக் கோடு. இது 180 நெடுங் கோட்டைப் பொறுத்துத் தொடர்ச்சியாக மாறு வதைத் தவிர்க்க மண்டல நேரம் அல்லது தல நேரம் என்பது பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் புவி 24 கால மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வை 0°, 15°, 30° போன்ற நெடுங்கோடுகளை மாகக் கொண்ட 15° அகலமுள்ள மண்டலங்கள். (படம் 1). மண்டலத்தின் மைய நெடுங்கோட்டின் மைய