பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்காரை 33

கார்பன் அணுவுடன் உண்டாவதில்லை. இவ்வினை ஒரேபக்கக் களைதல் வழிமுறையை மெய்ப்பிக்கிறது. தனைப் பிரட்டின் விதி. சிறிய வளையங்கள் கொண்ட பால அமைப்பு இருவளையச் (bridged bicyclic) சேர் மங்களில் வளையச் சந்திப்புக் கார்பன் அணுக்களில் இரட்டைப் பிணைப்பு உண்டாவதில்லை. பிரட் வி எனலாம். இவ்விதி களைதல் வினை களின் பாதையைக் கட்டுப்படுத்துகிறது. களைதல் வினைகள் இருவளையச் சேர்மங்களில் நிகழும்போது வளையச் சந்திப்புக் கார்பன் அணுக்களில் இரட்டைப் பிணைப்பு உண்டாவதில்லை. எ.கா. OH H 4. 8, 4. காநம் வெளியேறும் தொகுதி வளையச் சந்திப்புக் கார்பன் அணுவில் இருக்குமாயின் அச்சேர்மம் களைதல் வினைக்கு உள்ளாவதில்லை. எ.கா: Br மேற்காணும் சேர்மத்தைக் காரத்துடன் சேர்க்கும் போது களைதல் வினை நடப்பதில்லை. இந்த பிரட் டின் விதி வளையங்களில் ஏழு அல்லது அதற்கு. மேற்பட்ட கார்பன் லுக்கள் அணு அமைந்த இ வளையச் சேர்மங்களுக்குப் பொருந்துவதில்லை. சண்முக சுந்தரம் நூலோதி. Jerry March, Advanced Organic Chemistry. Wiley Eastern Limited, New York, 1986; I.L. Finar, Organic Chemistry, Vol. 2., ELBS, London, 1975; Norman L. Allinger., et. al., Organic Fourth Edition, Worth Publishers, Chemistry, Inc., Newyork, 1974. கற்காடகச்சிங்கி(சித்த மருத்துவம்) கற்காடகச்சிங்கியை வாயிலடக்கிக் கொண்டு இதன் சாரத்தை விழுங்க இருமடலங்கும். இதைக் காடி விட்டரைத்துப் பூச வெண்குஷ்டம் நீங்கும். புரை யோடிய புண்களையும், இரத்த மூலத்தையும் இதன் அ.க. 8 3 கற்காரை 33 புகை குணப்படுத்தும். இதைத் தேனுடன் கலந்து சாப்பிட உடல் வலிமை பெறும். இதைச் சர்க்கரையுடன் கலந்து உட்கொண்டு பால் அல்லது நீர் அருந்த பெண்களுக்குண்டாகும் வெள்ளை நிற்கும். ஆனால் இதை உட்கொண்ட வுடனே கோதுமை அப்பம் நெய் இவற்றை வழங்க வேண்டும். கற்காடகச்சிங்கி, மருதம்பட்டை, திப்பிலி இவற்றைப் பொடித்து, ஒரெடையாக எடுத்து இதில் 1.75-3.5 கிராம் வரை தேனில் கொடுக்க-இருமல் தீரும். கற்காடசுச் சிங்கி, சுக்கு, திப்பிலி, கஸ்தூரி மஞ் சள், முருக்கம் பிசின் இவற்றைச் சமஎடை எ எடுத்துப் பொடித்து 1.75 கிராம் வீதம் தேனுடன் சேர்த்துக் கொடுக்க வறட்டிருமல் தீரும். சே. பிரேமா கற்காரை A சிமெண்ட், பொடித்தகப்பி (crushed aggregate) அல்லது இயற்கையில் கிடைக்கும் கூழாங்கற்குவியல் (pebble} மணல் இம்மூன்றையும் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் சேர்த்து அக்கலவையில் நீர் வார்த்து நன்றாகக் கலந்து 'வரும் பொருளே கற்காரையாகும். காரணமான கற்காரை ஒரு கலப்புப் பொருளாக இருந்தாலும் அதற்கெனப் பல சிறப்புத் தன்மைகள் உண்டு. இருப்பினும் அப்பண்புகள் கூடுவது, கலவைக்குக் மூலப்பொருள்கள்-சிமெண்ட், கற்குவி யல், மணல், நீர் இவற்றின் இயல்பைக் கொண்டே அமையும். தரமான கற்காரை அமைய மூலப் பொருள்கள் தரமுள்ளவையாக இருக்க வேண்டும்; கலவையின் விகிதம், கணக்கீட்டின்படி அமைய வேண்டும்; நீர்- சிமெண்ட் விகிதம் குறிப்பிட்ட அளவில் இருக்க வேண்டும்; அதிர்வியால் (vibrator) கெட்டித்தல் வேண்டும்; கற்காரையைத் தக்க முறை யில் ஆற்றுதல் (curing) செய்ய வேண்டும். கற்காரையில், நான்கில் மூன்று பங்கு கப்பிகள் அமைவதால். கற்காரையின் திறனைக் கப்பிகள் வரம்புக்குட்படுத்துகின்றன. எனவே வலிவற்ற சுப்பிகளால் வலிமைபெற்ற கற்காரையை உண்டாக்சு யலாது. மேலும் கப்பிகளின் திறனோடுதான் கற்காரையின் நீடித்து உழைக்கும் திறனும், அதன் அமைப்பியல் பயனும் (structural performance) அமையும். கப்பிகள் இயற்கையிலே உண்டான பாறைகளின் பகுதிகளாகும். இப்பாறைகள் காலப் போக்கில் உடைந்து சிதறிக் கப்பிகளாகின்றன. தேவை கூடவே, பாறைகளைக் குதைத்தெடுத்து (quarrying) நொறுக்கும் பொறியில் இட்டுக் கப்பி களாக்குகின்றனர்.