காலம் (கணிதம்) 511
என எழுதப்படும். இதன்படி 1009 எனும் நேரம் 10:09 A.M.என்றும் 1509 எனும் நேரம் 3:09 P.M. என்றும் குறிப்பிடப்படுகின்றன. இம்முறையில் நடுப் பகலையும் நடு இரவையும் குறிப்பிடக் குழப்ப மில்லாமல் 12:00 நண்பகல் என்றும், ஜூலை 2-3 12:00 நடு இரவு என்றும் குறிப்பிட வேண்டும். நேரக் குறிப்பு மிகவும் முக்கியமாக உள்ள அலுவல் களில் பொதுவாக 12:00 என எழுதுவது தவிர்க்கப் படுகிறது. இதற்குப் பதில் 11:59 அல்லது 12:01 எனக் குறிப்பிடப்படுகிறது. நடு இரவிற்கடுத்த முதல் நிமிடம் 12:01 A.M. என்றும் நண்பகலுக்கடுத்த முதல் நிமிடம் 12:01 P.M. என்றும் குறிப்பிடப் படுகின்றன. கொடுக்கப்பட்ட வரைபடம், பல நேர மண்டலங் களையும் அவற்றின் நெடுங்கோட்டு அளவு, எண். குறியெழுத்து ஆகியவற்றையும், கிரீன்விச்சில் நண் பகலாக இருக்கும்போது பிற மண்டலங்களின் நேர அளவையும் குறிப்பிடுகிறது. உலகின் பல பகுதிகளின் நேர அளவீடுகளை அனைத்துலகக் காலக் கணிப் பீட்டு நிலையம் (BIH) ஒருங்கமைக்கிறது. பொது வாக அனைத்து நாடுகளும் தங்கள் தலநேரங்களை வானொலி, தொலைக்காட்சி, தொலைபேசி போன் றவை மூலம் தெரியப்படுத்துகின்றன. இவ்வாறு அறி விக்கும் நிலையங்கள் தங்களுக்குள்ளே நேரத்தைச் சீர்படுத்த வானொலி நேரக்குறியீடுகள். செயற்கைக் கோள் அனுப்பும் நேரக் குறியீடுகள் ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றன. இந்தியாவில் செல்லும் மண்டல நெடுங்கோடு 756 கிழக்கு நெடுங்கோடாகும். தன் நேர மண்டலம் E எனும் எழுத்தாலோ மண்டல எண் - 5 எனும் எண்ணாலோ குறிப்பிடப்படும். தல நேரம் இந்தியச் செந்தர நேரம் எனக் குறிப்பிடப்படுகிறது. கிரீன் விச்சில் நண்பகலாக இருக்கும்போது இங்கு நேரம் பிற்பகல் 5 மணியாக இருக்கும். இந்தியச் செந்தர நேரத்தில் இருந்து கிரீன்விச் செந்தர நேரம் காண 5 மணி நேரத்தைக் கழிக்க வேண்டும். வெ. ஜோசப் நூலோதி. Donald E. Tilley, Walter Thumm, Physics of College Students, Cummings Publishing Company for California, 1976. Douglas C. Giancoli, General Physics, volume II, Prentice Hall, New Jersy. 1984. காலம் (கணிதம்) வாழ்வின் அன்றாட நிகழ்ச்சிகளுக்கும் செயல்முறை களுக்கும் இன்றியமையாதது காலம் (time) ஆகும். காலத்தை நேரம், பொழுது என்றும் குறிப்பிடுவது காலம் (கணிதம்) 511 வானியலில் வழக்கம். காலத்தைக் காட்டும் கருவி காலங்காட்டி அல்லது கடிகை (clock) எனப்படும். பல காலக்கணிப்பு முறைகள் உள்ளன. மின்வழி நேரம். புவி தன் அச்சைச்சுற்றித் தன்னைத்தானே ஒரு முறை சுழல்வதற்கு எடுத்துக் கொள்ளும் நிலையான காலம் மீன்வழி நாள் (sidereal day) எனப்படும். மேலும், ஒரு விண்மீன் அல்லது மேடமுதற்புள்ளி (y) அடுத்தடுத்து மேல் உச்சி அல்லது கீழ் உச்சியைக் கடக்கும் நேரங்களுக் கிடைப்பட்ட காலத்தையும் ஒரு மீன்வழிநாள் என்று வரையறுக்கலாம், மேல் உச்சியைக் கடக்கும் போது மீன்வழி நாள் தொடங்குகிறது என்றும், இந்நேரத்தை மீன்வழி நண்பகல் (sidereal noon) என்றும், கீழுச்சியைக் கடக்கும்போது மீன்வழி நள்ளிரவு (sidereal midnight) என்றும் குறிப்பிடலாம். எனவே, ஒருமீன் வழிநாள் என்பது அடுத்தடுத்த இரு மின்வழி நண்பகல் அல்லது நள்ளிரவுகளுக்கு இடைப் பட்ட நேரம் ஆகும். ஒரு மீன்வழிநாள் 24 மீன்வழி மணிகளாகவும் (sidereal hours) ஒவ்வொரு மணியும் 60 மீன்வழி நிமிடங்களாகவும் ஒவ்வொரு நிமிடமும் 60 மீன்வழி நொடிகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. 7.24 மீன்வழி மணிகளில் 360° சுற்றுவதால், ஒரு மீன் வழி மணியில் 15' உம் ஒருமீன் வழிநிமிடத்தில் 15'உம், ஒரு மீன்வழி நொடியில் 15 உம் கடக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது y, 10 செல்ல எடுக்கும் நேரம் 4 நிமிடமாகும். 7இன் நேரக் கோணம் H ஆனால் அந்த நேரத்தில் மீன்வழி நேரம் மணியாகும். H 15 தோற்றச் சூரியன் நேரம். சூரியன் ஒரு குறிப்பிட்ட டத்தின் மேலுச்சியைக் கடக்கும் நேரம் அந்த இடத்தின் தோற்ற நண்பகல் (apparent moon) என்றும், கீழுச்சியைக் கடக்கும் நேரம் தோற்ற நள்ளிரவு (apparent midnight) என்றும் கூறப்படும். அடுத்தடுத்துள்ள இருதோற்ற நண்பகல்களுக்கு அல்லது தோற்ற நள்ளிரவுகளுக்கிடையேயுள்ள காலம் தோற்றச் சூரிய நாள் (apparent solar day) எனப்படும். தோற்றச் சூரிய நாள், தோற்ற நள்ளிரவிலிருந்து கணக்கிடப்படுகிறது. நாள் மீன்வழி நாளைவிட 4 நிமிடம் மிகுதியாக உள்ளது. அதாவது ஒரு சூரிய வழித் தோற்ற நாள் 1மீன் வழிநாள் + 4மீன்வழி நிமிடங்கள் ஆக 3654 சூரிய வழித் தோற்ற நாள் =1 3661 மீன் வழிநாள் ஓராண்டு எனப்படும். சூரியனின் வல ஏற்ற மாற்றத்தால் மீன்வழி நேரம். தோற்றச் சூரிய நேரம் இரண்டுமே மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு, நிலையான நேரத்தைக் காட்டாமையால் பயன்படவில்லை.