பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/532

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

512 காலம்‌ (கணிதம்‌)

512 காலம் (கணிதம்) வான சராசரி சூரிய நேரம் (mean solar time). சூரியன் தோற்றப் பாதையில் (ecliptic) சீரான கோண வேகத்துடன் இயக்கவிடைச் சூரியின் (dynamical mean sun) என்னும் ஒரு கற்பனைப் புள்ளி இயங்குவ தாகவும் நடுவரையில் (celestial equator). சீரான கோண வேகத்துடன் வான சராசரி சூரியன் (astronomical mean sun) என்னும் மற்றொரு கற்பனைப் புள்ளி இயங்குவதாகவும், இவ்விரண்டு புள்ளிகளும் ? விலிருந்து ஒரே நேரத்தில் புறப்பட்டு 360° அதனதன் பாதையில் சுற்றுவதாகவும் கொள்ளப்படும். இரண்டும் சீரான வேகத்தில் நகர் வதால், எந்த நேரத்திலும் இயக்கவிடைச் சூரியனின் நெட்டாங்கும் (longitude) சராசரி சூரியனின் வல இருக்கும். ஏற்றமும் (right ascension} சராசரிச் சூரியனின் சீரான வல ஏற்ற மாற்றத்தின் அடிப்படையில் சராசரி சூரிய நேரம் அல்லது சூரிய வழிச் சராசரி நேரம் கணக்கிடப்படுகிறது. இந்நேரம் தோற்றச் சூரியன் நேரத்திலிருந்து + 16 நிமிடங்கள் வரை வேறுபடும். சராசரி சூரியன் ஓரிடத்தின் மேலுச்சியைக் கடக்கும்போது அவ்விடத் தின் சராசரி நண்பகல் (mean noon} என்றும், கீழுச்சியைக் கடக்கும்போது சராசரி நள்ளிரவு (mean midnight) என்றும் குறிப்பிடப்படும். இந்நாள் நள்ளிரவிலிருந்து தொடங்குகிறது. இது வழக்கத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நேரம் ஆகும். சமமாக நாள்தோறும் புவி, மேற்கிலிருந்து கிழக்காகத் தன்னைத்தானே சுற்றுவதால், புவியின் மேலுள்ள நாடுகள் அனைத்திலும் நேரம் ஒரேமாதிரியாக இருக் காது. சூரிய உதய நேரமும், மறையும்நேரமும் இடத் திற்கு இடம் மாறும். இதனால் பல ன்னல்கள் ஏற் பட்டன. இவற்றைத் தவிர்க்க 1884 ஆம் ஆண்டு அனைத்து நாடுகள் கூட்டமொன்றில், இங்கிலாந்து நாட்டிற்கருகில் உள்ள கிரீன்விச் வழியாகச் செல்லும் நெட்டாங்கை 0 என்று குறிப்பிட்டு, புவியின் பரப்பை, நெட்டாங்கு அளவில் ஒவ்வொரு பிரிவும் 15 ஆக இருக்குமாறு 24 பிரிவுகளாகப் பிரித்தனர். கிரீன்விச்சின் இருபக்கமும் 7 ஆக உள்ள ஒரு பிரிவும், பின்னர் கிழக்கேயும் மேற்கேயும் 15 ஆக ஒருபிரிவும் கூட்டிக் கொள்ள வேண்டும். கிரீன்விச் நேரத்தை நியம நேரம் (standard time) ஆகக் கொண்டு,கிழக்கேயுள்ள நாடுகளின் நேரம் கூடுதலாக வும், மேற்கேயுள்ள நாடுகளின் நேரம் குறைவாகவும் இருக்கும். அந்தந்தப் பிரிவில் உள்ள L ங்களனைத் திற்கும் இது ஒரே நேரமாக இருக்கும். கிரீன்விச் நேரத்திற்கும அந்தந்தப் பிரிவு நேரத் திற்கும் உள்ள வேறுபாடு முழுமணி அல்லது அரை மணி நேரத்திலிருக்குமாறு கணக்கிடப்பட்டுள்ளது.

  • நெட்டாங்கு உடைய இடத்தின் சராசரி நேரம் =

கிரீன்விச் சராசரி நேரம் + மணியாகும். இது 15 அந்தாட்டின் நியம நேரமாகும். இந்திய நாட்டின் 15 நியம நெட்டாங்கு 821° கிழக்கு ஆவதால், இந்திய நியம நேரம் (Indian StandardTime) கிரீன்விச் சரா சரி நேரம் + 821 மணி அல்லது கிரீன்விச் சரா சரி நேரம் + 5 மணி 30 நிமிடம் ஆகும். ஒவ்வொரு நாட்டிலுள்ள அனைத்து ஊர்களும் அந்தந்த நாட்டு நியம நேரத்தைப் பின்பற்ற, அவ்வப்போது வானொலி போன்றவற்றின் மூலம் நியம நேரம் அறிவிக்கப்படுகிறது. உலகளாவிய 1925 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி வரை கிரீன்விச் சராசரி வானியல் நேரம் (Greenwich Mean Astronomical Time-GMAT) பகல் நேரத்திலிருந்து பின்னர் கணக்கிடப்பட்டது. நேரம் Universal Time, UT) என்று குறிப்பிடப்பட்டு நள்ளிர விலிருந்து கணக்கிட 12 மணி நேரம் கூட்டப்பட்டது. பின்னர் UT கிரீன்விச் சராசரி நேரமாக (Greenwich Mean Time) மாற்றப்பட்டு GMT எனக் குறிக்கப் பட்டது. எஃபிமெரீஸ் நேரம். தற்போது புவியின் சுழற்சி வேகம் சற்றுக் குறைந்திருப்பதாகவும், அதனால் நாள்பொழுது கூடுதலாக இருப்பதாகவும் அறியப் பட்டுள்ளது. மேலும் ஆண்டின் முதல் பகுதியில் புவி வேகமாகச் சுழல்வதாகவும், பிற்பகுதியில் மிகவும் மதுவாகச் சுழல்வதாகவும், இவற்றின் சராசரியாகப் புவியின் வேகம் சற்றுத் தடைப்பட்டிருப்பதாகவும், இதன் காரணமாக ஒரு நூற்றாண்டில் ஒரு நொடியின் சிறிய பின்ன அளவில் நாள்பொழுது அதிகரிப்ப தாகவும் கணக்கிட்டுள்ளனர். 1952 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரோம் நகரத்தில் நடைபெற்ற அனைத்துலக வானியல் சங்கத்தின் எட்டாம் பொதுக்கூட்டத்தில், கிரீன்விச் சராசரி நேரம் புவியின் சுழற்சியைச் சார்ந்துள்ளமை யாலும், சுழற்சியில் சிறு மாறுதல் உள்ளமையாலும் 1900 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், சூரியனின் நெட்டாங்கு 279°41′48" ஆக இருக்கும்போது, மீன் வழி ஆண்டின் நேர அலகை அடிப்படையாகக் கொண்டு நேரம் குறிக்கவேண்டும் என்றும், அதற்கு எஃபிமெரீஸ் நேரம் (ET) என்று பெயரிடவேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. அன்று ET சரியாக dgh ஆசு இருந்தது. இதற்காக 1900 இல் கிரீன் விச் கோட்டுக்கருகே மேற்கில் 0-95 அருகிலும் 1960 இல் 8 776 இலும் ஒரு கற்பனைக் கோடு உண்டாக்கப்பட்டது. 1972 இலிருந்து அனைத்துலக ணுக்காலம் (International Atomic Time-JAT) பயன் படுத்தப்படுகிறது. இந்நேரம் ET இன் நேரத்தைவிட 32.2 நொடி குறைவாகவுள்ளது. இராணுவச் சேவைக்கு என 24 மணியுள்ள முறை பயன்படுத்தப்படுகிறது. 4 லக்கங்களைச் கொண்ட நேரம் கொடுக்கப்படும். முதல் இரண்டு