பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/538

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

518 கால வரைப்படிவு இயல்‌

5/8 கால வரைப்படிவு இயல் A பயனுள்ளது. ஒவ்வொரு காலத்திலும் பல்வேறு வகை யான விலங்குகளும் பயிர்களும் தோன்றியுள்ளன. இவை காலநிலை வளர்ச்சியால் படிப்படியாக மாற்றத் திற்கு உள்ளாயின. இவை இறந்தவுடன் இவற்றின் கடின உறுப்புகளான மேலோடுகள், பற்கள், எலும்பு கள். மரங்களின் தண்டுப்பகுதி போன்றவை தொல் லுயிர்ப் படிவுகளாகின்றன. படிவு பாறைகளிலேயே தொல்லுயிர்ப் படிவுகளை மிகுதியாகக் காணலாம். உயிரினங்களும் பயிரினங்களும் சூழ்நிலைக்கேற்றவாறு தத்தம் பண்புகளை மாற்றிக் கொள்வதால் அவற் றின் புறத்தோற்றத்திலும் வேறுபாடுகள் காணப் படலாம். எனவே ஒரு குறிப்பிட்ட விலங்கினமோ. பயிரினமோ குறித்த காலத்தை உணர்த்தும், சிற்சில உயிரினங்கள் மிகக் குறுகிய காலத்தில் மட்டுமே வாழ்ந்திருக்கும். அவ்வகை உயிரினங்கள் உலகின் எல்லாப் பகுதிகளிலும் பரவலாகக் காணப்பட்டால் அவை ஒரு சிறந்த தொல்லுயிர்ப்படிவாக அமை கின்றன. கிராப்டோலைட் என்ற உயிரினம் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும். இந்த உயிரினப் பூச்சிகள் ஆர்டோவிசியன் காலத்தில் தோன்றிச் சைலூரியன் காலத்தில் முற்றிலும் மறைந் தன எனவே கிராப்டோலைட் உள்ள பாறை களை, ஆர்டோவிசியன், சைலூரியன் காலத்தைச் சேர்ந்தவை என எளிதில் கண்டுபிடிக்க முடியும். மேலும் கிராப்டோலைட் உயிரினங்களின் வெளித் தோற்றத்தில் பற்பல மாற்றங்கள் குறுகிய கால டை வெளியிலேயே நி கழ்ந்துள்ளன. எனவே வெளித்தோற்றப் பண்புகளைக் கொண்டு காலத்தை மிகவும் துல்லியமாகக் கணக்கிட முடியும். சிற்சில பாறைகளில் ஒரு குறிப்பிட்ட உயிரினம் உலகம் முழுதும் நன்கு பரவியிருக்கும். டிரைலோபைட் உயிரினங்கள் கேம்பிரியன் காலத்தில் நன்கு பரவியி ருந்தன. இவற்றைக் காலங்காட்டும் தொல்லுயிர்ப் படிவுகள் (Index fossil) என்பர். மூன்றாம் காரணி அடுக்கு (order of நிலை superposition). பாறைகள் படியும்போது, அடுக்கு நிலை ஏற்படுகின்றது. அடுக்குநிலை ஓர் இடத்தோடு மற்றோர் இடத்தை ஒப்புநோக்கிக் காலத்தைக் கண்டறிய உதவுகிறது. S படம் 1 இல் காட்டியுள்ள 'அ' இரு டங் களும் நீண்ட தூர இடைவெளிக்கிடையே காணப் படும் இரு படிவு தொகுதிகள். இவற்றின் அடுக்கு நிலையை ஒப்பிட்டு நோக்கும்போது இரண்டும் சமகாலத்தலை என்பது புலனாகும். இரு தொகுதி களிலும் ஒரே மாதிரியான அடுக்குநிலையைக் காண லாம். புவியின் 450 கோடி ஆண்டுகளும் அடுக்குநிலை, தொல்லுயிர்ப் படிவுகள், பாறை வகைகள் ஆகிய வற்றின் துணையோடு பல பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன. முக்கியப் பிரிவுகள் வருமாறு: . பல் கால அளவில் மிகச் சிறியது குறுங்காலம் (short time). குறுங்காலப் படிவுகள் பகுதி எனப்படும். பகுதிகள் கொண்டது நிலை. பல் நிலைகள் கொண்டது அடுக்கு. அடுக்குகள் சேர்ந்தது அமைப்பு. சில அமைப்புகளை உள்ளடக்கியது தொகுதி எனப் படும். இதுவே கால வரைப் படிவு இயலின் கால நிலையில் பெரும் பிரிவாகும். இப்பிரிவுகள் சமமான கால அளவைக் கொண்டவை அல்ல. ஒவ்வொன்றும் வேறுபடும் ஆண்டுகளைக் கொண்டது. ஜூராசிக் அமைப்பு 6 கோடி ஆண்டுகளாகும். ஆனால் கிரிட்டே சியஸ் அமைப்பு 7.5 கோடி ஆண்டுகளாகும். சிவப்புக்களி களிமண் சுண்ணாம்புப் பாறை களிமண் மணல் பாறை படம் 1. (அ), (ஆ)