காவலூர் வான் ஆய்வு நிலையம் 527
துள்ளன. இவ்வகை அல்லிவட்டம் குருசிபார்ம் அல்லி இதழ் அமைவு எனப்படுகிறது. மகரந்தத் தாள்கள். ஆறு-இரண்டு வரிசையாக உள்ளன. வெளி வரிசையில் இரண்டு குட்டையான மகரந்தத் தாள்களும், உள் வரிசையில் நான்கு உயரமான மகரந்தத்தாள்களும் காணப்படுகின்றன (tetradynamous). சூலகம். இரண்டு சூலிலைகளால் ஆன ஆன மேல் மட்டச் சூலகப்பை, சூல்கள் சுவரொட்டு முறையில் அமைந்துள்ளன. கனி. சிலிகுவா (siligua) என்னும் வெடிகனி வகையைச் சேர்ந்தது. வெடிகனி நீண்டு உருளை வடிவத்தில் உள்ளது. இதன் வால்வுகள், கீழ்ப்புறத்தி லிருந்து மேல்நோக்கி வெடிக்கும் விதைகளில் கரு பெரிய அளவில் காணப்படுகிறது. காலிப்பூச்செடி இனங்கள். பிராசிகா பேரினத்தின், பல்வேறு சிற்றினங்களும், வகைகளும், காய்கறி வகைசளுக்காகப் பயிரிடப்படுகின்றன. பிராசிகா லிரேசியா என்னும் முட்டைக்கோஸின் வகைகள் இலை, தண்டு, மஞ்சரி, விதை ஆகியவற்றிற்காகப் பயிரிடப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, கோல்ராபி என்னும் பிராசிகா காலராபா தாவரம் தண்டிற் காகவும், காலிப்பூச்செடி மஞ்சரிக்காகவும் பிராசிகா ஜன்சியா என்னும் கடுகுச்செடி விதைகளுக்காகவும் வளர்க்கப்படுகின்றன. வகை பிராசிகா ஒலிரேசியா என்னும் தாவரம். எங்கும் வளரக்கூடிய ஒரு பொதுவான குறுஞ்செடி. இது முட்டைக்கோஸ் என்று கூறப்படுகிறது. இந்தச் சிற்றினம், ஐரோப்பாவின் தென்மேற்குக் கடற்கரைப் பகுதியைத் தாயகமாகக் கொண்டது. இந்தச் சிற்றி னத்திலிருந்து பல வகைகள் மனிதனால் உண்டாக்கப் பட்டுத் தேர்வு முறையில் காய்கறி களாக வளர்க்கப்படுகின்றன. எனவே இவ்வகைத் தாவரங்கள் கோஸ் வகை அல்லது கோபிஸ் (gobbis) எனப்படும். பிராசிகா ஒலிரேசியா வகை பாட்ரிடிஸ் என்னும் காலிப்பூச்செடியின் இளம் மஞ்சரி, காய்கறி யாகப் பயன்படுகிறது. இதன் மஞ்சரியில் மலர்கள் நெருக்கமாக, அடர்ந்து காணப்படுகின்றன. இது பெரும்பாலும் மழைக்காலத்தில் சந்தைகளில் விற்கப் படுகிறது. இப்போது தென்னிந்தியச் சமவெளிகளில் பயிரிடப்படும் காலிப்பூக்களில் புழுக்கள் காணப் படுவதால் அவற்றைக் கவனமாகப் பயன்படுத்த வேண்டும். ந. வெங்கடேசன் நூலோதி. P. B. Pandey, Taxonomy af Angios- perms, S.Chand & Co, Ram nagar, New Delhi, 1982. காவலூர் வான் ஆய்வு நிலையம் 527 காலியோஃபிலைட் இது பொட்டாசியம் அலுமினியம் சிலிக்கேட்டின் மூன்று நிலைகளில் உள்ள பல வடிவங்களில் ஒன் றாகும். மிக அரிதாகக் காணப்படும் இக் கனிமம் டெக்ட்டோசிலிகேட் வகையைச் சேர்ந்ததாகும். மிகுதியான பொட்டாசியமும் குறைந்த அளவு சிலிக்காவும் கொண்ட எரிமலைக் கற்களிலேயே இ பெரும்பான்மையாகக் காணப்படுகிறது காலியோஃபிலைட் (kaliophilite) அறுகோணப் படிக அமைப்பில் உருவாகியுள்ளது. தன் படிகம் நீண்ட பட்டக் உருவமும், மிகக் குறைந்த பிளவும் (cleavage).அடிப்பிளவும் கொண்டுள்ளது. மோஸ். அளவில் இதன் கடினத்தன்மை 6; அடர்த்தி 2, 49- 2.67 ஆகும். மிக உயர்ந்த வெப்பநிலையில் இதன் படிமக் சூழ்நிலை பொட்டாசியம் அலுமினிய சிலிக்கேட்டுக் கும். சோடியம் அலுமினிய சிலிக்கேட்டுக்கும் இடைப்பட்டிருக்கும். மிகக் குறைந்த நிலையில் தன் படிகநிலை அமைப்பு நிறைவு பெறாமல் உள்ளது. இக்கனிமத்தின் வேதியியல் உட்கூறு KAlSiO,ஆகும். இதன் மூன்று வலிமையான ஒளி விலகல் வரிசை, செவ்விணை வடிவப் பக்கத்தில் 3,09 (100) ஆகவும். 2.593 (30),2.131 (25) ஆகவும் உள்ளது. இதன் ஒளி மாறிலி (optical constant) = 1.537; x = 1.533 ஆக உள்ளது. இக்கனிமம் எதிர் ஒளி (-) சுழற்றும் பண்புகளைக் கொண்டுள்ளது. கனிமத்தில் காணப்படும் பிளவு அடியிணை வடிவப் பக்கத்திலும் (0001), (10-10) பக்கத்திலும் தெளிவற்றுக் காணப் படுகிறது. காவியோஃபிலைட் இயற்கையில் நீண்ட சதுர வடிவமுடன் உருவாகிறது. இக்கனிமம் நிறமற்ற தாகவும், வெண்மையாகவும், ஆனால் ஒளி ஊடுருவும் தன்மையுடனும் உள்ளது. இதன் மிளிர்வு தெளிவாக இருக்கும். இயற்கையில் அரிதாகக் காணப்படும் காலியோஃபிலைட், எரிமலைக் கற்குழம்பின் மூலமாக உருவாகும் பையோடைட் அபிரக பைரோடூனைட் ஆகைட் - மெலிலைட் - கால்சைட் பாறைகளில் பெரும் பான்மையாகக் காணப்படுகிறது. இவ்வகைப்பாறை கள் சோமா மலைப் பகுதிகளில் அமைந்துள்ளன. காலியோபிலைட்டுடன் இணைந்துள்ள பிற கனிமங் களான லூசைட், ஹைனி போன்றவற்றுடன் உரு வானபாறைகள் இத்தாலியிலுள்ள அல்பானா மற்றும் லாடிவான் பகுதிகளில் காணப்படுகின்றன. எஸ். சுதர்சன் காவலூர் வான் ஆய்வு நிலையம் - வானியல் தொடர்பான ஆய்வுகள் நடத்தவும், புதிய கண்டுபிடிப்புகள் செய்யவும் இந்திய வான் இயற்