பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்காரை 35

படுவதால் தர நிர்ணயம் செய்யப்பட்ட பின்னரே பயன்பாட்டிற்கு வருகிறது. எனவே இதைப் பயன் படுத்துவதில் கடினம் இல்லை. இருப்பினும் நாட் பட்ட சிமெண்ட் கெட்டித்துப் போவதால், இவ்வகைச் சிமெண்ட்டைத் தவிர்த்தல் நன்று. ஏனெனில் இது கற்காரைத் திறனைக் குறைக்கும் (படம் 2,3). சிமெண்ட்டில் கலப்படம் செய்ய மின்நிலையங் களில் உண்டான சாம்பல் (fly ash), கற்குழிப்பொடி (quarry dust) ஆகிய இரண்டு பொருள்களைப் பயன் படுத்துகின்றனர். ஒருபிடி சிமெண்ட்டை நீருள்ள கண்ணாடிப்பாத்திரத்தில் போட வேண்டும். மிகுதி படம் 3. இடம்-காற்றூடும் சிமெண்டைத் தவிர்த்து அமைக்கப்பட்ட தளம்; வலம் காற்றூடும் சிமெண்டால் அமைக்கப்பட்ட தளம். கற்காரை 35 யான சிமெண்ட் மேலேயே மிதந்தால், அது சாம்பல் கலந்திருப்பதைக் குறிக்கும். மிகுதியான சிமெண்ட் கீழே சென்றுவிட்டால், அது கற்குழிப்பொடி கலந்திருப் பதைக் காட்டும். அத்தகைய சிமெண்ட்டைப் பயன் படுத்தாது அகற்றி விடவேண்டும். நீர். குடிநீரைப் பயன்படுத்தலாம்: உப்பு நீரைத் தவிர்க்க வேண்டும். நீரில் உள்ள உப்புகளுக்கு உயர் வரம்பு வரையறுக்கப்பட்டுள்ளது. அந்தவரம்புக்குள் உப்புகள் இருந்தால், அந்நீரைப் பயன்படுத்தலாம். கந்தக உப்பு (sulphate) - 500 மி.கி/லிட்டர் குளோரின் உப்பு (chloride) - 2000 மி.கி/லிட்டர் சாதாரண கற்காரைக்கு (plain concrete) 1000 மி. கி/லிட்டர் - வலிவூட்டிய கற்காரைக்கு (reinforced concrete). pH எண் 6 8. பொறியியலறிஞர்கள பல ஆய்வுகள் செய்த பின்னர் கற்காரையின் வலிமைக்கு ஏற்பக் கப்பி. மணல், சிமெண்ட், தீர் இவற்றிற்குக் கலவை விகிதம் அமைக்கின்றனர். அதையே வேறு கப்பி மணல் இவற்றிற்குப் பயன்படுத்துதல் தீங்கிழைக்கும். கப்பி, மணல் இவற்றின் பிறப்பிடம் (source) வேறு படுமாயின் அவற்றின் குணங்களும் மாறுபடும். எனவே மீளாய்வு செய்த பின்னர் பொறியியல் அறிஞர்களின் அறிவுரைப்படி தேவை ஏற்பட்டால் விகிதத்தை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். தளும்புக் கற்காரை (fresh concrete) சிறந்த செய்வினைமை (workability) பெற்றிருத்தல் வேண் டும். அப்போதுதான் கற்காரையைச் சட்ட அமைப் 8- 3 அ படம் 2 கடினப்படுத்தப்பட்ட கற்காரையின் குறுக்கு வெட்டுத் தோற்றம் ஒவ்வொரு கூட்டுப் பொருளைச் சுற்றியும் கற்காரைப் பசைஉள்ளது