பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/551

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காளான்‌ 531

காளான் 531 மேடை அமைத்துக் கொள்ள வேண்டும். காளான் படுக்கை அமைப்பதற்கு வைக்கோல் 10 கிலோ, விதைப்புட்டி இரண்டு, கொள் அல்லது துவரைப் பொடி 50 கிராம், வெள்ளைப் பாலித்தீன் தாள் ஒன்று ஆகிய மூலப்பொருள்கள் தேவைப்படும். வைக்கோலை 1 -1.25 மீட்டர் நீளமுள்ள சிறு கற்றைகளாகக் கட்ட வேண்டும். ஒரு படுக்கைக்கு மொத்தம் 28 கற்றைகள் தேவைப்படும். ஒரு கற்றை யின் எடை ஏறத்தாழ 0.25 கி.கி. ஆகும். கற்றை களை 6-8 மணி நேரம் நீரில் ஊற வைக்க வேண்டும். பின்னர் வெளியில் எடுத்து நீர் வடியும் வரை வைக்க வேண்டும். இதற்காகத் தயாரிக்கப்பட்ட மேடையில் நான்கு கற்றைகளை, அவற்றின் தடித்த பகுதி ஒரே பக்கத்தில் இருக்குமாறு வரிசையாக வைக்க வேண் டும். நடுவிலுள்ள இரண்டு கற்றைகளை மட்டும் பிரித்துச் சமமாகப் பரப்ப வேண்டும். நான்கு கற்றைகளை எடுத்து அவற்றின் கற்றை களை அவற்றின் தடித்த பகுதி முதலில் போடப் பட்ட நான்கு கற்றைகளின் எதிர்ப்புறம் அமையுமாறு அதாவது தலைகீழாகப் போட வேண்டும். இந்த எட்டுக் கற்றைகள் கொண்டது ஓர் அடுக்கு. கற்றைகளின் நீளத்தை இருபக்கத்திலும் சமமாக நறுக்கி விட வேண்டும். க் காளான் விதைப்புட்டிகளை உடைத்து அதற்குள் இருப்பவற்றை எடுத்து 2-4 செ.மீ தடிப்புள்ள சிறு துண்டுகளாக்கி இத்துண்டுகளைப் படுக்கை அடுக்கின் நான்கு ஓரங்களிலிருந்தும் 3-5 செ.மீ. தள்ளி 10 செ. மீ. இடைவெளியில் வைக்க வேண்டும். பின்னர் நன்கு அரைக்கப்பட்ட கொள் அல்லது துவரைப் பொடியை இத்துண்டுகளின் மேல் தூவ வேண்டும். பின்னர் இதன்மேல் இரண்டாம் அடுக்கை அமைக்க வேண்டும். இரண்டாம் அடுக்கும் முதல் அடுக்கைப்போல எட்டுக் கற்றைகளால் ஆனது. ஆனால் இரண்டாம் அடுக்கின் எட்டுக்கற்றைகளும் முதல் அடுக்கின் குறுக்காசு அமைய வேண்டும். பின்பு இரண்டாம் அடுக்கின் நீளத்தைச் சமமாக வெட்டிவிட்டு முதல் அடுக்கின் மீது வைத்தது போல விதைத் துண்டுகளை வை கொள் அல்லது வைத்து, துவரைப் பொடியைத் தூவி விட வேண்டும். மூன்றாம் அடுக்கை இரண்டாம் அடுக்குக்குக் குறுக்காகவும் முதல் அடுக்குக்கு இணையாகவும் அமைக்க வேண்டும். இறுதியாக விதைத் துண்டுகளை வைத்துக் கொள்ளுப் பொடியைத் தூவ வேண்டும். பின்னர் நான்காம் அடுக்கை மூன்றாம் அடுக்குக்குக் குறுக்காகவும், இரண்டாம் அடுக்குக்கு இணையாகவும் அமைக்க வேண்டும். ஆனால் இந்த அடுக்கில் நான்கு கற்றைகளை மட்டும் வைத்து நடுவிலுள்ள இரண்டு கற்றைகளைப் பிரித்துச் சமமாகப் பரப்பி விட வேண்டும். இந்த அடுக்கு, படுக்கைக்கு மூடியாக அ.க.8-34 அ அமையும். பின்னர் பாலித்தீன் தானைக் கொண்டு படுக்கையை மூடி வைக்க வேண்டும். A சூட்டடி வைக்கோலாக இருந்தால், வைக் கோலைப் புரியாக முறுக்கி, புரியை வளைத்து வரிசையாக அடுக்கி, ஒவ்வோர் அடுக்கையும் அமைக்கலாம். பின் நான்கு ஓரங்களையம் நறுக்கி விட வேண்டும். விதைத் துண்டு, கொள்ளுப் பொடி அல்லது துவரைப்பொடி இவற்றைப் பயன் படுத்திப்படுக்கையை அமைக்க வேண்டும். சமமாக ஒரு வாரத்திற்குப்பின் பாலித்தீன் தாளை நீக்கி டு முதல் முறையாக நீர் தெளிக்க வேண்டும். அதன்பின் இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு ஒரு முறை நீர் தெளித்து வர வேண்டும். நீர் தெளிக்கும் ஒவ்வொரு முறையும் பாலித்தீன் தாளை ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திற்குப் பின்னரே மீண்டும் படுக்கைகளின் மேல் மூட வேண்டும். காளான் படுக்கை போட்டது முதல் 10-15 நாளில் காளான் மொட்டுகள் தோன்றும். மூன்று அல்லது நான்கு நாளில் மொட்டுகள் பெரியனவாகி முட்டை வடிவத்தை அடைகின்றன. இச்சமயத்தில் அறுவடை செய்ய வேண்டும். முதல் அறுவடைக்குப் பின் 7-10 நாள் இடைவெளியில் காளான்கள் தொடர்ந்து தோன்றும். ஒரு படுக்கைக்கு ஏறத்தாழ 1-1.5 கி.கி காளான் விளைச்சல் கிடைக்கும். சிப்பிக்காளான் வளர்ப்பு. காளான் படுக்கைகள் அமைப்பதற்கு ஒரு கிலோ வைக்கோல். ஒரு விதைப் புட்டி, 60 செ.மீ. உயரமும் 30 செ.மீ. அகலமும் கொண்ட இரண்டு பாலித்தீன் பைகள் தேவைப்படும். பையின் அடிப்பசதியை நூலால் முடிந்து வைக்க வேண்டும். பையின் நடுவில் ஒரு பக்கத்திற்கு ஒரு துளை வீதம் ஒரு செ.மீ. அளவுள்ள துளைகளைப் பைக்கு இரண்டாகப் போட்டுக் கொள்ள வேண்டும். வைக்கோலை 3-5 செ.மீ. நீளத்தில் சிறு துண்டுகளாக வெட்டி நீரில் 4-6 மணி நேரம் ஊறவைத்து வெந் நீரிலோ நீராவியிலோ 30 மணி நேரம் வைத்திருக்க வேண்டும். நீரை வடித்து நிழலில் சாக்குப்படுதாவில் ஏறத்தாழ மூன்று, நான்கு மணி நேரம் உலர வைக்க வேண்டும். பாலித்தீன் பையின் அடியில் வைக்கோல் துண்டு களை 5 செ.மீ. உயரத்திற்குப் பரப்பிக் காளான் விதைகளை நான்கு சமபங்காகப் பிரித்து அதன்மேல் ஒரு பங்கைத் தூவ வேண்டும். இரண்டாம் முறையாக வைக்கோல் துண்டுகளை 10 செ.மீ. உயரத்திற்குப் பரப்ப வேண்டும். அதன் மேல் காளான் விதைகளின் மற்றொரு பங்கைத் தூவ வேண்டும். மூன்றாம் முறையாக மீண்டும் 10 செ.மீ. உயரத்திற்கு வைக் கோல் பரப்பி துண்டுகளைப் மற்றொரு பங்கு விதையைத் தூவ வேண்டும். நான்காம் முறையாக மீண்டும் 10 செ.மீ. உயரத்திற்கு வைக்கோல்