காளான் 533
பொருள்களைச் சிதைத்து மண் வளத்தைப் பெருக்கி இயற்கைச் சுழற்சியில் பெரும் பங்கு பெறுகின்றன. சில் காளான்களிலிருந்து கரிம அமிலங் களும். உயிர்ச்சத்து மாத்திரைகளும் தயாரிக்கப் படுகின்றன. ஆஸ்பர்ஜில்லஸ், மியூகார், பெனிசிலியம் சிற்றினங்களிலிருந்து சிட்ரிக் அமிலமும் லாக்டிக் அமிலமும், ஆஸ்பர்ஜில்லஸ், ஃபியூசாரியம் சிற்றினங் களிலிருந்து ரைபோஃபிளேவின் உயிர்ச்சத்தும், சாக்கரோமைஸிஸ் சிற்றினங்களிலிருந்து வைட்ட மின் B அடங்கியுள்ள ஈஸ்ட் மாத்திரைகளும் தயா ரிக்கப்படுகின்றன. ஜிபெரெல்லா காளான்களிலிருந்து பெறப்படும் ஜிபெரெலிக் அமிலம் வளர் ஊக்கியாக இன்றைய அறிவியலில் ஆய்வு மையங்களில் பெரிதும் பயன்படுகின்றது. ரொட்டித் தயாரிப்பிற்குப் பெரிதும் உதவும் கார்பன்டை ஆக்சைடும், மது தயாரிப்பதற் குதவும் எத்தில் சாராயமும் சாக்கரோமைஸிஸ் சிற் றினங்களிலிருந்து கிடைக்கின்றன. உணவாகப் பயன்படும் காளான்கள் அகாரிகஸ், மோர்ச்செல்லா, ப்ளுரோட்டஸ், லைகோபெர்டான் போன்றவையாகும். உலகின் பல பகுதிகளில் காளான் ஒரு பொருளாதாரச் சிறப்பு வாய்ந்த பயிராகவே வளர்க்கப்பட்டு விற்பனையாகிறது. பயனற்ற தாள் கள், சிறிதளவு வைக்கோல் இவற்றால் காளானை வளர்க்கலாம். புரதச்சத்து மிகுந்துள்ள இக்காளான் கள் குறைந்த செலவில், சத்து நிறைந்த உணவைக் கொடுக்கின்றன. விரிந்த குடையுடைய அனைத்துக் காளான்களும் உண்ணத் தகுந்தவை அல்ல. குடைக் காளான்களுள் அமானிட்டா என்றொரு பேரினம் காணப்படுகிறது. இதன் சிற்றினங்களுள் சில, வேதி நச்சுப்பொருள்களைச் சுரக்கும் இயல்புடையவை. இவற்றின் நச்சுப்பொருள்கள் மூச்சுவிடுதலைத் தடை செய்து, இதய இயக்கத்தை தடுத்து நிறுத்தும் இயல் புடையவை. கில் காளான்களுள் (gill fungi) ஏறக் குறைய 70 சிற்றினங்கள் மனிதருக்கு நச்சுத் தன்மை யைக் கொடுக்கின்றன. அமானிட்டா வர்ணாவின் கனித்திரள் தூய வெண்ணிறத்திலிருக்கும். இக் காளானின் குடைப்பகுதி ஒன்றை முழுமையாக உண் டால் ஒரே நாளில் இறப்பு நேரிடும் எனக் கண்டறிந் துள்ளனர். ஆகவே க்காளானை மரண தேலதை என்பர். பொதுவாக அமானிட்டா சிற்றினங்களையும் பிற நச்சுக் காளான்களையும் அவற்றின் அடியில் காணப்படும் பெரிய வோல்வா உறை மூலம் வேறு படுத்தி அறியலாம். சிலவற்றில் வோல்வா, உறை தளத்திற்குக் கீழே புதைந்திருக்குமேயானால் வோல்வா பெரியதா அல்லது சிறியதா என அறிந்து கொள்வதும் கடினம், நச்சுக் காளான்களையும் நல்ல காளான்களையும் பிரித்தறியக் காளான்களை வாக்கும்போது அப்பாத்திரத்தில் ஒரு வெள்ளிக் கரண்டியைப் போட்டால் அதன் வெள்ளி நிறம் மாறிக் கறுத்து விடும். பூச்சிகள் உண்ணாத காளான் உGO சாளரன் 5]] களாகப் பெற வேண்டுமென்றும், நச்சுத் தன்மை யுடைய காளானின் குடையை எளிதில் செதிலாக உரித்தல் இயலாது என்றும் கூறப்படுகிறது. சிறந்த காளான்களையும் நச்சுக் காளான்களையும் தெளி வாகப் பிரிப்பது கடினம். எனவே ஏற்கப்பட்ட விதைப் பண்ணைகளிலிருந்து வித்துகளைப் பெற்றுக் காளான் வளர்ப்பு முறை அறிந்து பயிர்செய்து விற் பனை செய்யும் காளான்களைப் பயன்படுத்தலாம். காளான்களில் பெனிசிலின், ஃப்ளேவிசின் வஸ் போன். றவை வ மனிதர்க்கு ஊறு விளைவிக்கும் நுண் ணுயிர்களைக் கொல்லும் எதிர் உயிரியாகச் செயல்படு கின்றன. பெனிசிலின், பெனிசிலியம் நொட்டேட்டம், பெனிசிலியம் கிரைசோஜீனம் போன்ற சிற்றினங் களிலிருந்தும், ஃப்ளேவிசின், ஆஸ்பர்ஜில்லஸ் ஃப்ளே என்னும் சிற்றினத்திலிருந்தும் பெறப்படும். பெனிசிலின், இரண்டாம் உலகப் போரிலும், கொரியப் போரிலும் காயமுற்ற வீரர்களைக் காக்கப் பெருமளவில் பயன்பட்டது. பெரும்பாலான காளான் கள் மனிதருக்கும், விலங்கினத்திற்கும். தாவரங்களுக் கும் கொடிய நோய்களை விளைவிக்கின்றன. மியு காரி, ரைசோபாஸ், ஆஸ்பர்ஜில்லஸ், பெனிசிலியம் ஆகியவற்றின் சிற்றினங்கள் பாதுகாப்பற்ற உணவுப் பொருள்களைத் தாக்கும் இயல்புடையவை. ஜாம், ஜெல்லி, ரொட்டி, பழவகை, ஊறுகாய் ஆகியவற் றைக் கெடுக்கும் பாலிபோரஸ், ஃபோமிஸ், ஆர்மில் லேரியா போன்றவை பசு மரங்களில் ஊடுருவி வளர்ந்து மர அழுகல் நோயை உண்டாக்கும். . ஒட்டுண்ணிக் காளான்களுள் பல பொருளாதா ரச் சிறப்பு வாய்ந்த தானியப் பயிர்களை அழித்து நோய்களைப் பரப்பும் இயல்புடையவை. நெற்பயிரில் இலைப்புள்ளி நோயை ஹெல்மின்தோஸ்போரியம் சிற்றினங்களும், கரும்பில் உலர் செவ்வழுகல் நோயைக் கோல்லினேட்ரைகம் சிற்றினங்களும், புகையிலை, தக்காளி, மிளகாய் போன்றவற்றில் நனைந்து நசித்தல் நோயைப் பிதியம் சிற்றினங்களும், சுடுகுக் குடும்பத்தைச் சார்ந்த தாவரப் பயிர்களில் லைப்புள்ளி நோயை அல்பூகோ சிற்றினங்களும் உண்டாக்குகின்றன. உஸ்டிலாகோ சிற்றினங்கள் கோதுமை, பார்லி, ரை, ஓட்ஸ், கரும்பு, சோளம் ஆகியவற்றின் கதிர்களுக்குக் கரிம நோயைத் (smut) தோற்றுவித்துப் பயிரை அழிக்கும். பக்சினியாச் சிற்றினங்கள் ரஸ்ட் என்னும் கொடிய நோயைப் பொருளாதாரச் சிறப்புடைய பயிர்களில் உண்டாக்கு கின்றன. கிளாவிசெப்ஸ் ரை தானியக் கதிர்களைப் பதராக்கி அவற்றைக் காளாஞ் ழைகளாலான கள் கருமை நிற எர்காட்டுகளாக மாற்றும். இவை உண வோடு சேரும்போது அவற்றிலுள்ள நச்சுப்பொருள் மனிதருக்கும், விலங்கினத்திற்கும் பரவி எர் காட்டிஸம் என்னும் நோயை உண்டாகும். சில காளான்கள் மனிதருக்குத் தோல் நோயைத் தோற்றுவித்துத் துன்பம் தரும். தலையில் தோன்றும்