36 கற்காரை
36 கற்காரை பில் (form work) இட்டு அதிர்வால் செறிவாக்கி நன்றாகப் பூசி முடிக்க இயலும். நீர் இச்செய்வினை மையைப் பெரிதும் பாதிக்கும். மிகுதியான நீர் சுற்கர ரையில் கசிவை (bleeding) உண்டாக்கி சிமெண்ட்டை வெளியேற்றி விடும், அதனால் கற்காரையின் வலிமை குறைந்துவிடும். குறைந்த நீர் உள்ள கற்காரையில் பிரித்தல் (segregation) ஏற்படுவதால், கற்காரையின் செறிவும் வலிமையும் குறையும். நீர் - சிமெண்ட் விகிதமும் கற்காரையில் வலிமை யும் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளன. விகிதம் கூடும்போது வலிமை குறையும். விகிதம் குறையும்போது வலிமை கூடும். கற்காரையின் வலிமை, கப்பி, மணல், சிமெண்ட், நீர் இவற்றின் தன்மையைக் கொண்டு அப்பொருள்களின் விகிதமும், அளவும் நிர்ணயிக்கப்படும். பணியை எளிமையாக் குவதற்காக, கலந்துள்ள பொருள்களைக் கூட்டினா லோ, குறைத்தாலோ அது வலிமையற்ற கற்காரை யாகிவிடும். தளும்பு கற்காரைக் கலவையில் காற்றுக்குமிழ் கள் மிகுதியாக இருக்கும். இவற்றை வெளியேற்றி னால் திண்மையுற்ற கற்காரை அமையும். கற்காரை யைச் சட்ட அமைப்பில் இட்டபின்னர் அதிர்வியைக் (vibrator) கொண்டு கெட்டித்தல் வேண்டும் (படம் 4). அதிர்விகளின் அதிர்ச்சியால் காற்றுக் குமிழிகள் வெளியேற்றப்படுகின்றன. கற்காரை திண்மை அடைகிறது. கற்காரையிலுள்ள சிமெண்ட் சேற்றுக்குழம்பு (cement slurry). படிக நீரேற்றம் (hydration of cement) அடைவதால்தான் கற்காரை வலிமை பெறு கிறது. அந்த வேதி மாற்றம் நிகழும்போது, படிக நீரேற்ற வெப்பம் உண்டாகிறது. அதை அறிந்து கற்காரையைத் தக்க முறையில் ஆற்றி (curing) வெப்பத்தைக் குறைக்க வேண்டும். இல்லையேல் இது கற்காரையில் விரிசலை ஏற்படுத்திப் பயனற்ற தாக்கிவிடும். பல ஆற்றுமுறைகள் உண்டு, முதலாவ தாக நீர் கொண்டு ஆற்றுதல் (water curing): கற் காரையின் மேல் பாத்திகட்டி நீர்விடல். இரண் டாம் முறை கற்காரையின் மேல் மணல், வைக் கோல் அல்லது சாக்கைப் பரப்பி அதை ஈரமாக வைத்திருத்தல். இவை எளிய செலவற்ற முறைக ளாகும். நீர் கிடைப்பது அரிதாக இருக்கும் இடங் களில் கற்காரையின் மேல் வேதி ஆற்றுதல் சாற்றைத் (curing compound) தெளித்து விடலாம். இம்முறை இப்போது அனைத்து நாடுகளிலும் கையாளப்படுகிறது. சுற்காரையின் செய்வினைமையை அதிகரிக்க, குழைமங்களைப் (plasticizers) பயன்படுத்தலாம். கற்காரை பல நாடுகளில் மையக்கலவை ஆலையில் (centralised mixing piant) உண்டாக்கப்பட்டு, மாற்றுக்கலவை ஊதியால் (transit mixer-trucks ) கட்டடம் கட்டும் இடத்திற்கு எடுத்துச் செல்லப் படுகிறது. நீண்ட நேரம் தளும்பு சுற்காரையாக இருக்க வேண்டியிருப்பதால் தடுப்பானைப் (retarders) பயன்படுத்த வேண்டும். இது கற்காரை விரைவில் கெட்டியாகாமல் தடுக்கிறது. குளிர் நாடுகளில் கற் காரை விரைவில் கெட்டியாகாது. அப்போது முடிக் கியைச் (accelerator) சேர்த்துக் கெட்டியாக்கலாம். தடுப்பான், முடுக்கி இவை கூட்டுக் கூட்டுக் கலவையில் (admixtures) அடங்கும். கப்பி மணல், சிமெண்ட் கலவையில் நீர் வார்த்துக் குழைத்த பின்னர் குறைந்தது 30 அல்லது 40 நிமிடங்களில் அதைப் பயன்படுத்தவேண்டும். இல்லையேல் தளும்பு கற்காரை இறுகிவிடும் (setting). இவ்வாறு இறுகிவிடும் கற்காரையை மீண்டும் நீர் வார்த்துக் குழைத்துப் பயன்படுத்துதல் நன்றன்று சுற்காரையின் வலிமையை நன்குணர, தளும்பு கற் காரையைக் கொண்டு கொண்டு கனசதுரம் (cube) அல்லது உருளை (cylinder) அமைத்து, அதை ஆற்றிய பின்னர் 3, 7, 28 நாள்கள் என்னும் கணக்கில் ஆய்வுக் கூட அழுத்தப்பொறியில் (compression machine) வைத்து அழுத்தி உடைத்து. கற்காரையின் அறுதி வலிமையை (ultimate strength) அறியலாம். காப்புக் காரணியைப் (factor of safety) பயன்படுத்தி, செயல் படும் வலிமையை (working strength) அறியலாம். என்.வி.அருணாசலம் வகை இது பல வகைகளில் பயன்படக்கூடிய பொறி யியல் பொருள் ஆகும். கற்காரை (concrete) எனப் படுவது கடினமான கெட்டியான கல் போன்ற பொரு ளாகும். சிமெண்ட், சுற்கள், மணல், நீர் ஆகியவற்றின் கலவை முதலில் குழைவாகவும் எளிதில் கைகளால் குழைத்து வேலை செய்யக்கூடிய வகையிலும் தேவை யான உருவத்தில் அச்சாக வார்க்கக்கூடிய யிலும் தயாரிக்கப்படுகிறது, அக்கலவை சிமெண்ட்டும் நீரும் சேரும்போது ஈரப் பதத்தால் இறுகிக் கெட்டி யாகும் மாற்றம் நடைபெறுவதால் வலிமை பெறு கிறது. சிமெண்ட்டில் உள்ள வேதிப் பொருள் களாகிய கால்சியம் ஹைட்ராக்சைடு போன்றவை நீரில் கரைந்து விடாமல் சுற்களையும் மணலையும் பிணைத்துக் கெட்டியான வார்ப்பட அச்சுப் பொரு ளாக மாற்றுகின்றன. இவ்வாறு கட்டியாக மாற்றப் பட்ட கற்காரை ஒரு செயற்கைக் கல் எனக்கருதப் படுகிறது. கற்காரையில் கற்களுக்கு இடையில் மணலும். மணல்களுக்கு இடையில் சிமெண்ட்டும் நிரப்பப்பட்டு விடுவதால் இடைவெளியில்லாத கட்டியான முழு உருவம் உடைய பொருளாக மாற்றம் பெற்று விடுகிறது. கற்காரையின் வலிமைத் தரம் அதில் இணைந் துள்ள சிமெண்ட், கற்கள், மணல், நீர் ஆகியவற்றின் தன்மையைப் பொறுத்து மாறுபடும். மாறுபடும். சாதாரண