பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/561

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காற்றாலை 541

நவீன காற்றுச் சுழலியின் (wind turbine) அலகுகளின் முனையில், வேகம், காற்றின் வேகத்தை விட ஆறு மடங்கு அதிகமாக உள்ளது. இவ்வலகுகள் தட்டை யாகவும், சுழலும் தளத்திலிருந்து சிறிது கோணத் திலும் அமைக்கப்பட்டுள்ளன. இத்தளம் காற்று வீசும் திசைக்குச் செங்குத்தாக உள்ளது. கிடை அச்சு வகைக் காற்றாலைகள் பயன்படுத்தப்படும் அலகு களின் எண்ணிக்கை அடிப்படையில் பல வகைப் படும். இரு அலகுகளைக் கொண்ட காற்றாலை படம் 2-இல் காட்டப்பட்டுள்ளது, காற்றாலை 541 பொதுவாகக் கிடை அச்சு வகைக் காற்றாலைகள் சிறந்த செயல்பாடு கொண்டவை. இவை பலவிதமான பயன்களைக் கொண்டிருந்தாலும் மின் உற்பத்திக்கும். நீர் இறைப்பதற்கும் முக்கியமாகப் பயன்படுகின்றன. அ சுற்றகம். காற்றாலையின் தலைப்பகுதி வால் பகுதி தாங்கும் கட்டமைப்பு படம் 2.(அ) இரு அலகுகளின் பக்கவாட்டுத் தோற்றம். (ஆ) கிடை அச்சு வகைக் காற்றாலை. படம் 3.(அ) பல அலகுகளைக் கொண்ட காற்றாலை (ஆ) டச்சு வகை கிடை அச்சுக் காற்றாலை காற்றிலிருந்து கிடைக்கும் ஆற்றலால் விளையும் பயன்கள். இது புதுப்பிக்கக்கூடிய (renewable) ஆற்றலாகும். சூரிய ஆற்றலைப் போன்று காற்றாலை மின் உற்பத்தித் திட்டமும், சுற்றுப்புறத்தை மாசு படுத்துவதில்லை. அதனால் தீய, பின்விளைவுகள் ஏற் படுவதில்லை. இத்திட்டத்தில் எரிபொருள் தேவை யில்லாததால், அதைச் சேமித்து வைக்கவும், கிடைக் கும் இடத்திலிருந்து தேவைப்படும் இடத்திற்குக்