542 காற்றிடைச் செலுத்தி
542 காற்றிடைச் செலுத்தி கொண்டு செல்லவும் வேண்டியதில்லை. இது சில கிலோவாட் திறன் தேவைப்படும் சிறிய அளவு தொழில் திட்டங்களுக்கு ஏற்ற குறைந்து செல் வுடையது. பெரிய அளவு திட்டங்களுக்குப் பயன் படுத்தும் போது, பேரளவு உற்பத்தியின் (mass production) மூலம், இதன் செலவைக் குறைக்கலாம். தீமைகள். காற்றின் ஆற்றல் நிலையில்லாமல் மாறுபடக் கூடியது. இத்தகைய நிலையற்ற தன்மை யினால், ஆற்றலைச் சேமித்து வைக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. காற்றாலைகள் பலத்த ஓசையுடன் இயங்குகின்றன. பெரிய காற்றாலையி லிருந்து வரும் ஓசை பல் கிலோமீட்டருக்கும் அப்பால் கேட்கக் கூடும். காற்றாலைகள், பற்சக்கரப் பெட்டி (gear box), குடம் (hub), மின்னாக்கி, இணைக்கும் தண்டு ஆகியவற்றைக் கொண்டதால் இதன் எடை மிக அதிகமாக உள்ளது. காற்றாலைகள் நிறுவ, பெரும் பரப்புத் தேவைப்படுகிறது. பெரும் தற்போது தேவைப்படும் திறனில் பகுதி, நிலக்கரி, எண்ணெய், இயற்கைவளிமம் போன்ற எரிபொருள்களிலிருந்து பெறப்படுகின்றது. ஆனால் இவை தொடர்ந்து பயன்படுத்தப்படுவதால், கிடைக்கும் அளவில் குறைந்து விடக் கூடும். ஆகவே. அறிவியலார் புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் மூலங் களைப் (sources) பயன்படுத்துவதைப் பற்றி ஆராய்ந்து அதில் வெற்றியும் கண்டுள் ளனர். அத்தகைய ஆற்றல் மூலங்களுள் காற்றும் ஒன்று.எனவே காற்றாலைகளால் ஏற்படும் குறை களைக்களைய ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. எதிர் காலத்தில் காற்றாலை மின் திட்டத்தின் மூலம் பெருமளவு திறன் பெறப்படும் என்று நம்பப்படுகிறது. வா. அனுசுயா நூலோதி. G. D. Rai, Solar Energy Utilization, Second Edition, Khanna Publishers, New Delhi, 1984. காற்றிடைச் செலுத்தி வானூர்தி எந்திரம் உருவாக்கும் சுழல் ஆற்றலை உந்து ஆற்றலாக மாற்றி வானூர்தியைக் காற்றி டையே செலுத்தப் பயன்படுகிற, மையக்குடமும் (hub), அலகுகளும் (blades) கொண்ட கருவியே காற்றிடைச் செலுத்தி (air propeller) எனப்படு கிறது. கடலில் பயன்படும் செலுத்திகளைவிடக் காற்றிடைச் செலுத்திகள் மெல்லிய ஊடகத்தில் செயல்படுவதால் இவற்றின் விட்டமும் சுழல்வேசு மும் மிகுதியாக உள்ளன. இவை எந்திரத்தின் சுழல் தண்டில் நேரடியாகப் பொருத்தப்படுகின்றன. எந்திரத்தின் இயக்கத்தால் சுழலும் செலுத்தியின் அலகுகள் ஓர் ஏற்றத்தைச் (lift) செலுத்தியின் அச்சுத் திசையில் உருவாக்குகின்றன. இந்த ஏற்றம் தேவை யான உந்து ஆற்றலை உருவாக்கி ஊர்தியைக் காற்றி டையே செலுத்த உதவுகிறது. காற்றிலைப் பகுதி மையக்குடம் செலுத்தி படம் 1. காற்றிடைச் செலுத்தி . . செலுத்தி வகைகள், சிறிய, வேகம் குறைந்த, வானூர்திகளில் இரு அலகுகள் கொண்ட மாறாத அலகு நிலைச் செலுத்திகள் பயன்படுகின்றன (படம் - 1). அலகுநிலை என்பது மையக்குடத்திற்கும், அலகுகளுக்கும் உள்ள கோணமாகும். மிகுவேக ஊர்தி களில் அலகுநிலையை மாற்றக்கூடிய வாய்ப்புடைய செலுத்திகளே பயன்படுகின்றன. அலகுநிலை மாற் றும் செலுத்திகள் இருநிலைச் செலுத்தி, மாறுநிலைச் செலுத்தி, நிலைவேகச் செலுத்தி, மிதக்கும் செலுத்தி, எதிர்நிலைச் செலுத்தி எனப் பலவகைப்படும். இரு நிலைச் செலுத்தி எழுவதற்கு (take. off) ஒரு நிலை யும் பறத்தலுக்கு ஒரு நிலையுமாக இரு கோணநிலை யில் மட்டுமே சுழலவல்லது. மாறுநிலைச் செலுத்தி யில் பறத்தலின் எந்நிலைக்கும் தேவையான கோண நிலையில் அலகுகளைச் சுழல வைக்க முடியும். மாறா வேகச் செலுத்தி, அடிப்படையில் ஒரு மாறுநிலைச் செலுத்தியேயாகும். அத்துடன் வேகக்கட்டுப்படுத்தி யும் இணைக்கப்படுவதால் நிலைமைக்கேற்ற வேகம் சீராகப் பேணப்படுகிறது. மிதக்கும் செலுத்தியில் சாதாரணமாகப் பயன் படும் பெரும அளவான கோண நிலையை விட மிகுதியான கோண நிலையை எட்ட முடிகிறது. இது சிறந்த பாதுகாப்புக் கருவியாகும். பறக்கும் போது எந்திரத்தில் ஏதேனும் குறை ஏற்பட்டு விட்டால் அலகுகளைச் சுழல்தண்டிற்கு 90° கோணத் தில் இருக்குமாறு மாற்றிக் காற்றினால் ஊர்தி