பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/563

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காற்றியக்கவியல்‌ 543

இழுத்துச் செல்லப்படுவதைத் தவிர்க்கலாம். எதிர் நிலைச் செலுத்தியும் ஒருவகை மாறா வேகச் செலுத்தியேயாகும். இவ்வகையில் அலகுகளைப் பின் புறம் திருப்ப இயல்வதால் உந்துவிசையின் திசையே மாற்றப்பட்டு விடுகிறது. தரை இறங்கும்போது விமானத்தை இதன்மூலம் நிறுத்தலாம். அலகுநிலைக் கட்டுப்படுத்தும் முறைகள், அலகு நிலையை நீரியல், மின்னியல், எந்திர அல்லது தானி யங்குஇயல்களில் ஏதேனும் ஒரு முறை மூலம் மாற் றலாம். எக்கியிலிருந்து நீரியல் முறையில் ஓர் எண்ணெய் நீரியல் உந்திற்குச் செலுத்தப்படுகிறது. உந்தின் நகர்வு சில எந்திர இணைப்புகள் மூலம் அலகுகளின் அடிப்பகுதியை நகர்த்திக் கோணத்தை மாற்றுகிறது.மின்முறையில், மின்னோடி பற்சக்கரங் களின் மூலம் அலகுகளின் அடிப்பகுதியோடு இணைக் கப்பட்டுச் சுழற்சியின் மூலம் கோணம் மாற்றப்படு கிறது. காற்றியக்கவியல் 543 மையக்குடம் மிகு வலிவுள்ள எஃகின் உலோகக் கலவையாலோ அலுமினியத்தாலோ தயாரிக்கப்படும். வடிவமைப்பின்போது செலுத்தியின் எடையும் அள வும் முடிந்தவரை குறைவாக இருக்குமாறு உருவாக்க வேண்டியது மிகவும் இன்றியமையாதது. செலுத்தி யைத் தாக்கக்கூடிய மையவிலக்கு விசை, உந்து விசை, சுழற்சி விசை, முறுக்கு விசை, அதிர்வு போன்ற வற்றை மனத்திற்கொண்டு அவற்றைத் தாங்கவல்ல வடிவில் அமைக்க வேண்டும். ஊர்தியில் பொருத்தப் பட்டுள்ள எந்திரத்தின் திறனை உந்து திறனாக மாற்றத் தேவையான வலிமையுடைய செலுத்தியின் பரிமாணம், எடை, அலகுகளின் எண்ணிக்கை போன்றவை அறுதியிடப்படுகின்றன. தேவைக்கு ஏற் பச் செலுத்தியின் விட்டம், அலகுகளின் எண்ணிக்கை, அகலம், பருமன் ஆகியவற்றை மாற்றியமைப் பதன் மூலம் விரும்பிய விளைவுகளைப் பெறலாம். பலவகைச் செலுத்திகள் மாதிரிக் காற்றுச் சுரங் கத்தில் (wind tunnel) ஆய்வு செய்யப்பட்டு அவற் றின் விளைவுகள் பரிமாணங்களற்ற அட்டவணை களாகவும், படவரைவுகளாகவும் உருவாக்கப்பட் டுள்ளன. இவற்றை எந்தச் சூழலுக்கும் பயன்படுத்தி மிகச் சரியான செலுத்தியை அடையாளம் காண லாம். பொதுவாக வானூர்தியின் பேரொலிக்குச் செலுத்திகளே காரணமாக அமைகின்றன. செலுத்தி யின் திறன் மிகும்போது ஒலியின் அளவும் மிகும். ஆனால் அலகுகளின் எண்ணிக்கை மிகும்போது ஒலியின் அளவு குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. வயி. அண்ணாமலை நூலோதி: Darrol Stinton, The Design of the Aeroplane, Granada Publishing. Co., London, 1983. படம் 2, மூன்று அலகுகளைக் கொண்ட காற்றிடைச் செலுத்தி வடிவமைப்பு. முந்தைய செலுத்திகளின் அலகுகள் ணைக்கப்பட்ட மரப் பலகைகளால் அடுக்காக அமைக்கப்பட்டன. அக்குரோட்டு மரங்களே மிகுதி யும் பயன்பட்டன. தற்போது அலுமினிய உலோசுக் கலவை பயன்படுகிறது. செலுத்தியின் விட்டம் 13 அடிக்கும் மேற்பட்டால் எடையைக் குறைப்பதற்காக அலகுகள், கூடு போன்ற அமைப்பில் தயாரிக்கப்படு கின்றன. காற்றியக்கவியல் காற்றும் பிற வளிமங்களும் பாய்ந்து கொண்டிருக்கும் போதோ சமநிலையில் இருக்கும்போதோ இவற்றின் பண்பியல்புகளை அறியச் செய்யும் அறிவியலே காற்றியக்கவியல் (aeromechanics) ஆகும். காற்றியக்க வியலில் இரு பெரும் பிரிவுகள் உள்ளன. அவை காற்று அல்லது வளிச்சுழல் சமநிலையியல் அல்லது அது பற்றிய இயற்பியல் (aerostatics), காற்று அல்லது வளி இயக்கம் சார்ந்த இயற்பியல் (aerodynamics). இதில் காற்றியக்கவியல் என்பது பாய்ம இயக்க வியலின் (fluid mechanics) ஒரு பொதுவான பிரிவில் அடங்கும் தனிப்பட்ட அறிவியலாகும். இரண்டாவ தாகக் குறிப்பிடப்பட்ட வளி இயக்கவியலில் காற்று மற்றும் வளிமங்களின் இயக்கம் அல்லது சமநிலை பற்றிய இயற்பியலையும் காற்றியக்கவியல் எனலாம். மேலும் சில சமயம் பாய்மத்தினுள் மூழ்கியிருக்கும்