பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/564

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

544 காற்றியங்கியல்‌

544 காற்றியங்கியல் ஏதேனும் ஒரு திண்மப் பொருளின் சமநிலை பற்றிய ஆய்வைக் காற்றியக்கவியல் எனக் கூறுவர். இதற்கு எடுத்துக்காட்டாக ஒரு மூடப்பட்டுள்ள உருளை, கலத்துள் அழுத்தப்படும் காற்று, பலூன் போன்ற வற்றைக் குறிப்பிடலாம். காற்று, பாய்வில் அல்லது இயக்கத்தில் இருக்கும் போது ஆராய்ந்தால் அதன் பண்பியல்புகள் அல்லது ஏதேனும் பிற தகைவு, உந்தம், விசை ஏற்படுவதால் மாறுபடும் இயல்புகள் பற்றிய அறிவியலைப் பொது வாக வளி இயக்கவியல் என்பர். ஒரு குழாய் அல்லது மூடிய கால்வாய் வழியே பாயும் காற்றில் ஏற்படும் அல்லது ஏற்படுத்தப்படும் தடை (resistance) அல்லது அழுத்த நிலை (pressure) மற்றும் காற்று இறகு, (aero foil) அல்லது அலகில் காற்றுப் பாய்ந்து ஊடுரு விச் செல்வதால் ஏற்படும் விசை, விளைவுகள் பற்றிய நுட்பத்தையும் காற்றியக்கவியலின் பகுதியாகக் கொள்ளலாம். கே.ஆர்.கோவிந்தன் நூலோதி, Baumeister, A. Avallone, Baumeister III. Marks' srandard Hand Book for Mechanical Engineers, Eighth Edition, McGraw - Hill Book Company. New York, 1978. காற்றியங்கியல் வளிமம் பொருள்களின் வழியாகவோ, பொருள்கள் வளிமத்தின் ஊடாகவோ செல்லும்போது ஏற்படும் நிகழ்வுகளைப் பற்றிய அறிவியல் காற்றியங்கியல் (aerodynamics) எனப்படும். பெரும்பாலும் விமானம் பறக்கும் விதத்தைப் பற்றி விளக்குவதாக இருந் தாலும் அது தொடர்புடைய பிற பிரிவுகளையும் விளக்கும் பொறியியலாகும். மிகு வேக மகிழ்வுந்து களின் (Cars) இயக்கம் இக்காற்றியங்கியலைச் சார்ந் துள்ளமையால் தானியங்கி (automobile) வடிவமைப் பாளர்கள்.இப்பிரிவைப் பற்றி நன்கு அறிந்திருத்தல் வேண்டும். கட்டடக்கலை வல்லுநர்கள் கட்டடங் களை வடிவமைக்கும்போது காற்றால் சுட்டடங் களுக்கு ஏற்படும் விளைவுகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். காற்று விசையின் உதவியால் செல்லும் படகுகளின் வடிவமைப்பிலும் காற்றியங்கியல் பெரும் பங்கு பெறுகிறது. காற்றால் உண்டாகும் விசைகளால் பல மாற் றங்கள் நிகழ்கின்றன. சூறாவளிக் காற்றால் கட்ட டங்கள் தாக்கமுறுகின்றன. காற்றாலை மிதவைக் கப்பல்களில் காற்றின் விசை நன் முறையில் பயன் படுகிறது. ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த டேனியல் பெர்னோலி என்பார் கண்டுபிடித்த பெர் னோலியின் தத்துவம் காற்றியங்கியலில் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். குழாய்களில் செல்லும் நீர் மத்தைப் பற்றி அவர் ஆய்வு செய்தார். இவ்விதி அசையும் வளிமங்களுக்கான விதியை ஒத்துள்ளது. பெர்னோலியின் தத்துவம், காற்றின் பாய்ம வேகம் மிகும்போது அதன் அழுத்தம் குறையும் என விளக்கு கிறது. அதன்படி குறுகிய குறுக்குப் பரப்புடைய பகுதியின் வழியாகக் காற்றுச் செல்லும்போது அதன் பாய்ம வேகம் மிக, அழுத்தம் குறையும். காற்றின் அழுத்தம் காற்றுப் பாய்வு படம் 1. பெர்னோலியின் தத்துவம் நீர்மங்களுக்கும், வளிமங்களுக்குமான பொதுத் தத்துவத்தின் மூலமே விமானத்தின் இறக் கைகள் வடிவமைக்கப்படுகின்றன. முன் பகுதியை விடக் குறுகிய பின் பகுதி இறக்கைகளின் வடிவம் காற்றிலை (air foil) வடிவம் எனப்படுகிறது. இவ் விறக்கையின் அடிப்பரப்பு தட்டையாகவும், மேற் பரப்பு நன்கு வளைந்தும் காணப்படும். இறக்கை யின் மேற்பரப்பு வழியாகக் காற்றுச் செல்லும் போது, அதன் கீழ்ப்பரப்பின் வழியாகச் செல் வதைவிட மிகு தொலைவு செல்வதால் வேகம் மிகுதியாக இருக்கும். இவ்விடத்தில் பெர்னோலியின் தத்துவப்படி, காற்றின் அழுத்தம் குறைகிறது. க அதனால், இறக்கையின் அடிப்பரப்பில் மிகுதி யான, மேல் நோக்கிய தூக்குவிசை (lift) எனப்படும் காற்றழுத்த விசை செயல்படுகிறது. இவ்விசை, விமானத்தின் எடையைச் சமப்படுத்துகிறது. இத் தூக்குவிசை மிகுதியாக இருந்தால் விமானத்தின் வேசும் அதிகரிக்கும். ஆனால் விமானத்திற்குக் காற் றின் பின்னோக்கிய தடை விசை ஏற்படுகிறது. இது பிள்னிழுப்பு விசை (drag) எனப்படும். விமானத்தின் வேகம் மிகும்போது இப்பின்னிழுப்பு விசையும் மிகுதி யாகிறது. எனவே விமானத்தை வடிவமைப்போர் (designer) மிகுதியான தூக்கு விசையையும், குறை வான பின்னிழுப்பு விசையையும் பெறுமாறு விமானத்தை வடிவமைக்க வேண்டும்.