காற்றியங்கு அலை இழுவை 549
மாற்றம் குறைக்கப்படுகிறது. இதனால் உண்டாகும் அதிர்வு அலைகளின் வலிமை குறைந்து காணப்படும். இறக்கைகளை ஒரே நேர் கோட்டில் அமைக்க மல் அவற்றைப் பின்புறமாகச் சாய்ந்து இருக்கும்படி, குறிப்பாக முன் விளிம்புகளை வடிவமைப்பதன் மூலம், இறக்கையின் வீழ்தகவின் (wing incidence) காரண மாக ஏற்படும் அலை இழுவை குறைக்கப்படுகிறது. இம்முறை மிகவும் சிறந்த முறையாகும். இம்முறையால் விளையும் பயன்கள். இறக்கை, செல்லும் பாதைக்குச் சாய்வாக அமைக்கப்பட்டிருப் பதால் அதன் தடிம விகிதம், செங்குத்தாக அமைக் கப்படும். இறக்கையைவிட அதன் தடிம விகிதம் குறைவாக இருப்பது விரும்பத்தக்கதாகும். உருவாகும் அழுத்த அலைகள் சாய்வாக இருப்பதால், அவற்றின் வலிமை குறைந்து காணப்படும். இவ்வாறு அமைக்கப் பட்ட இறக்கைகளின் இடைப்பட்ட அளவு அதாவது இறக்கைகளின்முனைகளுக்கிடையே உள்ளதொலைவு செங்குத்தாக அமைவதை விடக் குறைவாக இருக்கும். கையாளப் மேலும் சில முறைகளும்,மிகை ஒலி வேகப்பறப்பு களில் அலை இழுவையைக் குறைக்கக் படுகின்றன. இறக்கையின் முன்விளிம்பின் சாய்வை மிகுதியாக்கி, பின் விளிம்பின் சாய்வைக் குறைத்தல், இத்தகைய இறக்கை அமைப்புகள் டெல்ட்டாஅல்லது மாற்றியமைக்கப்பட்ட டெல்ட்டாஎனப்படுகின்றன. அவை கட்டுமானச் சட்டத்தின் அமைப்பை வேண்டிய வகையில் வடிவமைத்தல்,வானூர்தியின் பகுதிகளைப் பறப்பு விதியின்படி அமைத்தல் ஆகியவை ஆகும். கீழ்க்காணும் இறக்கையின் அமைப்புகள் பல்வேறு வேகங்களில் குறைந்த அலை இழுவையை உருவாக் கும் தன்மை கொண்டவை. அவை குறை ஒலி வேகங் களுக்கு (sub sonic) நேரான இறக்கைகள் ஒலி வேகத்திற்குச் (sonic) சற்றே குறைவாயிருக்கும் போது, சிறிதளவு சாய்க்கப்பட்ட இறக்கைகள். (transonic) சாய்வு மாறும் ஒலி வேகங்களுக்குச் கோணம் 30 450 வரை இருக்குமாறு அமைக்கப் பட்ட இறக்கைகள்; மிகை ஒலி வேகங்களுக்கு (supersonic) இறக்கைகளின் சாய்வு கோணத்தை 600 அல்லது அதற்கு மேலும் அமைத்தல் என்பன. உயர எல்லை. வானூர்தி குறிப்பிட்ட உயரத்தில் பறக்கும்போது அதன் வேகம் மிகை ஒலி வேகமாக அதிகரிக்கப்பட்டால், மாறுபட்ட பாய்வினால் ஏற் படும் அலை இழுவையுடன் இயக்க அழுத்தம் அதி கரிப்பதால் ஏற்படும் அலை இழுவையும் உருவாகிறது. இந்த விளைவைச் சீராக்க மிகை ஒலி வேக சுத்தில் பறக்கும் வானூர்திகள் குறைஒலி வேகத்தில் பறக்கும் வானூர்திகளைவிடப் பொதுவாக மிகு உயரத்தில் பறக்க வேண்டியுள்ளன. எ.கா. மேக் எண் மூன்றில் செயல்படும் வானூர்தி, ஏறத்தாழ 60,000 அடி உயரத்தில் பறக்கும்போது அதன் செயல் திறன் உயர்ந்துள்ளது. காற்றியங்கு அலை இழுவை 549 செந்தூக்கு ஆற்றல் கூறு இழுவை விகிதத்தில் (lift-drag ratio) ஏற்படும் மாறுதல்கள் முன்னர்க் குறிப்பிடப்பட்டுள்ள முறைகளை வானூர்திகளில் கையாண்டு, அலை இழுவை குறைக்கப்பட்ட போதும் மிகை ஒலி வேகங்களில் செயல்படும் வானூர்திகளின் காற்றியங்கு வினைத்திறன், அதாவது செந்தூக்கு ஆற்றல் கூறு ழுவை விகிதம், குறை ஒலி வேக வானூர்திகளின் விகிதத்தைவிடக் குறைவாகவே உள்ளது. மேக் எண் இரண்டிலிருந்து மூன்று வரை யுள்ள மிகை ஒலி வேகங்களில் பறக்கக்கூடிய, சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்ட வானூர்தியின் மேற்குறிப்பிடப்பட்ட விகிதம், ஒப்பிடக்கூடிய குறை ஒலிவேக வானூர்தியின் அளவில் பாதியே உள்ளது. ஆனால் வானூர்திகளில் பயன்படுத்தப்படும் தாரைப் பொறியின் வினைத்திறன். வானூர்தி மிகை ஒலி வேகங்களில் இயங்கும்போது மிகுதியாக உள்ளது. மேக் எண் இரண்டு அல்லது மூன்றில் வானூர்தி செயல்படும்போது அதிகரிக்கும் தாரைப் பொறியின் வினைத்திறனும், மிகை ஒலி வேகப் பறப்பின் காரணமாகக் குறையும் வானூர்தியின் காற்றியங்கு வினைத்திறனும் சமமாகவே உள்ளன. இதனால் பொதுவான பறப்பு வினைத்திறன், மிகை ஒலி வேகப் பறப்பில், குறை ஒலி வேகப் பறப்பைவிட மிகுதியாக உள்ளது. காற்றை உட்செலுத்தும் முறை, மிகை ஒலி வேகப் பறப்பில், குறிப்பாக மீ மிகை ஒலி வேகப்பறப்பில் பொறிக்குத் தேவையான காற்றை அதனுள் செலுத்துவது சற்றுக் கடினமான செயல் ஆகும். ஏனெனில் செல்லும் காற்றும் வானூர்தியின் வேகத்திலே இருக்கும். மிகை ஒலி வேகத்தில் இருக்கும் காற்றை, காற்றழுத்திக்குள் செலுத்து முன்பு அதன் வேகத்தைக் குறைக்க வேண்டும். அவ்வாறு காற்றின் வேகத்தைக் குறைக்கும்போது அதில் மிகுதியும் வீணாகாமல் கவனமாகக் குறைக்க வேண்டும். சாதாரணமாகக் குறை ஒலிவேசுப் பறப்பில் பின்பற்றப்படும் உட்செலுத்தும் முறையைப் பயன் படுத்தினால் உயர் வலிமை வாய்ந்த அதிர்வு அலை முன்பகுதியில் உருவாகும். இதன் விளைவாகக் காற்றின் ஆற்றல் மிகுதியும் வீணாவதுடன் பொறியின் செயல்திறனும் குறைகிறது; அலை இழுவையும் அதிகரிக்கிறது. மேற்குறிப்பிட்ட இழப்புகளைக் குறைப்பதற்காக மிகை ஒலி வேகப் பரப்பில் காற்றின் வேகத்தைக் குறைத்து உட்செலுத்த, சிறப்பு உட்செலுத்தும் வழிகளும், விரவிகளும் பயன்படுகின்றன. இவை காற்றின் வேகத்தைக் குறைக்கும்போது, காற்றில் வலிமை குறைந்த அதிர்வு அலைகளையே ஏற்படுத்து கின்றன. எனவே, காற்றின் ஆற்றல் பெரிதும் வீணாவதில்லை.