கற்காரை 37
ஒரு கள கலவையில் ஒரு பங்கு சிமெண்ட், இரு பங்கு மணல் நான்கு பங்கு சுற்கள் கலந்த கலவையில் மீட்டர் கலவைக்கு 32 லிட்டர் வீதம் நீர் சேர்த்துக் கற்காரைக் கலவைதயாரிக்கப்படுகிறது. சிமெண்ட்டில் 60-67% சுண்ணாம்பு, 17-25% சிலிக்கா. 3-8% அலுமினியம் இருக்க வேண்டும். மணல் பருமன், 4.75 மில்லி மீட்டர் சல்லடையைக் கடக்கக் கூடிய தாக இருக்க வேண்டும். கற்களின் பருமன் 4.75 மி. மீ சல்லடையைக் கடக்கக் கூடாது. தேவைக்கு ஏற்ப 5-15 செ.மீ அளவுள்ள கற்களைப் பயன் படுத்தலாம். திண்மையற்ற சுற்காரையின் எடை ஒரு கன மீட்டருக்கு 2300 கி.கிராமாக இருக்கும். கற் காரையில் கலக்கத்தேவையான சிமெண்ட் வகையைக் கட்டடத்தின் தேவையைப் பொறுத்தே தேர்வு செய்ய வேண்டும். வெள்ளைச் சிமெண்ட், விரிவடையும் சிமெண்ட், விரைவில் இறுகி விடும் சிமெண்ட், எண்ணெய்க் கிணறு சிமெண்ட் எனப் பலவகையில் சிமெண்ட் உள்ளது. கற்காரை 37 கற்காரையில் சேர்க்கும் கல், மணல் ஆகிய வற்றின் இயற்பியல், வேதியியல் தன்மைகள் கற் காரையின் தரத்தை வேறுபடுத்தக் கூடும். கல் மணல் ஆகியவற்றின் பரிமாண அளவு மிகுதியானால் நீர் மிகுதியாகச் சேர்க்க வேண்டியதாகிவிடும். அதனால் வலிமை குறையும். தட்டையான கற்களைப் பயன்படுத்தினால் மணலையும் நீரையும் மிகுதியாக சேர்க்க வேண்டியதாகிவிடும். இதனாலும் கற்காரை யின் வலிமை குறையும். கற்களில் மூலக்கூறுகளின் அமைப்பைப் பொறுத்துப் பிணைப்புத் தன்மை மாறு படும். கற்களின் மீட்சியியல் தன்மையால் கற்காரை யில் சுருக்கம் மற்றும் விரிசல் ஏற்படக் கூடும். மணல் கற்கள் முதலியவற்றில் உள்ள வேதிப் பொருள்கள் சிமெண்ட்டுடன் கலந்து வேதி மாற்றங்களைத் தோற்றுவிக்கலாம். கற்காரையில் பயன்படும் நீர், அமிலம், உப்பு, எண்ணெய் முதலியவை இல்லாத நீராக இருத்தல் வேண்டும். கரிம மாசுகள் இருந் தால் அவை சுற்காரையின் கடினத தன்மையைப் பாதிக்கும் (படம் 5). படம் 4. (அ) கட்டகத்தில் வைக்கப்பட்டுள்ள கற்காரை (ஆ) அதிர்வி கற்காரையைக் கெட்டிப்படுத்துகிறது