பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/571

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காற்றிலியுயிரி 551

அளவு நீரில் மிகக் குறைவாக உள்ளது. அச்சமயங் களில் இவ்விலங்கினங்கள் காற்றில்லாச் சுவாசம் செய்கின்றன. பொதுவாகக் கிணறு கடல் போன்ற ஆழ்நீர் நிலைகளில் ஒருசெல் உயிரி, மெல்லுடலி. புழு, நண்டினம் மேலும் சிலவகைப் பூச்சியினங்கள் காற்றில்லாச் சுவாசம் செய்கின்றன. பாலூட்டிகள் மற்றும் சில விலங்குகளின் குடலில் ஆக்சிஜன் மிகக் குறைவாகவோ முற்றிலும் இல்லாமலோ உள்ளது. குடலில் வாழும் உள் ஒட்டுண்ணிகள் குடல் திசுக்களிலிருந்து கிடைக்கும் ஆக்சிஜனைப் பெற்று உயிர் வாழ்கின்றன. பன்றி போன்ற சில விலங்குகள், மிகுதியான ஆக்சிஜனை வாய் வழியே உட்கொள்கின்றன. உட்செல்லும் ஆக்சிஜன் குடலுக்குச் சென்று அங்கு வாழும் உள் ஒட்டுண்ணிகளின் ஆக்சிஜன் தேவை வையை நிறைவு செய்வதாகக் கருதப்படுகிறது. தாவரங்களிலும். விலங்குகளிலும் கார்போஹைட்ரேட்டுகள் காற் றிலலா மூச்சு விடுதல் பற்றிய ஆய்வு அண்மையில் மேற்கொள்ளப்பட்டது. ஆக்சிஜன் 1% கூட இல்லாத சூழ்நிலையிலும் கரப்பான் பூச்சிகள் ஒரு மணி நேரத் திற்கும் மேலாக ஓர் இடத்தில் வாழும் என்று இவ்வாய்வு தெரிவிக்கிறது. பொதுவாக. கார்போஹைட்ரேட்டின் ஆக்க சிதை மாற்றத்தின்போது ஆக்சிஜன் அல்லாத வேதி மாற்றத்தால் லாக்ட்டிக் அமிலம் உண்டாகிறது. பின் லாக்டிக் அமிலம் ஆக்சிஜனேற்றத்தின் மூலமாகக் கார்பன்டை ஆக்சைடையும். நீரையும் கொடுக்கிறது. ஒரு கரப்பான் பூச்சியை ஒரு மணி நேரம் காற்றில் லாத இடத்தில் வைத்துவிட்டுப் பின் காற்றுள்ள இடத்திற்கு மாற்றும்போது அதன் உடலில் லாக்ட்டிக் அமிலம் மிகுதியாகச் சுரக்கிறது. கார்பன் டைஆக்சைடு மிகு அளவில் வெளியேற்றப்படுகிறது. சாதாரணச் சூழ்நிலையில் கரப்பான் பூச்சி எவ்வளவு ஆக்சிஜனை எடுத்துக்கொள்ளுமோ அதைவிட மிகுதி யான அளவு, காற்றில்லாத இடத்தில் வைத்துப் பின் காற்றுள்ள பகுதியில் வைக்கும்போது எடுத்துக் இடத்தில் கொள்கிறது. காற்றுள்ள இருக்கும் போதும், காற்றில்லாத இடத்தில் இருக்கும்போதும் உடலில் சுரக்கும் லாக்ட்டிக் அமிலத்தின் அளவு ஒன்றாகத்தான் உள்ளது. ஆனால் ஆக்சிஜனின் அளவு குறைவாக உள்ளபோது லாக்டிக் அமிலம் ஆக்சிஜ னேற்றம் இருப்பதால், திசுக்களில் அடையாமல் அமிலத்தன்மை கூடுகிறது. எனவே காற்றில்லாச் சுவாசத்தின்போது கார்பன் டை ஆக்சைடு மிகுதி யாக வெளியேற்றப்படுகிறது. மனிதன் மற்றும் சில விலங்கினங்களில், தசைச் செயல்களின்போது காற்றில்லா மூச்சுவிடுதல் நடை பெறுகிறது. தசைகள் சுருங்கி விரியும்போது, குளுக் கோஸ் உடைந்து லாக்ட்டிக் அமிலமாக மாறுகிறது. இச்செயலின்போது ஆற்றல் வெளியாகிறது. ஆக்சிஜனை எடுத்துக்கொண்டு நடைபெறும் வேதிச் காற்றிலியுயிரி 551 செயல்களின்போது வெளியாகும் அளவைவிடக் காற்றில்லா மூச்சுவிடுதலின்போது வெளியாகும் ஆற்றல் குறைவேய வேயாகும். ஏனெனில் குளுக் நக்கோஸ் மூலக்கூறு முழுமையாக ஆக்சிஜனேற்றம் பெறாமை யால் பெரும் பகுதி ஆற்றல் குளுக்கோஸ் மூலக்கூறி லேயே தங்கிவிடுகிறது. வ.சந்திரமோகன் காற்றிலியுயிரி இது ஆக்சிஜனில்லாச் சூழல்களில் வாழ்ந்து, வளர்ந்து இனப்பெருக்கம் செய்யக்கூடிய உயிரினமாகும். காற்றிலியுயிரிகள் (anaerobes) கடப்பாட்டுக் காற்றி லியுயிரிகள், தகவிய காற்றிலியுயிரிகள் என்று இரு கூறாகப் பகுக்கப்பட்டுள்ளன. கடப்பாட்டுக் காற்றிலி யுயிரிகள் என்பவை ஒரு துளி ஆக்சிஜன் இருப்பினும் உயிர்வாழ முடியாத உயிரினங்களாகும். ஆயின் தகவிய காற்றிலியுயிரிகளோ, ஆக்சிஜனற்ற சூழலில் நன்கு வாழ்ந்தாலும் ஆக்சிஜனிருந்தால் அதையும் பயன்படுத்திக் கொள்ளக்கூடியவை. இவ்விரு பகுப்பு களோடு, மேலும் இரு பிரிவுகளையும் இணைக்க முடியும். இவற்றுள் ஒன்று குறை காற்றுயிரிகள் என வழங்கப்படும். ஆக்சிஜன் குறைவழுத்தத்திலும் வேக மாக வளரக்கூடிய உயிரினத் தொகுப்பாகும்; எஞ்சி பது co, விரும்பிகள்எனப்படும் தொகுப்பாகும். இவ்வகை உயிரினங்கள், குறையளவு ஆக்சிஜனையும், கூடுதல் கார்பன் டை ஆக்சைடையும் தக்க நிலை யாகக் கொள்கின்றன. காற்றிலியுயிரி, நுண்ணுயிரிகளின் வாழ்க்கை முறைகளில் வலிவான இடத்தைப் பெற்றுள்ளது. பல்வேறு வகை நுண்மிகளும், நோய் நுண்ணுயிர் களும் காற்றிலி உயிர்ப்பைக் கொண்டே வாழ்க்கை யைத் தொடர்கின்றன. ஆக்சிஜன் மூலக்கூறுகள் வெளியேற்றப்பட்ட சூழல்களில் மட்டுமே இத்தகு காற்றிலியுயிரிகள் வாழும்; இயற்கைச் சுற்றுப்புறங் களில் ஆக்சிஜன் இல்லாமற் போகும் இடங்களில் வளர்ச்சியும், விரிவும் ஏற்றவையாகும். குறிப்பாக, மண்ணுக்கடியில், காற்றுப் புகாவிடங்களில், பல நுண்மிக் காற்றிலியுயிரிகள் ற்றுப் பெருகி வருகின்றன. வகை எண்ண ஆய்வுக்கூடங்களில் வளர்க்கப்படும்போது, வளர் மங்களில் இருந்து ஆக்சிஜன் விலக்கப்பட்டா லன்றி இவ்வகை உயிரிகள் பெருகுவதில்லை. இவ்வுயிரினங்களுக்கு, ஆக்சிஜனால் உண்டாகும் நச்சியல்பு, இவற்றின் அணுக்களில் உள்ள மஞ்சட் புரதங்களால் தோற்றுவிக்கப்படுகிறது. ஆக்சிஜனை ஹைட்ரஜன் பெராக்சை டாகவும் சூப்பர் ஆக்சை டாகவும் மஞ்சட் புரதங்கள் மாற்றுகின்றன. ஹைட்