556 காற்று (இயற்பியல்)
556 காற்று ( இயற்பியல்) மிகை ஒலிவேகக் காற்றிலை வடிவங்கள், மிகை ஒலி வேகத்திற்காக வடிவமைக்கப்படும் காற்றிலை வடிவங்களின் முன் விளிம்பு தட்டையாக இல்லாமல் கூர்மையாக வடிவமைக்கப்பட்டிருக்கும். பகுப்பாய்வு களில் ஆராயப்படும் இரண்டு அடிப்படை வடிவங்கள் பின்வருமாறு: இரட்டை ஆப்பு வடிவம் (double wedge). இதன் குறுக்குவெட்டுத் தோற்றம் நான்கு நேர்கோடுகளைக் கொண்டது. வரைவட்டப் பகுதி (circular arc). மேல் மற்றும் கீழ்ப்புறப் பரப்பு வரை வட்டப் பகுதிகளாகும். மிகை ஒலிவேசுத்தில் பறக்கும் விமானங்கள் மேலே உயரும்போதும், இறங்கும்போதும் குறை ஒலி வேகத்தில் பறக்க நேரிடும். இதனால் மிகை ஒலி வேகக் காற்றிலை வடிவங்கள் வடிவமைக்கச் சற்றுக் கடினம். எனவே, ஒலிவேகப் பறப்பின்போது ஏற்படும் விளைவுகளுக்காக இவற்றை வடிவமைப்பது மிகவும் சிறந்ததாகும். குறை ஒலி மற்றும் மிகை ஒலி வேகக் காற்றிலை வடிவங்களை வடிவமைக்கப் பல்வேறு பகுப்பாய்வு முறைகள் கையாளப்படுகின்றன. இவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அவற்றின் முடிவுகள் கண்டறியப் படுகின்றன. எனவே, இவ்வடிவங்களின் காற்றியங்கு தன்மைகளைப் பற்றி அறிய இயலுகிறது. எனவே ம்முறைகளை வானூர்திகளில் பயன்படுத்தலாம். எஸ். நாகேஸ்வரன் நூலோதி. Darrol Stinton, The Design of the Aeroplane, Granada Publishing. Great Britain, 1983. காற்று (இயற்பியல்) புவிப்பரப்பைப் பொறுத்து வளியின் ஒப்பியக்கம் காற்று எனப்படும். பொதுவாக, வளியின் கிடைத்தள ஒப்பியக்கத்தையே இச்சொல் குறிக்கும். வளியின் செங்குத்து இயக்கத்தைக் குறிப்பதன்று. மேலும் இவ்வியக்கம் குறிப்பிட்ட நேரத்தில் ஒன்று முதல் மூன்று நிமிடங்களில் வளி இயக்கத்தின் சராசரியைக் குறிப்பிடும். சில நொடி அளவில் கணக்கிடப்படும் நுண்வானியல் வளிச் சுழற்சி (micro meteorological circulations) போன்ற குறுகிய கால அளவு சராசரி இயக்கங்களை இச்சொல் குறிப்பதில்லை. வளி இயக் கத்தின் மணிக்கு மணி, நாளுக்கு நாள் மாற்றங் களைக் கணக்கிட இந்த ஒன்று முதல் மூன்று நிமிட இயக்கச் சராசரி பயன்படுகிறது. மேலும், வளி மண்ட லத்தின் பெருமாற்ற விளைவுகளைக் கணக்கிட உவும் பயன்படுகிறது. மண் அரிப்பு, பயிர்வகைகளின் தன்மை. கட்ட டங்களில் அழிவு ஏற்படுத்தல், நீர்ப்பரப்பில் அலை கள் ஏற்படுத்தல் போன்ற செயல்பாடுகளில் புவிபரப் பின் அருகில் காற்றின் நேரடி விளைவுகள் வெளிப் படுத்தப்படுகின்றன. மிகு உயரங்களில் காற்று, வானூர்தி, ஏவுகணை, ஏவூர்தி. கதிரியக்கத் துகள், தூசு, எரிமலை வெளியீடு போன்றவற்றின் இயக்கங் களை நேரடியாகப் பாதிக்கிறது. மேகங்களின் தோற் றத்திற்கும், இயக்கத்திற்கும், பிரிவுகளுக்கும் நேர்முக மாகவோ, மன றைமுகமாகவோ காற்று, காரணமா கிறது. சூடான அல்லது குளிர்ந்த வளித்திண்மத்தைக் காற்று ஓர் இடத்திலிருந்து பிறிதோர் இடத்திற்குச் சுமந்து செல்கிறது. சுழற்காற்று, எதிர்ச் சுழற்காற்றுச் சுழற்சி (cyclonic and anticyclonic circulation). ஒரு மையப்புள்ளியைப் பொறுத்துக் காற்றுச் சுழன்று செல்லும் திசைக் குறியீடுகளின் காற்றோடை (stream line) வடிவங் களின் பகுதிகளை இச்சொற்கள் குறிக்கும். ஒரு புள்ளி யின் செங்குத்தைப் பொறுத்துக் காற்றின் சுழற்சித் திசை புவியின் சுழற்சித் திசையிலே இருந்தால் அது சுழற் காற்றுச் சுழற்சி என்றும், புவியின் சுழற்சித் திசைக்கு எதிர்த்திசையில் இருந்தால் எதிர்ச் சுழற் காற்றுச்சுழற்சி என்றும் குறிப்பிடப்படும். இக்கருத் தின் படி,புவியின் வட அரைக் கோளத்தில் சுழற் காற்றுச் சுழற்சி என்பது ஒரு புள்ளியில் உள்ள குத்துக் கோட்டைச் சுற்றிக் காற்றோடைக் கோட்டின் இடஞ்சுழிஇயக்கத்தையும், தென் அரைக்கோளத்தில் வலஞ்சுழி இயக்கத்தையும் குறிக்கும். இப்பகுதிகளில் முறையே வலஞ்சுழி இடஞ்சுழி இயக்கங்கள் எதிர்ச் சுழற்காற்றுச் சுழற்சி எனப்படுகின்றன. ஒரு மையப் புள்ளியைச் சுற்றிய காற்றோடை வடிவங்கள் மூடிய வடிவுடையவையாக இருந்தால், அவ்வடி வங்கள் முறையே சுழற்காற்று அல்லது எதிர்ச்சுழற் காற்று எனப்படுகின்றன. காற்று வீச்சின் சரிவு ஏறத் தாழ காற்று வீச்சைக் குறிப்பதால் கிடைத்தளத்தில் இத்தகைய சுழற் காற்றின் மையப்பகுதி சிறும வளி அழுத்தப் பகுதியாக இருக்கும். சுழற் காற்று, தாழ் வழுத்தப் பரப்பு, தாழ்வு போன்ற சொற்கள் ஒரே பொருள்படும். காற்றுச் சரிவு உறவுக்கு ஒப்ப, எதிர்ச் சுழற் காற்றின் மையம், கிடைத்தளத்தில் பெரும் அழுத்தப் புள்ளியாக இருக்கும். எதிர்ச்சுழற்காற்று. உயர் அழுத்தப் பரப்பு, உயர்வு போன்ற சொற்கள் ஒரே பொருள்படுபவை. அயன் கீழ் அயன மண்டலப் பகுதிகளில் அனைத்துக் குறுக்குக் கோட்டுப் பகுதிகளிலும் (latitudes). சுழற் காற்றும், எதிர்ச் சுழற்காற்றும் மிகுந்த அளவில் ஏற் படுகின்றன. உயர் மண்டலப் பகுதிகளில் இவை முறையே கீழ் துருவப் பகுதிகளிலும், தாழ் வெப்ப மண்டலப் பகுதிகளிலுமே ஏற்படுகின்றன. இடைப்பட்ட உயரங்களில், காற்றின் போக்கு, பெரும் பாலும் மேற்கு நோக்கியிருக்கும். ஆனால் காற் றோடைக் கோடுகள், அருகில் உள்ள சுழற்காற்றுச் சுழற்சிப் பகுதிகளையும், எதிர்ச் சுழற்காற்றுச்