காற்று (இயற்பியல்) 557
சுழற்சிப் பகுதிகளையும் இணைக்குமாறு பள்ளங்கள் கொண்டுள்ளன. மேடு, வளி மண்டலம் எந்நேரத்திலும் முழுச் சலன மில்லா நிலையில் இல்லையென்றாலும் சுழற்காற்றுச் சுழற்சி, எதிர்ச் சுழற்றுச் சுழற்சி ஆகிய பகுதிகள் வளி மண்டலச் சலனப் பகுதிகள் எனப்படுகின்றன. சுழற்காற்றுப் பகுதிகள், எதிர்ச்சுழற்காற்றுப் பகுதி கள், மேடு பள்ளங்கள் ஆகியவை மேகங்கள் தோன்றுதல், அவற்றின் பயணம், வீழ்படிதல் ஆகிய வற்றோடு தொடர்பு கொண்டவை. எனவே இப் பகுதிகள் சலனமுற்ற வானியல் நிலைகள் எனப்படு கின்றன. சுழற்சி (circulation) என்பதை மேலும் தெளிவாக = ds (1) எனும் சமன்பாட்டின் மூலம் வரையறை செய்யலாம். இங்கு C - என்பது ஏதேனும் ஒரு பரப்பைச் சுற்றிய எனும் மூடிய கோட்டில் சுழற்சியின் அளவு ஆகும்.
- என்பது, பரப்பைச் சுற்றிய எல்லைக்கோடு 8 இல்
ஒரு புள்ளியில் காற்று வேக அளவு. t எனும் கீழ்க் குறியீடு அப்புள்ளியில் எல்லைக்கோட்டுக்கு இணை யான காற்று வேகத்தைக் குறிக்கும். ds என்பது எல்லைக் கோட்டின் ஒரு துண்டுப்பகுதி.எனும் காற்று வேகம், சுழற்காற்றுப் பகுதியில் நேர் குறியா கவும், எதிர்ச் சுழற்காற்றுப் பகுதியில் எதிர்க் குறியுடையதாகவும் இருக்கும். இந்நிலையில் தெரிந் தெடுக்கப்பட்ட பரப்பினுள் காற்றோடைக் கோடுகள் நேராக இருந்தாலும் C எனும் சுழற்சி நேர் குறியா கவோ, எதிர்க் குறியாகவோ இருக்கலாம். ஏனெனில் காற்று வேகப்பாகுபாடு,C இன் மதிப்பைப் பாதிக்கும். குவியும் அல்லது விரியும் காற்று வடிவங்கள். காற் றின் கிடையோட்டம், காற்றின் அடர்த்தியில் நிகர அதிகரிப்பு அல்லது குறை பரப்புகளில் இவை தோன்று வதாகக் கூறப்படுகிறது. மேலும் அறுதியிட்டுக் கூறி னால் எனும் கோட்டில் அடைபட்டிருக்கும் A எனும் பரப்பில் சராசரி பொருள்திணிவின் விரிவு D (horizontal average mass divergence) எனும் சமன்பாடு (2) ஆல் குறிக்கப்படுகிறது. இங்குத் தொகுதியாக்கம். pv. ds D I A (2) 'n' பரப்பின் எல்லை முழுதும் செய்யப்படுகிறது. p என் பது காற்றின் அடர்த்தி, என்பது காற்றின் வேகம். ds என்பது எல்லைக் கோட்டின் ஒரு துண்டு. எனும் கீழ்க் குறியீடு, பரப்பின் செங்குத்துக்கு இணை யான காற்று வேசுக்கூறு என்பதைக் குறிக்கும். பரப்பை நோக்கியிருந்தால் நேர்குறி கொண்டதாக வும், பரப்பை விட்டு எதிர்த் திசையில் இருந்தால் காற்று (இயற்பியல்) 557 எதிர்க்குறி கொண்டதாகவும் கொள்ளப்படும். இத னால் குவிதல் என்பது, விரிவின் எதிர்க்குறியாகக் கொள்ளப்படுகிறது. பரப்பில் அடர்த்தி மாறுதல் களைக் கணக்கில் கொள்ளவில்லையென்றால் இதையே திசைவேகக் குவிதல், திசைவேக விரிவு எனவும் பொருள் செய்யலாம். கிடைதளப் பொருள்திணிவின் விரிவு இயக்கத் தின் செங்குத்து, கூறின் அளவைச் சார்ந்திருக்கும். எடுத்துக்காட்டாக, காற்றடர்த்தியின் தற்காலிக மாற்றம் மிகக் குறைவு ஆதலால், குறிப்பிட்ட கன அகளவு காற்றில் கிடைதளப் பொருள் திணிவு குவிதல் ஏற்படும்போது செங்குத்துத் திசையில் பொருள் திணிவு வெளிநகர்வு ஏற்படும். இவ்வாறு நிகழ்ந்தால் தான் குறிப்பிட்ட கன அளவு காற்றின் அடர்த்தி ஏறத்தாழ மாறாமல் இருக்கும். குறிப்பாக இக்சுன அளவுப் பகுதியின் கீழ்ப்பரப்பு புவிப் பரப்போடு இணைந்திருந்தால், காற்றின் மேல் நோக்கிய நகர்வு. இப்பகுதியின் மேற் பரப்பு வழியே நடைபெறும். இவ்வாறே, குறிப்பிட்ட பகுதியில் பொருள்திணிவு விரிவு ஏற்பட்டால் மேற்பரப்பு வழியே காற்றின் கீழ்நோக்கு நகர்வு ஏற்படும். கிடைதளப் பொருள் திணிவு விரிதல் அல்லது குவிதல், காற்றுச் சுழற்சியோடு தொடர்பு கொண் டது. குவியும் தன்மையுள்ள காற்று வடிவத்தில், காற்று இயக்கம் சுழற்காற்றாக மாறக்கூடும். விரியும் தன்மையுள்ள காற்று வடிவத்தில் காற்றியக்கம் எதிர்ச் சுழற்காற்றாக மாறக்கூடும். நெருங்கி வரும் சுழற்காற்றின் பாதையில் உள்ள இடங்களில் அயன் மண்டல நிலைகளில் குவியும் காற்று வடிவங்களும் பிற பெரும்பான்மைப் பகுதி களில் காற்றின் மேல் நோக்கிய செங்குத்து நகர்வும் ஏற்படும். இந்த மேல்நோக்கு இயக்கம் மேல் நோக்கிச் செல்லும் காற்றில் உள்ள நீராவியைப் படியச் செய்யும். இதனால் இப்பகுதிகளில் செரிந்த மேகத் திரளும் வீழ்படிவும் ஏற்படுகின்றன. இதற்கு எதிராக, எதிர்ச் சுழற்காற்றின் பாதையில் உள்ள பகுதிகளில் கீழ் அயன மண்டலப் பகுதிகளில் விரியும் காற்று வடி வங்கள் ஏற்படுகின்றன. இதனால் அயன மண்டலம் முழுதும் காற்றின் கீழ்நோக்குச் செங்குத்து இயக்கம் ஏற்படுகிறது. இப்பகுதிகளில் மேகங்கள் உருவாதலும், நீராவி படிதலும் மிகக் குறைவாக இருக்கும் அல்லது சிறிதும் இல்லாதிருக்கும். மண்டலத் தரைக்காற்று அமைப்பு (zonal surface winds). காற்றின் பரப்பு, சுழற்சியின் நீளவாக்குச் சராசரி காணுங்கால் இத்தகைய அமைப்புத் தோன்று கிறது. இத்தகைய சராசரிக் கணித்தல் நிலநடுக் கோட்டுப் பகுதிகளில் மிகப் பொலிவிழந்த காற்று மாற்றமுள்ள பரப்புப் காட்டுகிறது. இப்பகுதி நில நடுக்கோட்டுக் குறை வழுத்த மண்டலம் (doldrums) எனப்படுகிறது. இப் பகுதிகள் உள்ளமையைக்