38 கற்காரை உத்திரம்
38 கற்காரை உத்திரம் அது கலவையில் சேர்க்கப்படும் நீரின் அளவு, நீரின் தரத்தைப் பொறுத்து அமையும். நெருப்பு எதிர்ப்பு ஆற்றல் கற்காரையில் உள்ள கற்கள், நீரின் அளவு, சிறு துளைகளைப் பொறுத்து அமையும். கற்காரைப் பிணைப்பு நீக்கிப் பிரிந்து விடும் தன்மை, நீர் அளவு, பெரிய அளவு கற்கள், கற்களின் புறப்பரப்பு ஆசியவற்றைப் பொறுத்து அமையும். கற்காரையின் மீட்சி இயல் (elasticity) தன்மை, கற்காரையின் வலிமை, வயது. கற்களின் வகை ஈரத்தன்மை, இருப்பு ஆகிய வற்றைப் பொறுத்து அமையும். - ஏ.எஸ்.எஸ். சேகர் நூலோதி.I.C.Syal & A.K.Goel, Reinforced Concrete Structures, Second Edition, Wheeler & Co Pvt. Ltd., Allahabad, 1987. படம் 5. பெருக்குதல் முறையால் தலம் சீர்மை செய்யப்படுகிறது. உட்படம்,பெருக்குவதால் உண்டாகும் வரியமைப்பைக் காட்டுகிறது. . சுற்காரையின் தரம் அதனுடைய நொறுக்கல், கணக்கிடப்படும். தாங்கக்கூடியது. எதிர்ப்பு வலிமையைக் கொண்டு கற்காரை உயர் அமுக்கத்தைத் ஆனால் மிகக் குறைந்த இழுசக்தி உடையது. ஆத லால் அமுக்கச்சுமையை மட்டுமே மிகுதியும் கொண்ட அணைக்கட்டு, அஸ்திவாரம் போன்ற கட்டட வேலைகளில் கற்காரை மட்டுமே பயன்படுத்தப்படும். இதைத் தனிக் கற்காரை எனக் கூறலாம். இரும்புக் கம்பிகளும் கற்காரையுடன் பயன்படுத்தப்பட்டால் அது வலிவூட்டிய கற்காரை (reinforced concrete) எனப்படும். அனுமதிக்கப்பட்ட கற்காரையின் பணபுகள். தகைவுகள் - இந்தியச் செந்தர எண் 456-1978இல் உள்ளவாறு இருக்கும். கற்காரை நீடித்து முழுமை யாக உழைக்கும் திறன் - கலவை விகிதம், மணல், கல் ஆகியவற்றின் தரம், நீர் அளவு மற்றும் இறுக்கத் தன்மை ஏற்படுத்துதல், ஆற்றுதல் (curing) ஆகிய வற்றைப் பொறுத்து அமையும். சுமையின் திசையில் ஏற்படும் திரிபு - கற்காரை பயன்படுத்தப்பட்ட காலம், அதன் மீது செலுத்தப் படும் சுமையின் தன்மை, அளவு, சுமை அதன்மீது ஆதிக்கம் செலுத்தும் காலம், கற்காரையில் இருக் கும் ஈரத்தன்மை அளவு, மணல், கல் முதலியவற்றின் தரம் ஆகியவற்றைப் பொறுத்து அமையும், கற்காரை இறுகிக் கடினத் தன்மை அடையும்போது சுருங்கும்; கற்காரை உத்திரம் நீண்டதொரு பாரம் தாங்கும் உறுப்பு, பாரத்தை நீள்புறத்திற்கு நடுவில் செங்குத்தாகத் தாங்கும்போது தாங்கும் பாரத்தின் காரணமாக நடுவில் தொய்வு உண்டாகுமானால் அவ்வுறுப்பு உத்திரம் த்திரம் (beam ) எனப்படும். உத்திரம், அது தாங்கப்பட்டிருக்கும் தாங்கிகளின் (support) நிலையைப் பொறுத்து இரு முனைகளும் தாங்கப்படும் உத்திரம், ஒரு முனை மட்டும் பொருத் தப்பட்ட உத்திரம், பல தாங்கிகளைக் கொண்ட தொடர் உத்திரம் என வகைப்படுத்தப்படுகிறது. உத்திரத்தில் ஏற்படும் தொய்வு, உத்திரத்தின் மேல் பகுதியில் அமுக்கத் தகைவையும் (compressive stress) கீழ்ப்பகுதியில் இழு தகைவையும் (tensional stress) உருவாக்குகிறது (படம் 1). சுமை தாங்கியைப் போன்று உத்திரம் இரு சுவர் களில் அமர்ந்திருக்கும்போது இவ்வாறு தகைவுகள் உருவாகும். ஒரு முனை மட்டும் சுவரில் பொருத்தப் பட்ட உத்திரத்தில்(cantilever beam) இந்தத்தகைவுகள் தலைகீழாக மாறுபட்டு இருக்கும் (படம் 2.). அமுக் கத் தகைவைக் கழித்தல் குறியாகவும் (), இழு தகை வைக் கூட்டல் குறியாகவும் (+) குறிக்கலாம். வகை சாதாரணமாக ஒரு பகுதி சிமெண்ட், இரு பகுதி கற்கள், நான்கு பகுதி நீர் சேர்ந்த M 150 உள்ள கற்காரையே உத்திரம் செய்யப்பயன்படும். கற்காரையில் இழு தகைவு கொடுக்கும் ஆற்றல் மிகவும் குறைவாக இருக்கும். அதை அதிகரிக்க இழு