பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/584

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

564 காற்று உயிரியியல்‌

564 காற்று உயிரியியல் மாசுப்பொருள்கள் 46% ரயில், விமானம், பேருந்து, மகிழுந்து (car) போன்ற போக்குவரத்து அமைப்பு களால் தோற்றுவிக்கப்படுகின்றன. இவற்றுள் CO முதன்மை பெறுகிறது. எரி பொருள்கள் முழுமை யாக எரியாத நிலையில் CO இன் தோற்றம் எளிதா கிறது. பாக்ட்டீரியச் இயற்கையில் செயல்முறைகள் ஆண்டுக்கு 5 × 10 டன் NO ஐச் சூழ்வெளியில் கலக்கின்றன. பெட்ரோல், கார்பன் ஆகியவற்றின் எரிதலால் மேலும் 5x107 டன் ஆண்டுதோறும் காற் றில் சேருகின்றது. SO, காற்றில் கலப்பதற்கு முதன் மையான காரணம் பெட்ரோலியம், நிலக்கரி ஆகிய எரிமங்களில் கந்தகம் மிகு அளவில் இருப்பதேயாகும். SO,உம்,NO, உம் காற்றில் கலந்து மேகத்துள் சேர்ந்து அமில மழையாகப் பொழிகின்றன. இது கிரீஸ், இத்தாலி, இந்தியாவில் உள்ள பல் விலை மதிப்பற்ற கற்சிலைகளையும், தாஜ்மஹால் போன்ற வனப்புமிக்க கட்டடங்களையும் கரைத்துவிடக்கூடும். துகள் நிலைப் பொருள்கள் காற்றில் நிறைந் துள்ளன. காற்றில் அவற்றின் நிலைபெறும் காலம் அவை படியும் நேரத்தைப் பொறுத்தது. துகள் களின் பண்புகளுள் முதன்மையானது அவற்றின் பரும னாகும். பொதுவாக, குறுக்களவு 0.0002 மைக்ரோ மீட்டர் முதல் 500 மைக்ரோ மீட்டர் வரையிலான பரந்த வரம்பில் அமைந்துள்ளது. நகர்ப்புறக் காற்றில் ஒரு களி செ.மீ.க்கு 100,000 துகள்கள்வரை இடம்பெற வாய்ப்புள்ளது. துகள்களின் பரப்பளவு கூடுதலாக இருப்பதால் ஒளியைச் சிதறச் செய்வதும், கட்புலப்பாட்டைக் குறையச் செய்வதும் சூரிய ஒளி யின் மீத து ஏற்படும் பாதிப்புகளில் முக்கியமானவை ஆகும். . துகள்களைக் கனிம வகை, கரிம வகை என கூறுகளாகப் பிரித்தறியலாம். கனிம வகைகளுள் இரும்பு ஆக்சைடுகள், கால்சியம் ஆக்சைடு, காரீய புரோமைடு, சல்ஃப்யூரிக் அமில மூடுபனி ஆகியனவும், அனல்மின் நிலையங்களிலிருந்து உமிழப்படும் தூசுச் சாம்பலும் (fly ash) குறிப்பிடத்தக்கவை. சூரிய வகைத் துகள்களுள் புற்றுநோய்த் தோற்றிகளான பல்வளைய அரோமாட்டிக் ஹைட்ரோகார்பன்கள் பரவலாகக் காணப்படுகின்றன. துகள்களைக் காற்றிலிருந்து அகற்றுவதற்கு கரிமவகை நிலை மின்புல வீழ்படிவாக்கிகள் (electrostatics separators) பயன்படுகின், றன. வளிநிலை மாசுப் பொருள்களை அகற்றுவதற்குத் தக்க நீர்மங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அனைத்துல கிலும் ஒப்புக் கொள்ளப்பட்ட காற்றின் அளவுகள் அட்டவணை தர நியம 8 இல் தரப்பட்டுள்ளன. மே.ரா.பாலசுப்ரமணியன் நூலோதி. A. K. De, Environmental chemistry, Wiley Eastern Ltd, New Delhi, 1987. நாற்று இயக்க மையம் உந்தல் திருப்புமைக்கான (pitching) இறக்கைக் கெழு உயர்த்தலுக்கான இறக்கைக் கெழுவினால் பாதிக்கப் படாதவாறு அமைந்த விமான இறக்கையின் இருப் பிடமே (position) காற்று இயக்க மையம் (aerody- namic center) எனப்படும். இறக்கை, வால் மற்றும் காற்று இயக்கம் சார்ந்த பரப்புகளின் மேல் செயல் படும் விசை, காற்று இயக்க மையத்தில் செயல்படும் மேல்நோக்கி உயர்த்தும் விசை (lift), கீழ்நோக்கிய இழுவிசை (drag) என்றும், மையத்தில் செயல்படும் உந்தல் திருப்புமை என்றும் பிரிக்கப்படும். குறை ஒலி வேகத்தில் விமானத்தின் காற்றிலைப் பகுதியின் (airfoil section) காற்றியக்க மையம் வட்டநாணின் கால்பகுதி (quarter chord) அளவே இருக்கும். உயர்த்தும் விசை தாக்கக் கோணம் காற்றின் திசை உந்தல் திருப்புமை இழுவிசை வெளியியக்க மையம் படம் 1. காற்று இயக்க மையத்தைக் காட்டும் காற்றிலைப் பகுதியில் செயல்படும் காற்று இயக்க விசைகள் வா.அனுசுயா Coord. Darrol stinton, The Design of the Aeroplane, Granada publishing. Co., London, 1983. காற்று உயிரியியல் காற்றிலுள்ள நுண்ணுயிரிகள், அவை தாவரங் விலங்கினங்களுடனும் களுடனும், கொண்டுள்ள தொடர்பு, மனிதன் மூச்சு விடும்போது காற்றிலுள்ள நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய் ஒவ்வாமை போன்றவை பற்றிய இயலுக்குக் காற்று உயிரியியல் (aero biology) என்று பெயர்.