காற்றுக் குளிர்பதனம் 567
குளிர்காலத்தில் விடியற்காலையில் இத்தகைய பனித் தீவலைகள் படிந்திருப்பதைக் காணலாம். உச்ச இவ்விதம் காற்று, குறித்த வெப்பநிலையில் அளவு நீரைக் கொண்டிருந்தால் 100% ஈரப்பதம் கொண்டதாகக் குறிப்பிடுவர். நீரின் அளவு அதை விடக் குறைவாக இருந்தால் அது எத்தனை சத வீதம் உள்ளதோ அதையே ஈரப்பதமாகக் குறிப் பிடுவர். எடுத்துக்காட்டாக 37 Cவெப்பநிலையில் ஒரு பவுண்டு காற்றுக் கொள்ளக் கூடிய உச்ச அளவு நீராவி 291-8கிரெயன். ஒருநாள்காற்றில் 200கிரெய்ன் நீராவியே இருந்தால், ஈரப்பதம் x. 100% 200 291.8 அதாவது 68.5% என்று குறிப்பிடுவர். ஈரப்பதம் இருக்கும்போது) மிகுதியாக (80%, 90% என்று உடலிலிருந்து வெளியாகும் ஈரப்பதமும் சைவான வியர்வை எளிதாக ஆவியாவதில்லை. அதே சமயம் மிகக் குறைந்த அளவு தன்று.மூச்சுக் குழாய் போன்ற உடல் உறுப்புகள் அளவு ஈரப்பதமில்லாமையால் போதிய மடையக் கூடும். தாக்க காற்றோட்டம். குளிர்பதனப்படுத்தப்பட்ட சூழ் நிலையின் வெப்ப அளவு நலமாக அமைவது. வெளியே உள்ள சூழ்நிலையின் வெப்ப அளவையும் பொறுத்தது. இவற்றிற்கிடையே பெரும் வேறுபாடு இருப்பது ஊறுவிளைவிக்கக்கூடும். மேலும் சூழ்நிலை யில் ஓரளவு காற்றோட்டமும் இருக்கவேண்டும். இது முற்றிலும் இல்லாமலும் இருக்கக்கூடாது. அதேசமயம் மிகையாகவும் இருக்கக்கூடாது. காற்றுக்குளிர்பதனம் செய்யும்போது, உள்ளிருக்கும் காற்று, கோடையில் குளிர்விக்கப்படுகிறது; குளிர் காலத்தில் சூடாக்கப் படுகிறது. ஈரப்பத அளவு குறைக்கப்பட்டோ, கூட்டப்பட்டோ இசைவான நிலையில் வைக்கப்படு கிறது. இசைவான காற்றோட்டம் உருவாக்கப்படு கிறது. தொடர்ந்து பழைய காற்று அகற்றப்பட்டுப் புதுக்காற்று வடிகட்டிகளின் மூலம் செலுத்தப்பட்டுத் தூசு, கழிவுப் பொருள்கள், கெடு நாற்றம் ஆகியவை இல்லாமல் சூழ்நிலை காக்கப்படுகிறது. திறமையான குளிர்பதனத்திற்கான வெப்பநிலை. ஈரப்பதம். நலமான சூழ்நிலைக்கு ஏற்ற வெப்பநிலை யைச் சரியாகக் குறிப்பிட்டுக் கூற இயலாது. வெவ் வேறு சமூகத்திற்கும், மனிதருக்குமிடையே இது மாறுபடும். எடுத்துக்காட்டாக, குளிர் நாடுகளிலிருந்து வரும் மக்கள் ஓரளவு குறைந்த வெப்பநிலையையே விரும்புவர். ஒருவருக்கு நலமான சூழ்நிலை. இன்னொருவருக்குக் குளிராக இருக்கலாம். ஆனால் மொத்தமாகப் பார்க்கும்போது இந்திய நாட்டில் கோடைக் காலத்தில் வெப்பநிலை 22°C -25°C) வரையும், ஈரப்பதம் 40% - 60% வரையும், குளிர் காலத்தில் வெப்பநிலை 17°C -20°C வரையும், ஈரப்பதம் 50%-70% வரையும் நலமான சூழ்நிலை காற்றுக் குளிர்பதனம் 567 யாக உள்ளன. காற்றோட்டம் நிமிடத்திற்கு 20-25 அடி என்னும் கணக்கில் அமையும். கணிப்பொறி தொலைபேசிக் கருவிகள் போன்றவை இயங்கும் அலுவலகங்களில் இவற்றிற்கு ஏற்ற வெப்பநிலை. ஈரப்பதம் ஆகியவற்றை இக்கருவிகளின் தயாரிப் பாளர்கள் முடிவு செய்கின்றனர். குளிர்பதனக் கருவிகள் கருவிகளின் பணி. அறை குளிர்பதனம் செய்யப் படும் முன், அறையின் உள்வெப்பநிலையும், அறைக்கு வெளியே உள்ள. சூழ்நிலை வெப்பநிலையும் ஒர அளவில் உள்ளன. குளிர்பதனம் செய்வதற்காக அறை யின் வெப்பநிலை குறைக்கப்பட வேண்டும். அதாவது மிகை வெப்பம் வெளியேற்றப்பட அறையிலுள்ள வேண்டும். இதன் மூலம் அறையின் வெப்பநிலை குறையும் ஆனால் ஒரு முறை வெளியேற்றிய பின் விட்டுவிட்டால், அறையின் புறச்சூழ் அப்படியே நிலையிலுள்ள வெப்பம், மீண்டும் மெதுவாக அறை யின் சுவர்கள், கூரை, வழியாக கதவு, சன்னல் உள்ளே வந்து வெப்பநிலையை அதிகரிக்கச் செய்யும். ஆகவே, அறையைக் குளிர்பதன நிலையிலேயே வைத்திருக்க இவ்விதம் புகும் வெப்பத்தையும் உடனுக்குடன் வெளியேற்ற வேண்டும். இப்பணி களையே குளிர்பதனக் கருவிகள் செய்கின்றன. கருவிகளின் ஆற்றல். நீர் மேல் மட்டத்தி லிருந்து கீழ்மட்டம் வர வெளி ஆற்றல் தேவை யில்லை. ஆனால், கீழ்மட்டத்திலிருந்து மேலே காண்டு செல்ல எக்கி தேவைப்படுகிறது. அதே போன்று வெப்பம் உயர் வெப்பச் சூழ்நிலையிலிருந்து குறைந்த வெப்பச் சூழ்நிலைக்குத் தானாகச் செல்லும். ஆனால் குறைந்து வெப்பச் சூழ்நிலையிலிருந்து உயர் வெப்பச் சூழ்நிலைக்கு வெப்பத்தைக் கடத்த ஆற்றல் செலவிடப்படவேண்டும். ஆற்றலை அளித்து வெப்பத்தைக் கடத்தும் பணியையே குளிர் பதனக் கருவிகள் மேற்கொள்கின்றன. ஆகவே கருவிகள் எவ்வளவு ஆற்றல் வாய்ந்தனவாக இருக்கவேண்டும் என்பது, எவ்வளவு வெப்பம் கடத்தப்படவேண்டும் என்பதைப் பொறுத்தது. இவ்வெப்பத்தின் அளவு குளிர்பதனப்படுத்தப்பட வேண்டிய இடத்தின் அளவு. கட்டடம் கட்டுவதில் பயன்பட்ட பொருள்கள், உள்ளே வெப்பநிலை எய்தவேண்டிய வெளியே நிலவும் வெப்பநிலை ஆகிய பலவற்றைப் பொறுத்திருக்கும். கட்டட அமைப்பு. அளவு. இவ்வாற்றலை டன் என்னும் அளவில் கணக் கெடுக்கின்றனர். முன்பு பனிக்கட்டிகளையே சூழ் நிலையைக் குளிர்விப்பதற்குப் பயன்படுத்தியதால், ஒரு டன் (2000 பவுண்டு) பனிக்கட்டியை 24 மணி நேரத்தில் முழுதும் உருக்குவதற்குத் தேவையான