கற்காரை உத்திரம் 39
படம் 1 கற்காரை உத்திரம் 39 + தகைவு ஆற்றல் மிகுந்துள்ள இரும்புக் கம்பி வலிவூட் டியாகப் (reinforcement) பயன்படுகிறது. ஏறத்தாழ இரும்புக் கம்பியின் வெப்ப எண்11.7 × 10 6 °C, ஏறத்தாழ கற்காரையின் வெப்ப எண் அளவு 9.9 × 10-6 ° C இருப்பதாலும், எளிதில் கற்காரை யுடன் பிணைப்பு ஏற்படும் தன்மை இருப்பதாலும் இரும்புக் கம்பி வலிவூட்டியாகப் பயன்படுகிறது. வவிவூட்டிய சுற்காரை (reinforced concrete) ஒரே தன்மையுடைய பொருளாகவும், கற்காரை, கம்பி ஆகியவற்றின் மீது ஏற்படும் தகைவு, திரிபு ஆகியவற் றின் தொடர்பு ஒரே சீராக இருப்பதாகவும் கருதப் படுகிறது. வலிவூட்டிய கற்காரையைப் பயன்படுத்து வதால் பல நன்மைகள் உண்டு. இது சிக்கனமானது: நில அதிர்வைத் தாங்கக் கூடியது: பூச்சி,நீர், நெருப்பு ஆகியவற்றால் அழியாதது;விரும்பிய வடிவத் தில் கட்டக்கூடியது;நீண்ட காலம் உழைக்கக்கூடியது. இழு தகைவு மட்டும் கொடுக்கக்கூடிய கீழ்ப்புறம் மட்டும் கம்பி வைக்கப்பட்ட ஒருபுறம் வலிவூட்டிய உத்திரம், அழுத்தம் தகைவு, இழு தகைவு இரண்டும் கொடுக்கக்கூடிய கீழ்ப்புறமும் மேல்புறமும் கம்பி வைக்கப்பட்ட "இருபுற வலிவூட்டிய உத்திரம், மேல் பகுதியில் தளத்துடன் இணைந்த ஓரம் நீண்ட உத்திரம் (flanged beam) என வலிவூட்டிய கற்காரை உத்திரம் மூன்று வகைப்படும் (படம் - 4). படம் 2. ஓர் உத்திரத்தில் கொடுக்கப்படும் பாரத்தைத் தாங்குவதற்கு இழு தகைவு, அழுத்துத் தகைவு, துணிப்புத் தகைவு (shear stress) ஆகியவை தேவை. ஆதலால் உத்திரம் செய்யப் பயன்படும் கற்காரை, இரும்புக் கம்பி ஆகியவற்றின் இழு சக்தி. அழுத்தச் சக்தி, துணிப்புச் சக்தி ஆகியவற்றை ஆய்வு மூலம் அறியவேண்டும். ஓர் உத்திரத்தைத் திட்டமிட்டு அதன் நீள அகல அளவுகளை அமைக்கும்போது அது தாங்க வேண்டிய பாரம், தாங்கிகளுக்கு இடையே உள்ள இடைவெளி, கற்காரை, கம்பி ஆகியவற்றின் வலிமைத் தகுதி, உத்திரத்தின் தேவையான அகலம் ஆகியவற்றை முதலில் அறிந்து தீர்மானிக்க வேண்டும். பின்னர் சிக்கனமான பொருட்செலவில் தேவையான வலி மையைக் கொடுக்கும் இரும்புக் கம்பிகளின் அளவு, உத்திரத்தின் நீள, அகல, உயரத்தைக் கணக்கிடுவது வெட்டுமுகப் பகுப்பாய்வு முறை எனப்படும். மற்றொரு வகை, உத்திரத்தின் அகலம், உயரம், நீளம் ஆகிய அளவுகளையும், கம்பிகளின் அளவு களையும் தீர்மானித்துவிட்டு அவற்றுக்குத் தேவை யான தடை திருப்புத் திறனைக் கணக்கிடல் ஆகும். து வெட்டுமுக அமைப்பு முறை எனப்படும். கணக்கிடப்பட்ட வெட்டுமுகத்தில் பயன்படுத்தப் பட்ட இரும்புக்கம்பிகளின் இழுசக்தி முழுமையாகப்