572 காற்றுச் சட்டகம்
572 காற்றுச் சட்டகம் இடைப்பட்டதாக இருக்கிறது. இதனுடைய அதிக உறுதியும், மீட்சியின் நிலைத்தகவும். இதை மிகவும் பயனுடையதாக்குகின்றன. குறிப்பாக மிகை ஒலி வேகங்களில் இவ்வுலோகம் பயன்படுகிறது. இதன் ஆல்ஃபா உலோகக் கலவை குறைந்த வெப்பநிலை களில் உறுதியாகவும், கம்பியாக நீட்டுந் தன்மை யுடையதாகவும் இருக்கும். அறை வெப்பநிலையில் ஓரளவிற்கு உறுதியாக இருக்கும். பீட்டா உலோகக் கலவைகளை வெப்பப்பதப்பாடு செய்ய முடிவதால் நல்ல உறுதியோடு இருக்கும். காற்றுச் சட்டகங்களில் ஆல்ஃபா & AL-IMo-IV எனப்படும் வகையும், ஆல்ஃபா-பீட்டா 6 AL - 4V எனப்படும் வகையும் பயன்படுகின்றன. இவற்றைச் சிறிது சூடேற்றினால் வடிப்பது எளிதாக இருக்கும். இவற்றின் தன்மைகளால் இவற்றைக் கொண்டு பகுதி களை வடிவமைப்பது எளிமையாகவே இருக்கிறது. அயர்ச்சி (fatigue). காற்றுச் சட்டகஙகளில் ஏற் படும் அயர்ச்சியைத் தவிர்ப்பது மிகவும் இன்றியமை யாததாகும். இதனைத் தவிர்க்கப் பகுப்பாய்வு முறை கையாளப்படுகின்றன. களும், ஆய்வுகளும் கட்டு மானப் பகுதிகள் தொடர்ச்சியாக ல்லாத டங் களில் தகைவு அதிகமாகிறது. இவை அயர்ச்சி வெடிப் பின் மையப் பகுதியாக அமைகின்றன. பின்னர் சுமைகளின் தன்மை மாறி மாறி அமையும்போது, இவ்வெடிப்புகள் பரவ, காற்றுச் சட்டகம் உடைய நேரிடுகிறது. பொதுவாக அயர்ச்சியைத் தடுக்க சரியான தகைவுத் திறனாய்வு செய்தல், ஒவ்வொரு பகுதி யிலும் ஏற்படக்கூடிய சுமைகளின் அளவைக் கணக் கிடுதல், பயன்படுத்தப்படும் உலோகங்களின் அயர்ச் சித் தன்மைகளை வேறுபட்ட தகைவுகளுக்குப் பெறு தல், மேலே குறிப்பிட்ட மூன்று முறைகளைக் கொண்டு அயர்ச்சிப் பகுப்பாய்வைச் செய்தல், அயர்ச்சிச் சோதனைகள் செய்தல் ஆகிய முறைகள் பின்பற்றப்படுகின்றன. உலோகங்கள், கட்டுமான அமைப்பின் அயர்ச்சி எதிர்ப்புத் திறன், உலோகங் களின் அமைப்பு, தன்மை, தொடக்கத்தகைவின் அளவு மாறும் அழுத்தத்தின் அளவு, தொடர்ச்சியற்ற கட்டுமானப் பகுதிகள், வெப்ப நிலை போன்ற பல் வேறு கூறுகளால் வேறுபடும். பொதுவாக இவை அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்தவை. தற்போது அயர்ச்சியைத் தடுக்க வடிவமைப்பில் அயர்ச்சி எதிர்ப்பு, அயர்ச்சி தாங்கும் தன்மை என இரண்டு வழிகள் பின்பற்றப்படுகின்றன. அயர்ச்சி எதிர்ப்பு முன்னர்க் குறிப்பிட்ட வழிகளில் பெறப்படுகிறது. அயர்ச்சி தாங்கும் தன்மை, மிகையான கட்டமைப் பின் மூலம் பெறப்படுகிறது. இதன் காரணமாக அயர்ச்சியினால் ஓரிரண்டு கூறுகள் (elements) மட்டுமே சேதமடையும். அயர்ச்சி எதிர்ப்பிற்காகக் காற்றுச் சட்டகங் களின் முக்கிய பகுதிகள் வேறுபட்ட சுமைகளில் ஆய்வு செய்யப்படுகின்றன. வானூர்தியின் ஆயு களுக்குத் தகுந்தவாறு இவ்வாய்வு முறைகள் அமைக் கப்படுகின்றன. இவ்வாய்வுகளுக்கு உட்படும் அயர்ச்சி எதிர்ப்புக் கட்டுமானங்களில் சோதனை நேரத்திற் கும். வானூர்தியின் ஆயுளுக்கும் தகுந்தவாறு அயர்ச்சிப் பாதுகாப்புக் கூறு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அயர்ச்சி தாங்கும் கட்டுமானங் களுக்கு அயர்ச்சிப் பாதுகாப்புக் கூறின் அளவு சற்றுக் குறைவாக எடுத்துக் கொள்ளப்படும். மிகை ஒலிவேக வானூர்திகளின் காற்றுச்சட்டங்கள். மேக் - 2 என்ற வேகத்தில் பறக்கும் வானூர்தியின் கட்டமைப்பு, குறை ஒலிவேக வானூர்திகளின் கட்ட மைப்பின் தொடர்ச்சியாகவே இருக்கும். மேக் 2 இலிருந்து மேக் 6 வரையுள்ள வேகங்களில் செயல் படும் வானூர்திகள் பறக்கும் தொலைவு குறை வாக இருப்பின் வழக்கமாகப் பயன்படும் கட்டு அமைப்புகளையே பயன்படுத்தலாம். இவை சூடான கட்டமைப்புகள் எனப்படுகின்றன. இவை தேவையான அதிக வெப்பநிலையிலும் வலிமை மான காண்டவை. உயர் மேக் 6 க்கு மேல் உள்ள பறப்புகளில் வெப்பந்தாங்கும் உலோகங்கள் பயன்படுத்தப்பட வேண்டும். காற்றியங்கு வெப்பத்திலிருந்து பாதுகாப் பளிக்கப்பட வேண்டும். மேலும் எரிபொருள்களை வெப்பம் தாக்காதவாறு அவை தனித்து வைக்கப்பட வேண்டும். இவ்வகை வானூர்திகளில் நீர்ம நிலையி லுள்ள ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்த லாம். இவற்றின் எடை குறைவாக இருப்பதால், இதை வைத்திருக்கத் தேவையான கொள்ளளவு அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக பொருள் இறக்கைகளில் சேர்த்து வைக்காமல், கட்டு மானச் சட்டத்தில் வைக்கப்படுகிறது. உயர்வகை உலோகக் கலவைகளும், உயர் வெப்பந்தாங்கும் உலோகங்களும் மீ மிகை ஒலிவேக விமானங்களின் காற்றுச் சட்டங்களில் பயன்படுத்தப்படுகின்றன. உயர் வெப்பம் தாங்கும் உலோகங்கள் எளிதில் ஆக்சிஜனேற்றம் அடைகின்றன. அதனைத் தவிர்க்க இவ்வுலோகங்களுக்குப் பாதுகாப்புப் பூச்சு அளிக்சு வேண்டும். எரி புதிய உலோகக்கலவைகளும்,உ உருவாக்கும் முறைகளும் ஆராய்ச்சிகளின் விளைவாக உருவாக்கப் படுகின்றன. இவற்றால் எதிர்காலத்தில், காற்றுச் சட்டகங்களின் வடிவமைப்பு மிகவும் எளிதாக இருக்கும். எஸ். நாகேஸ்வரன் நூலோதி. Darrol Stinton, The Design of the Aeroplane, Granada Publishing, Great Britain, 1983.