பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/593

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காற்றுச்‌ சுரங்கம்‌ 573

காற்றுச் சுரங்கம் காற்றின் ஊடாகச் செல்லும் வானூர்தியின் இறக்கை கள். வால், உடல் பகுதி அல்லது விமானக் கட்டகம் (fuse lage) ஆகியவற்றின் பரப்புகள் காற் றுடன் தொடர்பு கொண்டுள்ளன. இப்பரப்புகள் மிகவும் கவனமாக வடிவமைக்கப்பட வேண்டும். இவ்வடிவமைப்பிற்குக் காற்றுச்சுரங்கம் (wind tunnel) பெரிதும் உதவுகிறது. காற்றுச் சுரங்கம் என்பது பெரிய மூடப்பட்ட பரப்பாகும். அப்பரப்பினுள் வானூர்தியின் சிறிய மாதிரிப் படிமம் பறக்காமல் ஓரிடத்திலேயே நிலை யாக வைக்கப்பட்டிருக்கும். பிறகு இச்சுரங்கத்திற் குள், எந்திரங்களின் உதவியால் காற்றுச் செலுத்தப் படுகிறது. இக்காற்று வளிமண்டலத்தைப் போலச் செயல்படுகிறது: மாதிரிப் படிமத்தின் வழியாகச் செல்கிறது. இது வானூர்தி, காற்றில் பறந்து செல் வதை ஒத்துள்ளது. காற்றுச் சுரங்கத்தில் வானூர்தியின் மாதிரிப் படிமம் ஆய்வு செய்யப்படுகிறது. இவ்வாய்வுகள். மாதிரிப் படிமத்தைப்போல வடிவமைக்கப்பட்ட வானூர்திகள் எவ்வாறு பறக்கின்றன என்பதைத் தெரிவிக்கின்றன. ஆகவே, வடிவமைப்பில் ஏதேனும் மாற்றம் தேவைப்பட்டால் அது எளிதாக கொள்ளப்படுகிறது. முழு அளவில் வானூர்தியின் வடிவமைப்பை ஆய்வு செய்வது மிகவும் கடினமாகும். மேற் வானூர்தியில் காற்று ஏற்படுத்தும் விளைவுகள். காற்று, தூக்குவிசை எனப்படும் மேல் நோக்கிய விசையை வானூர்தியில் உண்டாக்குகிறது. இவ் விசை வானூர்தியின் இறக்கைப் பரப்புகளின் வழி யாகச் செல்லும் காற்றால் உருவாகிறது. அடுத்து, காற்று வானூர்தியில் பின்புற விசையை (backward force) உண்டாக்குகிறது. இது பின்னிழு விசை எனப் படும். இவ்விசை வானூர்தியின் முன்னோக்கிய அசைவிற்கு எதிராகச் செயல்படுகிறது. இப்பின்னிழு விசை, காற்று வானூர்தியின் முன் பகுதியையும், விளிம்புகளையும் மோதுவதால் மட்டுமல்லாமல். வானூர்தியின், உடல், இறக்கைகளின் பக்கப் பரப்புகளைப் பின்புறமாக உராய்வதாலும் ஏற்படு கிறது. இதற்கு உராய்வு என்று பெயர். மேலும், இவ்வுராய்வால், வானூர்தியின் பரப்புகள் சூடாக்கப் படுகின்றன. கைகளைத் தேய்ப்பது போல், காற்றும் வானூர்தியின் பரப்புகளைத் தேய்த்து, வெப்பத்தை உண்டாக்குகிறது. வானூர்தி வேகமாகச் செல்லும் போது, உராய்வு மிகுதியாக ஏற்பட்டு, வெப்பம் மிகுதியாக உண்டாக்கப்படுகிறது. வானூர்திப் பரப்புகள் சூடாகின்றன. ங்ஙனம் வானூர்தி, மிகுதியான தூக்கு விசையைப் பெறு மாறு வடிவமைக்கப்பட வேண்டும். இவ்வானூர்தி மிகு எடையுடையதாக இருந்தாலும் காற்றில் தாங் காற்றுச் சுரங்கம் 573 கப்பட வேண்டும். வானூர்தி வேகமாகப் பறப்பதற்கு ஏதுவாக, குறைந்த பின்னிழு விசையைப் பெற்றிருக்க வேண்டும். வானூர்தியின் பரப்புகள். மிகக் குறை வான காற்று உராய்வைப் பெறுமாறு வடிவமைக்கப் பட வேண்டும். இல்லையேல், அவை மிகவும் சூடாகி, வானூர்திக்குச் சேதம் விளைவிக்கக்கூடும். இறக்கை வடிவமைப்பு. இறக்கைகளின் அமைப்பை வடிவமைப்பதே, முக்கியமானதாகும். இறக்கைகள் வளைவாக உள்ளமையால் இவற்றின் வழியாகச் செல்லும் காற்றும் வளைவான பாதையில் செல் கிறது. இவ்வளைவு, இறக்கையின் கீழ்ப்பரப்பைவிட மேல்பரப்பில் மிகுதியாக உள்ளது. இவ்வடிவமைப் பால், இறக்கைகளில் காற்றால் ஏற்படும் தூக்கு விசை, பின்னிழு விசை ஆகியவற்றில் பல மாற்றங் கள் ஏற்படுகின்றன. வானூர்தியின் மாதிரிப் படிவங்களை ஆய்வு செய்வதன் மூலம் சிறந்த வடிவமைப்புப் பெறப்படு கிறது. இம்மாதிரிப் படிவம், காற்றுச் சுரங்கத்திற் குள், மெல்லிய கம்பிகளால் தாங்கப்படுகிறது. இம் மாதிரிப் படிவத்திற்குள் பல அளவிடும் கருவிகள் உள்ளன. இவை காற்றுப் படிவத்தின் வழியாகச் செல்வதால் ஏற்படும் வெப்பநிலை, அதன் மீது செயல்படும் விசை ஆகியவற்றை அளக்கின்றன. இவ் வளைவுகள் மின் கம்பிகளின் மூலம் சுரங்கத்திற்கு வெளியேகொண்டுவரப்படுகின்றன. இவை வானூர்தி களை வடிவமைக்கும் பொறியாளர்களால் ஆய்வு செய்யப்படுகின்றன. வானூர்தியின் வடிவமைப்பையும், கட்டமைப் பையும் பற்றி அறிந்து கொள்வது வானூர்தியியல் எனப்படும். இப்பொறியாளர்கள் வானூர்திப் பொறி யாளர்கள் எனப்படுவர். ஆனால் காற்றுச் சுரங்கம் வானூர்திக்கு மட்டுமன்றிப் பொறியியலின் பிற பிரிவு களுக்கும், அறிவியலார்க்கும் பயன்படுகிறது. இ சுரங்கங்கள் காற்றுடன் தொடர்பு கொண்டு இயங் கும் பேருந்து, படகு, தொடர் வண்டி, புவியிலிருந்து விண்வெளிக்குச் செல்லும் பெரிய ஏவூர்தி போன்ற அனைத்து ஊர்திகளையும் வடிவமைக்க உதவுகின் றன. இக்காற்றுச் சுரங்கம் சுட்டடம், பாலம் ஆகிய வற்றின் மாதிரிகளை ஆய்வு செய்யவும் பயன்படு கிறது. காற்றுச் சுரங்கத்தின் உள் நிலைகள் கவனமாகக் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட வேகத் தில் காற்று இதன் வழியாகச் செல்கிறது. அதன் வெப்பநிலை ஒரு குறிப்பிட்ட நிலையில் வைக்கப்படு கிறது. காற்றின் வேகம், வெப்பநிலை ஆகியவை மிகவும் நுட்பமாக அறியப்பட வேண்டும். இப்பண்பு கள் சுரங்கத்தினுள் உள்ள மாதிரிப் படிவத்தின் மீது காற்றுச் செயல்படுத்தும் விசைகளை அறுதியிடுகின் றன. காற்றின் அழுத்தமும் மிகவும் முக்கியமான தாசுக் கருதப்படுகிறது. சுரங்கத்தினுள் உள்ள