574 காற்றுச் சுரங்கம்
574 காற்றுச் சுரங்கம் காற்றின் அடர்த்தி காற்றின் அழுத்தத்தையே சார்ந் துள்ளது. காற்றுச் சுரங்கத்தில் பல வகை உண்டு. எளிய வகை நீண்டநேரான சுரங்கமேயாகும். ஒரு முனை யில் உள்ள விசிறியின் உதவியால் சுரங்கத்துள் காற்றுச் செலுத்தப்படுகிறது. மற்றொரு முனையில் உள்ள விசிறி, சுரங்கத்திலுள்ள காற்றை உறிஞ்சி வெளியிடுகிறது. சுரங்கத்தின் இரு முனைகளும் திறந் துள்ளமையால், உள்ளேயுள்ள காற்றின் வெப்பநிலை அழுத்தம் ஆகியவை வெளியில் உள்ள நிலையைப் பொறுத்தேயுள்ளன, ஆனால் காற்றின் வேகம் மாறு படுகிறது. இவ்வேக மாற்றம், விசிறியை வேக மாகவோ, மெதுவாகவோ திருப்பப்பயன்படுகின்றது. காற்றுச் சுரங்கம், அனைத்திடத்திலும் ஒரே அகலத்தைப் பெற்றிருப்பதில்லை. மிகவும் குறுகிய பகுதி, ஆய்வுப் பகுதி எனப்படும். ஆய்வு செய்யப்பட வேண்டிய மாதிரிப் படிவம் இவ்விடத்திலேயே வைக்கப்படுகிறது. இவ்விடத்தில், ஏனைய இடங் களை விடக் காற்றின் வேகம் மிகுதியாக இருக்கும். இந்த மிகுதியான வேகம், ஆய்விற்குப் பெரிதும் உதவியாக உள்ளது. மூடிய-சுற்றுச் (closed-circuit) சுரங்கங்கள். திறந்த சுற்றுச் சுரங்கங்கள் மிகுதியாகப் பயன்படுவதில்லை. முடிய சுற்றுச் சுரங்கத்தில் திறந்த முனைகள் இருப்ப தில்லை. இது தொடர்ச்சியான சுரங்கம்; இதனுள் காற்று சுழன்று கொண்டேயுள்ளது. இக்காற்று, காற்றுச் சுரங்கத்தினுள் ஆய்வு செய்யப்படும் மிகு ஒலி மாதிரிப் படிவம்