576 காற்றுச் சூடேற்றி
576 காற்றுச் சூடேற்றி தோல் சுவாசம், ஒரு செல் உயிரிகள், கடல்பஞ்சு கள். குழியுடலிகள், வளைதசைப் புழுக்கள்,நீர்,நில வாழ் உயிர்கள் போன்றவற்றில் தோல், சுவாச உறுப் பாகச் செயலாற்றுகிறது. இத்தோல் சுவாசம் செய்யும் விலங்குகள் எப்போதும் ஈரமான சூழ்நிலையிலேயே உள்ளன. சுற்றியிருக்கும் நீரிலிருந்து ஆக்சிஜன் மேல்தோலை ஊடுருவி இரத்தத்தை அடைகிறது. சுவாசப் பகுதிகளில் இருக்கும் மயிரிழைகள் ஆக்சி ஜனை உடலுக்குள் செலுத்த உதவுகின்றன. கீட்டாப்டீரஸ் (chaetopterus) நீரிஸ் (neries ) போன்ற கடல்வாழ் வளைதசைப் புழுக்களுக்குப் பக்கக் கால்கள் (parapodia) உள்ளன. இவை காற் றாடி போன்று சுழலும் அமைப்பில் உள்ளன. இவற்றின் சுழற்சியால் தோல் சுவாசம் செய்யும் ஆக்சிஜனைப் போதுமான அளவு இவ்விலங்குகள் பெற்றுக் கொள்கின்றன. முதுகெலும்புள்ள நீர்வாழ் உயிரிகளில் செவுள் சுவாச உறுப்பாகச் செயல்படுகிறது. லாமெல்லி பிராங்க்ஸ், மெல்லுடலி, சிலவகை நண்டினம், மீன் போன்றவற்றில் செவுள்கள் காணப்படுகின்றன. இச்செவுள்கள் இரத்தத் தந்துகிகள் நிறைந்து காணப்படுகின்றன. மீன் இனங்களில் செவுள் உணவுக் குழாயின் முன்பகுதியிலிருந்து உருவாகிறது. எனவே மீன் இனங்களில் உட்செவுள்கள் உள்ளன. இருவாழ் உயிரிகளின் முதல் வளர் பருவத்தில் உடலின் வெளிப் புறத்தில் இவ்வகைச் செவுள்கள் அமைந்துள்ளன. இரண்டும் சுவாசம் என்னும் வேலையையே செய் கின்றன. உடல் கண்ட உறுப்புகளிலிருந்து வளரும் இழைபோன்ற வெளி வளர்ச்சியே நண்டினங்களில், செவுள்களாக உள்ளன. மேலக்கோஸ்ட்ராக்கா. என்னும் இரால் இனத்தில் எப்பிபோடைட்ஸ் (epipodite) என்னும் சிறப்பு உறுப்பு, சுவாச உறுப் பாகச் செயலாற்றுகிறது. பெரும்பாலான நீர்வாழ் பூச்சியினங்களில் செவுள் கள் உள்ளன. இவை இவற்றின் வயிற்றுப் பகுதி யிலோ வால் பகுதியிவோ அமைந்துள்ளன. சுவாசக் குழல் செவுள்கள். ஓடோனேட்டா மற்றும் டிரைக் கோப்டீரா போன்ற பூச்சி வகைகளிலும் சில வகை வண்டினங்களிலும் காணப்படுகின்றன. இவற்றில் இரத்தத் தந்துகிகளுக்குப் பதிலாக மெல்லிய டிரக் கியா அமைந்துள்ளது. மெல்லுடலிகளில் பலவிதமான செவுள்கள் உள்ளன. லாமெல்லிபிராங்க்ஸ் எனப்படும் மெல் லுடலி இனத்தில் இரண்டு ஜோடி டினிடியாக்கள் (denidia) உள்ளன. கைட்டான் எனப்படும் மெல்லுட லிப் பிரிவில் 6-80 வரை செவுள்கள் ஒவ்வொரு பாலி யல் பள்ளங்களிலும் அமைந்துள்ளன. கேஸ்ட்ரோ போடா எனப்படும் வயிற்றுக்காலிகள் பிரிவில் மேன்ட்டில் எனும் மெல்லிய சவ்வால் உருவான பள்ளத்தில் செவுள்கள் அல்லது டினிடியாக்கள் அமைந்துள்ளன. ஆனால் செபலோபோடா எனும் தலைக்காலிகள் பிரிவில் செவுள்கள் பெரிய அளவில் காணப்படுகின்றன. முள்தோலிகளில், உடற்குழி விரல்போல வெளித் தள்ளிக் காணப்படுகிறது. இவ்வுறுப்பின் புறத்தோல், பாப்பில்லே எனப்படும். இதுவே சுவாச வேலையைச் செய்கிறது. முதல் முதுகுநாணிகளில் செவுள்கள் சுவாச உறுப்பாக உள்ளன. ஆம்பியாக் சஸ் என்னும் உயிரியில் 90 ஜோடி செவுள்கள் தொண்டைப் பகுதி யில் காணப்படுகின்றன. சுவாச உண்மையான மீன் இனங்களில் செவுள்கள் மூடப்பட்ட நிலையில் உள்ளன. இவை வாய் மற்றும் செவுள்களின் திறந்து மூடும் அமைப்பில் ஆக்சிஜனை எடுத்துக் கொள்கின்றன. சிலவகை மீன் னங்களில் துணைச் உறுப்புகளும் உள்ளன. இவை செவுள்போலவே பணியாற்றி ஆக்சிஜன் தேவையை நிறைவு செய்கின்றன. மீன் எப்போதும் நீரில் இருப் பதால், நீரிலிருக்கும் ஆக்சிஜன் உடலுக்குள் சென்று, கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றுகிறது. . ஊர்வன, பறப்பன பாலூட்டிகளில் நுரையீரல் கள் சுவாச உறுப்புகளாக உள்ளன. உணவுக்குழலின் வெளித்தள்ளல் அல்லது வெளி வளர்ச்சியே நுரை யீரல்கள் ஆகும். ஆக்சிஜன் செல்லின் உள்ளே செல்லும்போது கார்பன் டைஆக்ஸைடு வெளியேறு கிறது. ஊடுருவுதல் முறையில்தான் இச்சுவாசம் நடக்கிறது. ஆக்சிஜன் நுரையீரலுக்குச் செல்லும் போது, நுரையீரலில் ஆக்சிஜனின் அளவு மிகுதியா கவும் உடலின் செல்லில் குறைவாகவும் உள்ளது. ஆக்சிஜனின் அழுத்தம் உடற்செல்களில் குறைவாக இருப்பதால் ஆக்சிஜன் உடலின் உள்ளே எளிதாகச் சென்று விடும். அப்போது செல்களில் கார்பன் டை ஆக்சைடின் அளவு மிகுதியாகவும் சுற்றுப்புறத்தில் இருக்கும். எனவே குறைவாகவும் ஆக்சைடு செல்லில் இருந்து இரத்தத்தை அடைந்து நுரையீரல் வழியாக வளி மண்டலத்தை அடையும். இவ்வழியாக ஆக்சிஜன் உட்செல்லுதல், கார்பன் டை ஆக்சை வெளியாதல் ஆகிய நிகழ்ச்சிகளால் செல்களில் ஆக்க அழிவுச் செயல்கள் நடக்கின்றன. இச்செயல்கள் நடைபெறச் சுவாசம் இன்றியமை யாததாகும். வ.சந்திரமோகன் காற்றுச் சூடேற்றி ய கார்பன் டை இது ஒரு சூடேற்றும் கருவியாகும். காற்றுச் சூடேற்றி கள் (air heaters) முக்கியமாக அனல் மின் நிலையங் களில் பெருமளவில் பயன்படுகின்றன.