578 காற்று நாட்டப்பூ
578 காற்று நாட்டப்பூ திரும்பப் பெறும் வகைச் சூடேற்றியில் உலோகத் தகடுகள் சுழன்று கொண்டிருக்கும். இந்தத் தகடுகள் அனற்புகை வளிமங்களால் சூடாக்கப்பட்டு, அந்த வெப்ப ஆற்றலை இயற்கை வளிமங்களுக்கு மீண்டும் தருகின்றன. சுழன்று வருவதால் சூடும், குளிர்ச்சியும் உலோகத் தகடுகளை அடையும். இந்தச் உலோகத் தகடுகள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப் பட்டு, ஒரு பகுதியில் அனற்புகை வளிமங்களும், மற்றொரு பகுதியில் இயற்கைக் காற்றும் செலுத்தப் படுகின்றன. சுழலும் நிமிடத்திற்கு 3 முறை வீதம் சுழலும் உலோகத் தகடுகள், ஒரு பாதிச் சுற்றில் சூட்டையும், மறுபாதிச் சுற்றில் குளிர்ச்சியையும் மாறி மாறி அடைகின்றன. அனற்புகை வளிமங்களும் காற்றும் ஒன்றுடன் ஒன்று கலக்காமல் அடைப்பான்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இரண்டு வகைக் காற்றுச் சூடேற்றிகளும் எரி பொருள் சேமிக்கப் பயன்படுகின்றன. ஒரே சூடேற் றும் திறனுக்குச் சேமிப்பு வகைச் சூடேற்றி, பெரிய அளவினதாக இருக்கும். மீண்டும் பெறும் வகை, சிறிய அளவினதாக அமையும். சூடேற்றிகள் பொருத்தப்படும் டம் குறைவாக இருந்தால் மீண்டும் பெறும் சூடேற்றி ஏற்றது. ஆனால் பெறும் வகைச் சூடேற்றிகளில் உலோகத் தகடுகளைச் சுழற்றுவதற்கு மின்னோடி தேவைப்படும். இதற்கு ஆற்றல் செலவாகும். மீளப் சேமிப்பு வகைச் சூடேற்றியை இயக்க மின்னோடி தேவையில்லை. இவ்வகையான சூடேற்றி கள் பெரிதும் பயன்படுகின்றன. சேமிப்பு வகையில் சிறுகுழாய்களுக்குள் அனற்புகை வளிமங்கள் செல்வ தால், அக்குழாய்களுக்குள் அனற்புகை வளிமங்களில் உள்ள பொடிச் சாம்பல் ஒட்டிக் கொண்டு வெப்ப ஆற்றல் கடத்தும் திறனைக் குறைக்கும். எனவே, அக்குழாய்களை அடிக்கடித் தூய்மைப்படுத்த வேண்டும். குழாய்களுக்குள் படியும் சாம்பலை நீக்கு வது எளிது. மேலும், இவ்வகைச் சூடேற்றிகளில் சூடான காற்று அல்லது இயற்கைக் காற்று, குழாய் களின் மேற்பரப்பில் முழுமையாகப் படுவதற்காகத் தடுப்பான்கள் (baffles) பொருத்தப்பட்டுள்ளன. வீர.முத்துவீரப்பன் நூலோதி. Baumeister, A. Avallone, Baumeister III, Marks' Standard Hand Book for Mechanical Engineers, Eighth Edition, McGraw-Hill Book Company, New York, 1978. காற்று நாட்டப்பூ மகரந்தச் சேர்க்கை என்பது ஃபெனிரோகம்ஸ் என்னும் பூக்கும் தாவரங்களின் இனப்பெருக்கத்திற்கு வழி செய்யும் செயலாகும். இத்தாவரங்களில் பெரும் பாலானவை காற்று நாட்ட இனங்களாகும். தனிக் காற்று நாட்டம் அல்லது தனிப் பூச்சி நாட்டம் கொண்ட தாவரங்கள் மிகக் குறைவு. பெரும்பாலான இனங்களில் இரண்டு நாட்டங்களும் சேர்ந்தே காணப்படும். காலூனா போன்ற தாவரங்களில் தொடக்க நிலையில் பூக்களில் தேன் காணப்படுவதால் பூச்சிகள் அவற்றை நாடிச் சென்று மகரந்தச் சேர்க்கை நடத்தும்; பூச்சிகளற்ற நிலையில் தேன் வற்றிய வுடன், இனப்பெருக்க உறுப்புகள் நீண்டு வளர்ந்து காற்று நாட்டத்தில் ஈடுபடுகின்றன. சைக்லேமன் என்னும் தாவரத்தின் பூக்கள் பூச்சி நாட்டத்திற்கு ஏற்ப மகரந்தத் தாள்களின் மீது எண்ணெய் போன்ற பசைப் பொருளைப் பெற்றிருக்கும். பூச்சி நாட்டம் நடைபெறாத சூழ்நிலையில், தூள்களிலுள்ள எண் ணெய்ப் பசை காய்ந்து, தூள்கள் தனித்துக்காற்றின் மூலம் பரவுவதற்கு ஏற்ப மாறிவிடுவதைக் காணலாம். காற்று நாட்ட இனங்கள் ஏறக்குறைய 10,000 இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்த அளவு மொத்த விதைத் தாவரங்களில் பத்தில் ஒரு பங்கா கும். எ.கா: விதை மூடாத் தாவரங்கள், ஓக், பிர்ச் பீச், ஹேசல், ஆல்டர், பாப்லர், வால்நட், மல்பெர்ரி, பனை வகைகள் போன்ற உயரமான பெரிய மரங்கள். வை கூட்டமாகத் தங்களினத்தோடு வளர்வதால் காற்று ராட்டம் நடைபெற முடி கிறது. இந்த மர இனங்களைத் தவிரப் புல்வெளி களிலிருக்கும் புற்கள் சதுப்பு நிலங்களிலுள்ள கோரை கள் வயல்களில் பயிரிடப்படும் தானியங்கள்கூடக் காற்று நாட்ட இனங்களேயாகும். நீர்த்தாவரங் களான வாலிஸ்நேரியா, போடமோஜிடான், ஹைட் ரில்லா போன்றவற்றில் நீர் நாட்டம் என்று கூறி னாலும் அங்கும் காற்றின் பங்கு பெருமளவில் உண்டு. ஆண் பூக்களையோ மகரந்தத் தூள் களையோ நீர்மட்டத்தில் இடப்பெயர்ச்சி செய்யக் காற்று துணை செய்கிறது. காற்று நாட்டத் தாவரங்கள் எதிர்ப்பண்புகள் கொண்டவையாகும். காற்று நாட்டப் பூக்கள் வண்ணமற்றவை மணமற்றவை, தேனற்றவை யாகும். பொதுவாக மலரின் வண்ணம், மணம் முதலியவற்றிற்கு வளர்ந்த மலரிதழ்களே காரண மாகும். ஆனால் மலரிதழ்கள் அவ்வாறு வளர்வது காற்று நாட்டத்திற்குத் தடையாகிவிடும். மேலும் இவற்றால் மலருக்குப் பயன் இல்லை. இம்மலர்களில் மலரிதழ்கள் சிறிதாகவோ, பச்சையாகவோ, மஞ்ச ளாகவோ காணப்படும். அனைத்து வகைக் காற்றும் மகரந்தச்சேர்க்கைக்கு ஏற்றவை என்று கருதவியலாது. மழையோடு கூடிய காற்றும், தவறான திசையில் வீசும் காற்றும் மகரந் தத்தூளின் அழிவிற்குக் காரணமாகலாம். பள்ளத் தாக்குகளில் விடியற்காலையில் வீசும் தென்றல் காற்று, சமவெளிகளில் நடுப்பகலில் மேல் நோக்கி