பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/599

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காற்று நாட்டப்பூ 579

காற்று நாட்டப்பூ 579 பெண் நிலை சல எழும் வெப்பக்காற்று, நெய்தல் நிலத்தில் மாறி மாறி வீசும் கடல் காற்று, நிலக்காற்று, காடுகளில் சலப்போடு வீசும் மென்மையான காற்று முதலியவை பெருமளவில் காற்று நாட்டத்திற்கு ஏற்றவையாகும். அலை அலையாகக் காற்று வீசுவதால் மகரந்தத்தூள் களும் சிறு சிறு கூட்டமாகச் செடிகளிலிருந்து வெளிப் பட்டு மெதுவாகப் பரவுவதைக் காணலாம். காற்று நாட்டப்பூக்கள் மகரந்தத் தூள்களைப் பெருமளவில் காற்றில் பரவ விடுவதால். அந்தக் காற்றே மனிதனின் நலவாழ்விற்கு ஊறு விளைவிக்கும் மூச்சுத் தொடர்பான நோய்களுக்குக் காரணமாகலாம். ஊசியிலைக் காடுகளில் மகரந்தத் தூள்கள் மஞ்சள் நிற மேக மண்டலம் போல் கிளம்புவதை விறகு வெட்டிகள் கந்தக மழை என்று குறிப்பிடுவர். சிறப்புப் பண்புகள். பல்-பருவக் காற்று நாட்ட இனங்கள் பொதுவாக இலையுதிர் காலங்களில் மலரும். ஒரு-பருவப் புல் வகைகளில் மஞ்சரி நீண்ட காம்புடன் இலைகளுக்கு மேலே நீட்டிக் கொண்டி ருக்கும். பொதுவாக இனப் பெருக்க உறுப்புகள் மலர்களில் தனித்தனியாக பிரிக்கப்பட்டோ, அதாவது ஒரு பால் பூக்களாகவோ மாறுபட்ட பருவத்தில் பக்குவமடையும் வகையிலோ அமைந்துள்ளமையால் தன் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவதில்லை, செடி களில் ஆண்பூக்கள் மிகு எண்ணிக்கையிலும் பெண் பூக்கள் குறைந்த எண்ணிக்கையிலும் காணப்படும். ஆண் மஞ்சரி நீண்டு, தொங்கு நிலையில் இருப்ப தாலும் மகரந்தப் பைகள் நீண்ட காம்புகளில் சுழல் அமைப்பில் காணப்படுவதாலும் அவை மலரிதழ் களுக்கு வெளியே நீட்டிக் கொண்டிருப்பதாலும், காற்று அடிக்கும்போது மசுரந்தச் சேர்க்கை எளிதில் நடைபெறுகிறது. . மகரந்தத்தூள்கள் நீரை உறிஞ்சினால் அவற்றின் அ.க8-37அ ட்ரைக்லோசிஸ் ஆண் நிலை மக்காச்சோளம் சூலகமுடி