காற்று நாட்டப்பூ 581
காற்று நாட்டப்பூ 581 ஆண்மலர் மொட்டு மலரும் ஆண்பூ செடியில் ஆண், பெண் பூக்களின் அமைப் பிலும் தனித்தன்மை காணப்படும். பொதுவாக ஆண் பூக்கள் அல்லது ஆண்நிலையிலுள்ள இரு பால் பூக்கள் கீழ்க்கிளைகளிலும், பெண் பூக்கள் அல்லது பெண் நிலையிலுள்ள இருபால் பூக்கள் மேல் கிளைகளிலும் காணப்படும். இதனால் கீழி ருந்து மேல் நோக்கி வீசும் காற்று, ஆ ண் உறுப்பி லிருந்து நீங்கும் தூள்களைச் சூலக முடியில் சேர்க்க முடிகிறது. இவ்வகை அமைப்பைப் புற்கள், ஓக், பிர்ச் முதலிய தாவரங்களில் காணலாம். டைஃபா எனப்படும் சம்பைப் புல்லின் மஞ்சரிக் காம்பில் பெண் பூக்கள் கீழேயும் ஆண்பூக்கள் மேலேயும் அமைந்திருக்கும். ஆனால் மாறுபட்ட காலங்களில் பக்குவமடையும் பூக்களின் அமைப்பு காற்று நாட்டத்திற்கு ஏற்ப இருக்கும். இளம் செடி களில் ஆண்பூக்கள் பக்குவமடைந்து மகரந்தத்தாள்கள் வெளிப்படும் நிலையிலிருக்கும். இச்செடிகளையடுத்து உயரமாக வளர்ந்து முதிர்ந்த செடிகளில் ஆண்பூக்கள் வாடியும், பெண் பூக்கள் நீட்டிய சூலகத் தண்டுடன் மகரந்தச் சேர்க்கைக்கு ஆயத்த நிலையிலுமிருக்கும். காற்று கீழிறங்கி மேல் நோக்கிச் சாய்வாக வீசும் போது இளம் செடியின் ஆண் பூக்களிலிருந்து எடுத்துச் செல்லப்படும் மகரந்தத் தூள் முதிர்ந்த செடியின் பெண் பூக்களை அடையும். காலை வேளையில் சூரியனின் கதிர்கள். நெட்டில் எனப்படும் செந்தட்டி வகைச் செடி களின் மீது விழும்போது, பழுப்பு நிற மேக மூட்டம் எழுவதைக் காணலாம். இதற்குக் காரணம் ஆண் மலர்களில் சுருண்ட நிலையில் வைக்கப்பட்டுள்ள மகரந்தத்தாள்கள் திடீரென்று விடுபடும்போது மகரந்தத்தூள்கள் வெளிப்படுவதேயாகும். மகரந்த தூள்கள் இவ்வாறு விடுபடுவதை வெடி வகை (artillery) என்பர். பைலியா. யானைச் சொரியன் போன்ற செடிகளிலும் இம்முறையைக் காணலாம். பைலியா பெண் பூ விதைமூடாத் தாவரங்களில் சூல்கள் திறந்த நிலையில் இருப்பதால் நேரிடையாகவே காற்று நாட்டம் நடைபெறும், பூக்கும் தாவரங்களில் ரியம் ஆஸ்ட்ரேல் என்னும் சிற்றினப் பூவில் 3 சூலகமுடி களுண்டு. ஆனால் அவை செயல்படுவதில்லை. சூலின் ஒரு பகுதியான நியூசெல்லஸ் சூலுக்கு வெளியே நீண்டு வளர்ந்து மகரந்தத்தூள்களை நேராகவே பெறும் வகையில் அமைந்திருக்கும். ரியம் மகரந்தத்தூள் நியூசெல்லஸ் சூல்முடி மகரந்தச் சேர்க்கைக்குப் பூச்சி, பறவை, நத்தை,நீர், காற்று முதலியன துணை செய் கின்றன. இவற்றில் காற்று நாட்டமே தொன்மை வாய்ந்தது. இதற்கு இரு சான்றுகளுண்டு. விதை மூடாத பூக்கும் தாவரப் பிரிவுகளில் மகரந்தச் சேர்க்கை மூலம் இனப்பெருக்கம் நடைபெறுகின்றது.