பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/602

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

582 காற்றுப்‌ பதிப்பி

582 காற்றுப் பதிப்பி இவ்விரு பிரிவுகளில் விதைமூடா வகை தொன்மை வாய்ந்ததாகும். மேலும் அவற்றில் காற்று நாட்டம் மட்டுமே காணப்படுகிறது. இரண்டாம் சான்று, தொல்பொருள் ஆய்வு சார்ந்ததாகும். தொன்மை யான பூச்சிகளின் வாய்ப் பகுதி உணவைக் கடித்து, அரைத்து உண்ணக்கூடிய வகையாகும். ஆனால் படிமலர்ச்சியில் பின்தோன்றிய பூச்சிகளின் வாயுறுப்புகள் உறிஞ்சும் வகையைச் சேர்ந்தவை யாகும். அதனால் பூக்களிலிருந்து தேன். சாறு போன்ற நீர்மங்களை உறிஞ்சியுண்ணும் பண்பு படிமலர்ச்சியின் பின்தோன்றியதாக இருக்க வேண்டு மெனத் தெரிகிறது. இவ்விதக் கருத்துகள் இருந்த போதும் படிமலர்ச்சியால் முன்னேறிய குடும்பங் களான சைபிரேசி போயேசி முதலியவற்றில் காற்று நாட்டமே காணப்படுகிறது. காற்று நிலையியல் தி. ஸ்ரீகணேசன் புவியீர்ப்பு விசையின் உந்துதலுக்கு மட்டுமே உட் பட்ட வளிமங்கள், அவற்றுள் மூழ்கியிருக்கும் திண்மப் பொருள்கள் இவற்றின் நிலைச்சமன்பாட்டைப் பற்றிய அறிவியல் பிரிவு காற்று நிலையியல் (aerosta- tics) ஆகும். காற்று நிலையியல் வளிமங்களின் எடை யையும், அவற்றுள் மூழ்கியிருக்கும் திண்மப்பொருள் களின் எடையையும் பெரிதும் சார்ந்துள்ளது. ஆர்க்கி மிடிஸின் தத்துவத்தின் படி ஒரு பொருளின் மீது ஏற் படும் மிதப்பு விசையானது அதனால் விலக்கப்படும். நீர்மம் அல்லது வளிமத்தின் எடைக்குச் சமமாகும். வானிலையியலின் (meterology) படிகளும் (phases), பலூன் மற்றும் திசைவழி நடத்தப்படும் பலூன்களின் பறப்புகளும் காற்று நிலையியலை அடிப்படையாகக் கொண்டவை. சில வானிலையியலில் மேகம் மற்றும் பனி வீழ்படிவு களின் (fog subsidence) வானிலை அழுத்தம், வெப்ப நிலை ஆகியவை வானிவை உயரத்துடன் கொண் டுள்ள தொடர்பு காற்று நிலையியலின் தத்துவத்தி லிருந்து ஊகிக்கப்படுகிறது. உண்மையில், காற்று மற்றும் அதனுள் மூழ்கியுள்ள பொருள்கள் அசை வற்றிருக்க வேண்டுமென்பது காற்று நிலையியலின் அடிப்படைத் தேவையாகும். ஆனால் அது பொது வாக யலாது. அவ்வாறு அசையும் பொருளகளைக் காற்று இயங்குவிசை கட்டுப்படுத்தினாலும், அப் பொருள்களின் இயக்கம் காற்று நிலையியலையும் சார்ந்துள்ளது. எடுத்துக்காட்டாகக் காற்று வெளியில் புவி அசைவின் காரணமாகக் காற்று வீச்சும் சுழலும் இருந்தாலும் காற்றின் உயரத்திற்கும் அழுத்தத் திற்கும் இடையே உள்ள தொடர்பும் காற்று நிலையியலின் முதற்படியால் அறுதியிடப்படும். தி.அ. சங்கர் நூலோதி. A.C. Kermode, Mechanics of flight, Himalayan Books, New Delhi, 1982. காற்றுப் பதிப்பி பல்வேறு பயன்தரக்கூடிய காரணங்களுக்காகக் • காற்றைக் குழாய் போன்ற அமைப்புகள் வழியே ஒழுங்குபடுத்தி ஒரு குறிப்பிட்ட இடத்தை வெப்பப் படுத்தவோ குளிர்விக்கவோ, சற்றே விசையுடன் செலுத்த வேண்டியுள்ளது. அந்தப் பகுதியின் அமைப்பு, பரப்பு, வடிவம், குளிர்காற்று சுழன்று செலுத்தப்பட வேண்டிய இடம் ஆகியவற்றைப் பொறுத்துக் காற்றுச் செலுத்தப்படும் குழாய் அமைப்புகள் பல வகையாகத் திட்டமிடப்பட்டி ருக்கும். இத்தகைய காற்றுச் செலுத்தி அமைப்புகள் காற்றுப் பதிப்பி (air register) என்று கூறப்படும். பொதுவாக ஒழுங்குபடுத்தப்பட்ட காற்றைக் குறிப் பிட்ட வகையில் தாரைச் (jet) செலுத்தமாகச் செலுத்துவதற்கான அமைப்பைக் காற்றுப் பதிப்பி என்று கொள்ளலாம். ஆனால் விரவி (diffuser) என்று குறிப்பிடும்போது அந்த அமைப்பு, காற்றைப் பரவ பகுதியிலும் செலுத்துகிறது. இத்தகைய அமைப்புகள் அறைகளின் பல இடங்களிலும் பொருத்தப்படலாம். தரையிலோ பக்கச் சுவர்களின் மேற்பகுதியிலோ கீழோ (தரைக்கு அருகிலோ) உத்திரத்திலோ சன்னல்களுக்கு மேற்பகுதியிலோ அமைப்பர். லான காற்றுப் பயன்படும் விதத்தைப் பொறுத்து மேற் கூறியவாறு பொருத்தப்படும் இடங்கள் வேறுபட லாம். அறை வெப்பப்படுத்தப்பட வேண்டியிருந்தால் இத்தகைய காற்றுச் செலுத்த அமைப்புகளைத் தரை விரிப்புப்பலகையின் (base board) சன்னல் களுக்குக் கீழே அல்லது சுவர்களின் அடிமட்டப்பகுதி யில் அமைப்பதுண்டு. குளிர்விக்கப்படவேண்டிய அறைகளில் இத்தகைய அமைப்புகள் சுவரின் மேற் பகுதியில் அல்லது உத்திரங்களில் (beam) பொருத்தப் படுவதுண்டு. காற்றுப்பதனாக்கப்படும் (air condition) வீடுகளில் இத்தகைய காற்றுச் செலுத்தி அமைப்பு களைத் தரைக்கு அருகில் சுவரில் அமைப்பர். மேலும் சற்றே திசைவேகத்துடன் காற்று மேல்நோக்கி செலுத்தப்படக்கூடிய வகையிலும் இது அமைந்து ருக்கும். இத்தகைய காற்றுச் செலுத்தி அமைப்பில் பொருத்தப்பட்டிருக்கும் குழல்கள் காற்றுச் சுழற்சி வேண்டும் இடத்தில், திசையில், திசைவேகத்தில் சுவரை விட்டு வெளியேறும் வகையில், இடர்ப்பாடு களை விட்டும் வெளியேறிப் பயன்தரும் வண்ணம் இருக்கும். இத்தகைய அமைப்புகளில் காற்றுச் செலுத்தத் திசையையும் வெளியீட்டு அளவையும்