584 காற்றுப் பை (கடலியல்)
584 காற்றுப் பை (கடலியல்) செஞ்சுரப்பியும் (red glands) கொண்ட கீழ் முன் சுரக்கும் பகுதி (antero ventral secretory region). நீள் வட்ட அறை (oval) என்ற உறிஞ்சும் பகுதியைக் கொண்ட பின் மேல் பகுதி (posterodorsal region). காற்றுப் பைக்கு இரத்தம் அளிக்கும் முறையி லிருந்து அதன் வளர்ச்சி, பணி ஆகியவற்றைப் பற்றிய சில தகவல்களைத் திரட்டமுடியும். பாலிப்டிரஸ், டிப்னாய் ஆகிய மீன்களில் கடைசி மூச்சு வளைவு களிலிருந்து 6th branchial arch) புறப்படும் ஒரு நுரையீரல் தமனி மூலம் ஆக்சிஜனற்ற இரத்தம் வந்து சேர்கிறது. இங்கிருந்து நுரையீரல் சிரை வழியாக இரத்தம் இதயத்திற்குத் திருப்பி அனுப்பப் படுகிறது. இந்த முறைதான் ஏமியாவிலும் (Amia காணப்படுகிறது. ஆனால் ஏனைய ஆரைத்துடுப்பு மீன்களில் (actinopterygii) மேல் தமனியிலிருந்து ஆக்சிஜன் உள்ள இரத்தமே அளிக்கப்படுகிறது. இதிலிருந்து சுவாசித்தலே காற்றுப்பையின் முதன்மை யான பணி என்றும், இப்பணி பல மீன்களில் காணப் படுகிறது என்றும் கருதப்படுகிறது. ஆனால் இக் காற்றுப்பை எலும்பு மீன்களின் மேற்புறத்தில் காணப்படுவதாலும், மூடிய குழாய் இருப்பதாலும், அதற்கு ஆக்சிஜன் உள்ள இரத்தம் அளிக்கப்படுவ தாலும் இதற்கு வேறு பல பணிகளும் உண்டு எனலாம். ஃபைசோஸ்டோம் (physostome! மீன்களில் காற்றுப்பைக்கு, உடற்குழிக் குடல் தாங்கித் தமனியி லிருந்து ஒரு கிளை வழியாக இரத்தம் அளிக்கப் பட்டு, கல்லீரல் போர்ட்டல் மண்டலம் வழியாக இதயத்திற்குத் திருப்பியனுப்பப்படுகிறது. ஃபைசோ கிளிஸ்டஸ் மீன்களில் காற்றுப்பையின் சுவர் போன்ற பகுதியும். ரெட்டீயா மிராபிலியா (retia mirabilia) ஆகியவற்றுடன் உடற்குழிக்குடல் தாங்கித் தமனியும் சுல்லீரல் போர்ட்டல் மண்டலத்தின் ஒரு சிரையும் தொடர்பு கொள்கின்றன. மேல் மூலத் தமனியின் விலா இடைக்கிளைகளின் (inter costal branches) மூலமாக நீள்வட்ட அறை, பைச்சுவர் ஆகிய பகுதி களுக்கு இரத்தமளிக்கப்பட்டுப் பின் கார்டினல் சிரை வழியாக அது இதயத்தை அடைகிறது. உடற்குழிக் குடல் தாங்கி செல்திறனிலிருந்து ஒரு கிளை வழியாகப் பரிவு நரம்பு மண்டலத்தால் (sympathetic) காற்றுப்பைக்கு, நரம்பூட்டம் அளிக்கப் படுகிறது. மேலும் இட வலக்குடல் அலையும் நரம்பு களின் (intestinal vagus nerve) கிளைகளையும் காற்றுப்பை பெறுகிறது. ஒலி எழுப்பும் பணியில் ணைந்து நிற்கும் வரித்தசைகள் தண்டுவட நரம்பையும் பெறுகின்றன. காற்றுப்பையின் முக்கியமான பணிகளிலொன்று, நீருக்குள் தன்னை நிலைப்படுத்தும் திறனாகும். மீனின் ஒப்படர்த்தி அல்லது வீத எடை நீரைவிடக் கூடுதலாகும். காற்றுப்பையை நிரப்பிக் கொண்டிருக் கும் வளிம அளவில் உண்டாக்கப்படும் மாற்றம் அதன் கன அளவில் மாற்றமுண்டாக்க இது மீனின் ஒப்படர்த்தியைக் கூட்டவோ, குறைக்கவோ செய் கிறது. இத்தகைய காற்றுப்பை ஒன்றைக் கொண்டி ருக்கும் மீன், ஒரு குறிப்பிட்ட நீர்மத்தில் தன்னை இருத்திக்கொள்ள இயலுகிறது. மீன் ஒரு குறிப்பிட்ட நீர் மட்டத்தினின்று ஒரு மீன் கீழ்நோக்கிச் செல்லும்போது அந்த மீனின் மேலுள்ள நீரின் அளவு கூடுதலாகிறது. மீனின் உடல் மேல் இந்நீரால் ஏற்படும் அழுத்தம் கூடுகிறது. அவ்வாறே காற்றுப்பையின் மேல் உண்டாகும் நீரின் அழுத்தமும் கூடுகிறது. இதன் விளைவாகக் காற்றுப்பையின் கன அளவு குறைக்கப்படுகிறது. இறுதியில் மீனின் ஒப் படர்த்தியில் மாற்றம் ஏற்படுகிறது. அதாவது நீரின் ஆழத்திற்குச் செல்லச் செல்ல அதன் உடல் எடையும் அதிகரிக்கிறது. மேல் மட்டத்தை நோக்கி மீன் செல்லும்போது, இதற்கு நேர்மாறான மாற்றங்கள் இடம் பெறுகின்றன. அதாவது நீரின் அளவு குறைய அதனால் உண்டாகும் அழுத்தமும் குறைகிறது. இந்தக் கொள்கையைப் பின்பற்றியே காற்றுப்பை செயல்படுகிறது. காற்றுப்பையில் அடங்கி யுள்ள வளிம அளவைக் கூட்டுவது அல்லது குறைப் பதால் காற்றுப்பையின் கன அளவில் மாற்றங்கள் ஏற்படும். ஃபைசோஸ்டோம் மீன்களில், காற்றுக்குழாயின் உதவியால் காற்றை உட்கொள்ளவோ, வெளி யேற்றவோ முடிகிறது. இக்காற்று ஒரு விசையுடன் காற்றுப்பைக்குள் செலுத்தப்படுகிறது. ஆனால் காற்றுப்பையை நிரப்ப வேண்டியுள்ளது. கார்ப் (carp) கெளுத்தி (carfish), குளுப்பீடு (ciupeids) ஆகிய கீழின மீன்களில் இத்தகைய நிலையைக் காணலாம். நீரின் மேல்மட்டத்திற்கு வாராமல் நீரினடியில் ருக்கும்போதே காற்றுப்பையில் ஆக்சிஜன் நிரப்பக் கூடிய நிலை இரண்டாம் வகையாகும். விலாங்கு (esl) மீன்கள் போன்ற இவ்வகையைச் சார்ந்தவை. நீரிலுள்ள ஆக்சிஜன் செவுள்களால் ஈர்க்கப்பட்டு இரத்த ஓட்டத்தால் காற்றுப் பையின் சுவரிலுள்ள செஞ்சுரப்பி எனப்படும் தந்துகிகளின் தொகுப்பிற்குச் செலுத்தப்படும். பின்னர் ஆக்சிஜன் சுரக்கப்பட்டுக் காற்றறையினுள் செலுத்தப்படுகிறது. இம்முறையால் மீன் மேல் நோக்கிச் செல்லும்போதும் கீழிறங்கும் போதும் தன்விகித எடையைச் சரியான அளவில் சீர்படுத்த முடியும். கூடுதலான வளிமம் காற்றுக்குழல் வழியாக வெளிச் செல்ல முடியும். அதனால் அவ்வப் போது மீன் நீரின் மேல் மட்டத்திற்கு வர வேண்டிய தேவையும் இல்மாமற் போகிறது. ஃபைசோக்கிளிஸ்டஸ் அல்லது மூடியிருக்கும் மிதவை உறுப்பே சிறந்த மிதவை உறுப்பாகக் கருதப் படுகிறது. இது பெரும்பான்மையான மீன்களில் காணப்படுகிறது. செஞ்சுரப்பியோடு கூடுதவாக