பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/606

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

526 காற்று மண்‌ காப்புத்திரை

586 காற்று மண் காப்புத்திரை உராய்வதால் உண்டாகும் ஒலியை மிகைப்படுத்திக் காட்டும் ஒலிபெருக்கியாகக் காற்றுப்பை செயல்படு கிறது. பல மீன்களில் காற்றுப்பையின் காற்றுக்குழல் வழியாக வளிமக்குமிழ்கள் வெளியேறும்போது ஒலி எழுப்பப்படுகிறது. ஐரோப்பிய விலாங்கிலும் டீரியோ பைஸி மீன்களிலும் அமெரிக்க விலாங்கிலும் இவ்வாறு ஒலி எழுப்பப்படுவதாக அறியப்பட்டுள்ளது. ஆஸ் வலிமை சில கெளுத்தி மீன்களில் காற்றுப்பைச் சுவர், சுருங்கிமிளும் சுருள் உறுப்பால் (elastic spring appare- tus) அதீர்வைப் பெற்று ஒலி எழுப்புகிறது. நான்காம் முள்ளெலும்பின் குறுக்கு நீட்சி மருவலாலே இச் சுருள் உறுப்புத் தோன்றியுள்ளது. இது பின்புறம் காற்றுப்பைச் சுவருடனும், முன்புறம் மிகுந்த தசையால் மண்டை யோட்டின் பின்பகுதி யுடனும் ணைக்கப்பட்டுள்ளது. பிற கெளுத்தி மீன்களில் பறைத் தசைகள் (drumming muscles) நேராக மண்டை ஒட்டிலிருந்து காற்றுப்பைச் சுவருக் குச் செல்லும். ஒலி எழுப்பும் தசைகள் பொதுவாக வரித்தசைகளே ஆகும். இவை தண்டுடை நரம்பால் நரம்பூட்டம் பெற்றவை. காற்றுப்பைக்கும், செவி களுக்குமிடையே தொடர்புள்ள மீன்களால் 7000- 10,000 அலைவு எண் கொண்ட ஒலியைக் கேட்க முடிகிறது. க இவ்வாறு எழுப்பப்படும் ஒலி ஒரு மீன் மற்றொரு மீனுடன் தொடர்பு கொள்வதற்காகவும். இனப் பெருக்கக் காலத்தில் காலத்தில் குறிப்பிட்ட முக்கியத்துவம் கொண்டதாகவும் தற்காப்புக்கோ தாக்குதலுக்கோ பயன்படக்கூடியதாகவும் இருக்கும். சயானீடுகள் (sciaenids) வைகறையிலும், அந்திப்பொழுதிலும் பாடல் (chorns) ஒலி எழுப்பும் இயல்புடையன. தேரை மீன்கள் இனப்பெருக்கக் காலங்களில் துணையை அழைக்க ஒலி எழுப்புகின்றன. ஆழ்நீர் மீன்களில் அழைப்பொலியைத் தொடர்ந்து ஓர் எதிரொலி கேட்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே மீன்கள் எதிரொலி உண்டாக்கும் ஓர் அமைப்பைப் (echo sounding system) பயன்படுத்திக் கொள்கின்றன. இவற்றில் நீர்ம நிலைப்படுத்துதலே முக்கியமான பணியாகும். எனவே சுறுசுறுப்பான நடுநீர் நீந்தி களில் இந்நீந்தும் பை சிறப்பாக வளர்ச்சி பெற்றுக் காணப்படுகிறது. மலை ஓடைகளிலும், வேகநீர் ஆறுகளிலும் வாழும் மீன்களில் இவ்வுறுப்புக் காணப் படவில்லை. கடலின் தாழ்ந்த கரையோரப் களில் வாழும் மீன்களும் காணப்படுகின்றன. பகுதி காற்றுப்பை அற்றே ஃபைசோஸ்டோம்கள் நன்னீரில் மிகுதியாகவும் கடலின் நெரிட்டிக் (neritie- zone) பகுதியில் குறைவாகவும் காணப்படும் ஆழ் நீரை முற்றிலும் குடியிருப்பாகக் கொள்ளவும் மேற்பரப்பிற்கு அடிக்கூடி சென்று வளிமத்தை நிரப்பிக் கொள்ளும் தொல்லையிலிருந்து விடு படவுமே காற்றுப்பை மூடப்பெற்று, வளிமச் பை மூடிய சுரப்பியும் ரிட்டியாமிராபிலியாவும் படிமலர்ச்சியின் போது தோன்றத் தொடங்கின. மூடப்பட்ட காற்றுப் கொண்ட மீன்கள், ஓர் ஆழத்திலிருந்து மறு ஆழத்திற்குச் செல்லும்போது வேகம் குறைந்துவிடும். மிக ஆழமான நீரில் வாழும் மீன்களில் பையுள் வளிமத்தைச் சுரத்தலுக்கு மிகு ஆற்றல் தேவைப்படுகிறது. ஆகவே இது ஓர் எளிய முறை ஆகாது. எனவேதான் இம்மீன்களில் காற்றுப்பை முற்றிலும் மறைந்தோ கொழுப்புச் சேர்த்து வைக்கப் படும் ஒரு தொகுப்பு உறுப்பாகவோ மாறியிருக்க லாம். காற்று மண் காப்புத்தினர 4 கீதா பால் பயிர்வளர்ச்சியைக் கட்டுபடுத்தக்கூடிய பல காரணி களில் காற்று மிக முக்கியமானதாகும். காற்று. பயிரின் நுண் காலநிலையைப் பாதிப்பதோடு மட்டு மல்லாமல், சில சமயங்களில் பயிரை வேரோடு சாய்த்தும் அழித்துவிடுகிறது. புயல் காற்று, பெரிய மரத்தைக்கூட மண்ணோடு மண்ணாகச் சாய்த்து விடும். பயிர் வளர்க்க முடியாத சூழ்நிலையில் உழுத நிலம் புழுதியாக இருக்கும்போது வளமாள நிலம் காற்றால் பாழ்படுகிறது. எனவே காற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்த உறுதியாக வளரக்கூடிய வலிவான மரங்கள் வயல் ஓரங்களிலும், மண் அரிப்பு மிகுந்துள்ள சமவெளிகளிலும் வரிசையாக நடப்படுகின்றன. இம்மரங்களையே காற்றுமண் காப்புத்திரை (shelter belt) என்பர். இது பல வழி களில் காற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்திப் பயிர் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளது. நுண்காலநிலை. காற்றுமண் காப்புத் திரை பயிரின் நுண்காலநிலையைப் பாதுகாக்கிறது. பயிர் வளர்ச்சிக்கும் விளைச்சலுக்கும் நுண்கால நிலை மிக முக்கியமானதாகும். பயிரின் தட்பவெப்பநிலையும். வளிமண்டலமும் மிகு வேகமுள்ள காற்றால் பாதிக்கப்படும். தற்போது வளி மண்டலத்தில் 0.035% கார்பன் டைஆக்சைடு உள்ளது. ஆனால் மிகுதியான காற்று இச்சூழ்நிலையை மாற்றுகிறது. பயிரின் வெப்பநிலை மிகுதியாகிறது. பயிரின நீராவிப்போக்கும் மிகுந்து, பயிர் மிகு விரைவிலேயே வறட்சிக்கு உள்ளாகிறது. ஆனால் வயலோரங்களில் மரங்களை நட்டுக் காற்றுக்குத் திரை ஏற்படுத்துவ தால் பயிரின் தட்பவெப்பநிலையும் நீராவிப்போக் கும் குறைந்து பயிர்கள் நீரைப் பயன்படுத்தும் திறன் மிகுதியாகிறது. காப்புத்திரைக்கு ஏற்ற மரங்கள் காப்புத்திரை மரங்களை, காற்றின் திசை, வேகம் இவற்றைப் பொறுத்து நடவேண்டும். முந்திரி, சவுக்கு, வாகை,