பக்கம்:அறிவியல் களஞ்சியம் 8.pdf/610

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

590 காற்று மெத்தை ஊர்தி

590 காற்று மெத்தை ஊர்தி விரிவடையும்போது நோயாளிக்குக் கடுமையான தலைவலி, வாந்தி முதலியன ஏற்பட்டு நோயாளி மயக்கமுறவும், உயிருக்கே தீங்கு விளையவும் வாய்ப் புண்டு. மூளைப் பகுதிகளுள் காற்றைச் செலுத்து முன், அப்பகுதிகளிலிருந்து தண்டுவட நீரை (cerebro spinal fluid) ஓரளவு வெளியேற்ற வேண்டி வரும். இவ்வாறு நீர் வெளியேற்றப்படுவதாலும், இந்நீரை வெளியேற்றும் பொருட்டு மூளை தண்டுவடப் பகுதிகளுள் செலுத்தப் பெறும் ஊசிகளாலும் நோயாளிக்கு இரத்தக் கசிவு. மூளைச்சிதைவு போன்ற பெருந்தீங்குகள் விளையலாம். மூளைப் பகுதிகளுக்குள் செலுத்தப்படும் காற்று நுண்ணுயிர்களும் உட்புகுந்துவிட்டால் மூளை அழற்சி, மூளைக் காய்ச்சல் போன்றவை தோன்ற நோயாளிக்குப் பெருந்தீங்கு விளைய வாய்ப்புண்டு. நீர் நிறைந்த பகுதியுள் செலுத்தப்பட்ட காற்று நீரைவிட அடர்த்தி குறைந்ததாகவும் எடை குறைந்த தாகவுமிருப்பதால் அது மேல்நோக்கி நகரும். எனவே, முதுகுப் பகுதியில் ஊசி செலுத்தித் தண்டுவட நீரினுள் காற்றைச் செலுத்தும்போது நோயாளியின் தலைப்பகுதி உடலை விட உயரமாக இருக்குமாறு வைத்துக் கொண்டால் (நோயாளி உட்கார்ந்த நிலையிலிருந்தால்) முதுகுப் பகுதியில் செலுத்தப் பட்ட காற்று மெல்ல மேலெழுந்து தலையுள் புகுந்து மூளையைச் சூழ்ந்து பரவுவதோடு மூளையிலுள்ள நீரறைகளின் (ventricles) உள்ளும் புக வாய்ப்புண்டு. எனவே மூளைப் பகுதிகளைக் காற்றைக் கொண்டு படமெடுக்க வேண்டுமென்றால் மூளையினுள்ளேயே ஊசி செலுத்த வேண்டிய இன்றியமையாமை இல்லாமல் முதுகில் ஊசி செலுத்தியே எடுக்கக்கூடிய எளிய நிலை உள்ளது. இத்தகைய உண்மைகளின் அடிப்படையில் கடைப்பிடிக்கப்பட்ட இவ்வரைபடமுறை ஏறத்தாழ 60 ஆண்டுகள் வரை உலகெங்கிலும் பயன்படுத்தப் பட்டது. ஆனால் அண்மைக்காலத்தில் மூளையாழக் கணிப்பொறிப் படமுறை (C.T. scan) வந்ததும். சிக்கல் மிகுந்த காற்று மூளை வரைபடமுறை பெரும் பாலும் கைவிடப்பட்டுவிட்டது. குறித்த சில வேளை களிலும், சில நுண் அறுவையிலும் இம்முறை பயன் படுத்தப்படுகிறது. கா. லோசுமுத்துக்கிருஷ்ணன் நிலத்திலிருந்து மேலெழச் செய்கிறது. பிறகு இவ்வூர்தி தாரை (jet) அல்லது கப்பலின் இயக்குறுப்பு அல்லது விமானச் சுழல் விசிறியால் (propeller) செலுத்தப்படு கிறது. ஊர்திக்கும், அது செல்லும் பரப்புக்குமிடையே உள்ள குறைவான உராய்வே இவ்விதமான காற்று மெத்தை ஊர்திகளால் ஏற்படும் நன்மையா கும். காற்று மெத்தை ஊர்திகள் (air cushion vehicles) நிலத்தின் மீதும். கடலின் மீதும் ஒரே அளவான எளிய தன்மையுடன் இயங்குகின்றன. காற்று மெத்தை ஊர்திகள் முதன்முதலில். சர் கிறிஸ்டோஃபர் காக்கரெல் என்பாரால் இங்கிலா லாந்தில் உருவாக்கப்பட்டன. அவை 1959ஆம் ஆண்டு ஆங்கிலக் கால்வாயில் செலுத்தப்பட்டன. பின்னர். இன்று வரை அவை நிலத்திலும் நீரிலும் செலுத்தப் பட்டு வருகின்றன. ஊர்திகளின் காற்று மெத்தை, வளிமக்குழாய் போன்றுள்ளது. ஆனால் காற்று மெத்தை அமைப்பிலிருந்து காற்று, தொடர்ச்சியாக வெளியேறிக் கொண்டுள்ளது. இவ்வாறு வெளியேறும் காற்று ஆற்றல்மிக்க விசிறிகளால் அகற்றப்படுகிறது. இக்காற்று மெத்தை பல வழிகளில் உள்ளடக்கப்படு கிறது. கலத்தின் அடிப்பகுதியைச் சுற்றி உறுதியான தாங்கும் அமைப்பு அமைக்கப்படுகிறது. ஆனால் இவ்வமைப்பு நிலப்பரப்பின் மீதோ, நீர்ப்பரப்பின் மீதோ பட்டு உராய்வை உண்டா டாக்குகிறது. மற்றொரு முறையில் இவ்வமைப்பு ஆற்றல் கீழ்நோக்கிய காற்றுத் தாரைகளால் உருவாக்கப்படு கிறது. இது காற்று மெத்தையைச் சுற்றித் திரை போல உள்ளது. இக்காற்றுத் தாரை, காற்று மெத்தை ஊர்தி எவ்வளவு உயரத்தில் பறக்க வேண் டும் என்பதைத் தீர்மானிக்கிறது. ஆனால் ஊர்தி நிலத்திலிருந்தோ. நீர்ப்பரப்பிலிருந்தோ உயரே செல்லச் செல்ல இக்காற்றுத் தாரைத் திரையீன் (jet curtain) திறன் குறைகிறது. காற்று மெத்தை ஊர்தி மெத்தை பாலப் பரவியுள்ள காற்றில் செல்லும் ஊர்திகள் மிதக்கும் ஊர்திகள் (hover craft) எனப் படும். ஒரு விசிறியின் மூலமாகக் காற்றை அழுத்திக் குமிழ் (bubble) வடிவமாக மாற்றுவதால் இம் மெத்தை உருவாக்கப்படுகிறது. இக்குமிழ், ஊர்தியை படம்1